மேய்த்துப்பேணுதல்

திரட்டு 4

ஆவியானவரும்
ஜீவனும்

பாடம் ஒன்று – ஜெபம்

கொலோ. 4:2—இடைவிடாமல் ஜெபம்பண்ணுங்கள், ஸ்தோத்- திரத்துடன் ஜெபத்தில் விழித்திருங்கள்.

எபே. 6:18—எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியிலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள் (கிரே.).

ஜெபத்தின் அர்த்தம்

ஒரு நிஜமான ஜெபம், தேவனுக்கும் மனிதனுக்கும் இடையிலான பரஸ்பர தொடர்புகொள்ளுதல் ஆகும். ஜெபம் என்பது வெறுமனே மனிதன் தேவனைத் தொடர்புகொள்வது மட்டுமல்லாமல், தேவன் மனிதனைத் தொடர்புகொள்வதும் ஆகும். ஜெபத்தில் மனிதன் தேவனைத் தொடவில்லை அல்லது தொடர்புகொள்ளவில்லை எனில், அதோடு தேவன் மனிதனைத் தொடவில்லை அல்லது தொடர்புகொள்ளவில்லை எனில், அந்த ஜெபம் நேர்த்தியான தரத்தைவிட கீழானதாக உள்ளது. (Lessons on Prayer, pp. 12, 14-15)

ஜெபத்தில் விடாமுயற்சியோடு இருத்தல்

கொலோசெயர் 4:2இல் பவுல், ஜெபத்தில் விடாமுயற்சியோடு இருக்கும்படி நமக்குக் கட்டளை- யிடுகிறான். நாம் வெறுமனே தொடர்ந்து ஜெபம்பண்ணுவது மட்டுமல்லாமல், ஜெபத்தில் தொடர நாம் போராட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். நம் சுற்றுச்சூழலில் கிட்டத்தட்ட எல்லாமே ஜெபத்திற்கு முரணாக உள்ளது. ஜெபிப்பதற்கு நாம் நம் சுற்றுச்சூழலின் தற்போதைய ஓட்டத்திற்கு எதிராக, அதாவது போக்குக்கு எதிராகச் சென்றாக வேண்டும். நாம் ஜெபிக்கத் தவறிவிட்டால், நாம் தற்போதய ஓட்டத்தின் போக்கிலே அடