மேய்த்துப்பேணுதல்

திரட்டு 4

ஆவியானவரும்
ஜீவனும்

பாடம் இரண்டு – வேதம் வாசித்தல்

எபே. 1:17—நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானம் மற்றும் வெளிப்பாட்டின் ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும் (கிரே.).

கொலோ. 3:16—கிறிஸ்துவின் வார்த்தை உங்களுக்குள்ளே சகல ஞானத்தோடும் ஐசுவரியமாக வாசமாயிருப்பதாக (கிரே.).
ஒரு விசுவாசி ஜெபிக்க வேண்டும்; அவன் வேதம் வாசிக்கவும் வேண்டும். ஜெபம் சுவாசித்தலுக்கு ஒப்பானது, வேதம் வாசித்தல் புசித்தலுக்கு ஒப்பானது. இவ்விரண்டும் ஒவ்வொரு விசுவாசியாலும் தினமும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

வேதத்தின் ஆதிமூலம்

தேவனே வேதத்தின் ஆதிமூலம்; வேதவாக்கியங்களை எழுதியவர்களுக்குள்ளும், அவர்களிலிருந்தும் தம் ஆவியானவர்மூலம் தம் வெளிப்பாட்டின் வார்த்தைகளைச் சுவாசித்து ஊதியவர் தேவனே [2 தீமோ. 3:16]. அவ்வாறு சுவாசித்து ஊதப்பட்டது வார்த்தைகள் மட்டுமல்ல, ஆவியும் கூட.
வேதம், தேவனின் ஆவியின்மூலம் மனுஷர்- களிலிருந்து தேவன் தம் வார்த்தைகளைச் சுவாசித்து ஊதுவதாக இருப்பதால், இது மனிதர்கள் தாங்கள் பரிசுத்த ஆவியால் ஏந்திச்செல்லப்படுகையில் தேவனுடைய வார்த்தையைத் தேவனிடமிருந்து பேசுதலாகும் (2 பேது. 1:21). எனவே, வேதம் தேவனுக்குள்ளிருந்து வந்ததும், தீர்க்கதரிசிகள், தலைவர்கள், இஸ்ரயேலர் மத்தியிலிருந்த இராஜாக்கள் போன்ற குறிப்பிட்ட பழைய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் மற்றும், அப்போஸ்தலர்கள், மாற்கு, லூக்கா போன்ற பல்வேறு புதிய ஏற்பாட்டு பரிசுத்தவான்கள் ஆகியோரால் எழுதப்பட்டதுமாகும்.

வேதத்தின் உள்ளடக்கம்

வேதத்தின் உள்ளடக்கம் பரந்தகன்றதாகவும் உள்ளடக்கியதாகவும் இருக்கிறது; இந்த உள்ளடக்கத்தின் இரண்டு முக்கிய அம்சங்கள் சத்தியம் மற்றும் ஜீவன். சத்தியமானது, தேவனின் நிஜம், மனிதனின் நிஜம், இப்பிரபஞ்சத்தின் நிஜம், அதோடு தற்போதைய யுகம், வருகின்ற யுகம், மற்றும் நித்திய யுகத்துக்குரிய காரியங்களின் நிஜம், மேலும் குறிப்பாக, தேவனால் நியமிக்கப்பட்ட கிறிஸ்து மற்றும் அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட சபையின் நிஜம் போன்ற இந்தப் பிரபஞ்சத்திலுள்ள எல்லா நிஜங்களின் வெளிப்பாட்டையும் அறிவையும் நமக்குக் கொண்டுவருகிறது. ஜீவன் என்றால், நாம் மறுபடி ஜெநிப்பிக்கப்பட்டு, வளர்ந்து, மறுசாயலாக்கப்பட்டு, தேவனின் வெளியாக்கமாகும்படி, தேவனை வெளிக்காட்டுகிற கிறிஸ்துவின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படும்படி நம் ஜீவனாக வரும் தேவனே.

உமது [பிதாவாகிய தேவனின்] வார்த்தையே சத்தியம் [நிஜம்] (யோ. 17:17). கர்த்தராகிய இயேசுவின் இந்த வார்த்தை, வேதத்திலுள்ள தேவனின் வார்த்தை சத்தியம் என்று சுட்டிக்காட்டுகிறது; இது நாம் அடைவதற்கான தேவனின் நிஜத்தையும், அவரது பொருளாட்சியின் நிஜத்தையும் வெளிப்படுத்துகிறது.
நடபடிகள் 5:20இல் தேவதூதன் பேதுருவிடம் பேசி, தேவனுடைய ஜீவ வார்த்தைகளைப் பிரசங்கிக்கும்படி அவனுக்குக் கட்டளையிட்டான். ஜீவ வார்த்தைகள், அப்போஸ்தலர்கள் பிரசங்கித்த, வேதத்தின் வார்த்தைகளாகும். இந்த வார்த்தைகள் ஜீவனை உள்ளடக்கியிருப்பதால், அவை ஜீவனை வழங்கக் கூடியவையாகும், இந்த ஜீவன் தேவனே. வேதத்தின் முக்கியமான உள்ளடக்கம் சத்தியம் மட்டு- மல்ல ஜீவனும்கூட என்பதை இது நிரூபிக்கிறது. (ஜீவ பாடங்கள், திரட்டு 1, பப. 29-30)

வேதத்தை வாசிப்பது எப்படி

வேதம் தேவனுடைய வார்த்தையாக இருப்பதால், அதின் சுபாவம் தெய்வீகமாகவும் ஆவிக்குரியதாகவும் இருக்கிறது. நம் ஆள்தத்துவத்தின் ஒவ்வொரு பகுதியைக் கொண்டும் நாம் அதை வாசிக்க வேண்டும்.

முதலாவது, புரிந்துகொள்ளுதலோடு அதை வாசித்தல்

வேதம் வாசிப்பதில், நாம் மனித மொழியில் எழுதப்பட்டிருக்கிற அதின் உரையைப் புரிந்துகொள்ளவும், அதன் அர்த்தத்தை அறிந்துகொள்ளவும் முதலில் நம் மனதின் புரிந்துகொள்ளுதலை பயன்படுத்த வேண்டும் (லூக். 24:45).

அடுத்து, ஞானத்தோடு அதை வாசித்தல்

வேதத்தில் தேவனால் வெளிப்படுத்தப்பட்டுள்ள தெய்வீகக் காரியங்களைப் பற்றிய வார்த்தையை நாம் ஞானத்தோடு புரிந்துகொள்ள வேண்டும் (கொலோ. 3:16). எபேசியர் 1:17, ஞானம் நம் ஆவியோடு இணைக்கப்பட்டிருக்கிறது என்றும் நமக்குக் காட்டுகிறது. இந்த ஞானம் நம்மிடம் இயற்கையாக இருப்பதல்ல, மாறாக ஜெபத்தின் மூலம் நாம் பெற்றுக்கொள்வதாகும். நம் ஆவியிலுள்ள இப்படிப்பட்ட ஞானம், நம் மனதிலுள்ள புரிந்துகொள்ளுதலைவிட ஆழமானதும் உயர்வானதும் ஆகும். நம் மனதிலுள்ள புரிந்துகொள்ளுதலைக்கொண்டு வேதத்தின் எழுத்தை நாம் புரிந்துகொள்கிறோம், நம் ஆவியிலுள்ள ஞானத்தினால் வேதத்திலுள்ள சத்தியத்தை நாம் அறிந்துகொள்கிறோம்.

இறுதியாக, ஆவியைக்கொண்டு அதைப் பெறுதல்

ஆவியில் ஜெபித்து தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்ளும்படி எபேசியர் 6:17-18இல் நமக்குக் கூறப்படுகிறது. நாம் வாசிக்கும்போது, நம் ஆவியையும் பயிற்சிசெய்து தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இது நமக்கு வெளிப்படுத்துகிறது. சந்தேகமின்றி இது ஜெபத்தின் மூலம் செய்யப்படுகிறது. ஆகையால், வேதத்தை வாசிப்பதில், நம் புரிந்துகொள்ளுதல் மூலம் அதன் உரையின் அர்த்தத்தைப் புரிந்துகொண்டு, நம் ஞானத்தைக்கொண்டு உரையின் சத்தியத்தை அறிந்துகொண்ட பின்னர், நம் ஆள்தத்துவத்தின் அதிஆழமான பகுதிக்குள், அதாவது நம் ஆவிக்குள், வேதவாக்கியங்களிலுள்ள சத்தியங்களைப் பெற்றுக்கொள்ள ஜெபத்தின்மூலம் நம் ஆவியைப் பயன்படுத்த வேண்டும். வேறு வார்த்தைகளில், உரையைப் புரிந்துகொண்டு, அதனுள் உள்ள சத்தியத்தைப் பெற்றுக்கொண்டபிறகு, நாம் புரிந்துகொண்டதும் உணர்ந்துகொண்டதும் நம் ஆவியில் தன்மயமாகி, நம் ஜீவ நிரப்பீடாகவும், நம் ஆவிக்குரிய அனுபவத்தின் ஆதாரமாகவும் ஆகும்படி, அதனை ஜெபமாக மாற்ற இன்னும் நாம் ஆவியை இயக்க வேண்டும்.

ஜெப-வாசிப்பு

வேதத்தை வாசிப்பதற்கு இன்னோர் எளிமை- யான, ஆவிக்குரிய, மிகவும் இலாபகரமான வழி, ஜெப-வாசிப்பு. நாம் வேத வசனத்தை ஜெபமாக எடுத்துக் கொண்டு, அதைக்கொண்டு ஜெப-வாசிக்கிறோம். ஒரே நேரத்தில் வாசிப்பதும் ஜெபிப்பதும், அல்லது ஜெபிப்பதும் வாசிப்பதும், வாசிப்பதும் ஜெபிப்பதும் மட்டுமல்ல, நாம் வாசிக்கும் வசனத்தையே நேரடியாக ஜெபத்தின் வார்த்தைகளாக மாற்றி அதைக் கொண்டும் ஜெபிக்கிறோம். சில நேரங்களில் ஜெபத்தின்மூலம் அந்த உரையை நமக்கே பிரயோகிக்கலாம். இந்த வகையான ஜெப-வாசிப்பை எவ்வளவாய் மீண்டும் மீண்டும் செய்கிறோமோ, அவ்வளவாய் நம் ஆவி உயர்த்தப்பட்டதாகவும் விடுவிக்கப்பட்டதாகவும் ஆகிறது, அவ்வளவாய் நாம் பெற்றுக்கொள்கிற இலாபமும் மாபெரியதாகவும், ஆழமாகவும், ஐசுவரியமாகவும் இருக்கிறது.

வேதம் வாசிப்பதற்கான நேரம்

வேதத்தை நாம் எந்த நேரத்திலும் வாசிக்கலாம், அவசியம் ஏற்படும்போதெல்லாம் அதை வாசிக்க வேண்டும். எனினும், பொதுவாகப் பேசினால், காலையில் எந்த நபர்களையோ காரியங்களையோ தொடர்புகொள்வதற்கு முன்பு வாசிப்பது அதிசிறந்தது, அதுவும் வாசிப்பதோடு ஜெபத்தை இணைப்பது விசேஷமாக நன்று. அப்படிப்பட்ட நேரம் மிகவும் நீண்டதாக இருக்கக் கூடாது. பத்து நிமிடங்கள் ஜெபித்து, பத்து நிமிடங்கள் வாசிப்பதே மிகப் பொருத்தமான வழி. சில நேரங்களில் வாசிப்பையும் ஜெபத்தையும் ஒன்றாகக் கலந்திணைக்கலாம். (ஜீவ பாடங்கள், திரட்டு 1, பப. 36-38)

குறிப்புப் புத்தகம்: ஜீவ பாடங்கள், திரட்டு 1, அதி. 5, 6

CHRIST IS THE WORD AND SPIRIT TOO

Study of the Word— The Word and the Spirit – 815

1. Christ is the Word and Spirit too,
And as the Spirit in the Word;
And all the words He speaks to us
Are life and spirit thus conferred.

2. The Holy Word we have without,
The Holy Spirit is within;
The greatest gifts divine are these,
That we may God enjoy therein.

3. The Word the Spirit doth express,
The Spirit its reality;
They’re but two aspects of one thing
And should not separated be.

4. Whene’er the Spirit lights the Word
The Word becometh life to us;
When Word from Spirit is divorced,
‘Tis empty mental stimulus.

5. When we the Word in spirit touch,
As life the Spirit it becomes;
The Spirit, when expressed from us,
As words of life to others comes.

6. Our spirit we must exercise
To take the Word most inwardly,
And then to give the Spirit forth;
The two as one with us should be.

7. Lord, may Thy Word in me become
The Spirit as my life supply,
And may Thy Spirit in Thy Word
My true expression be thereby.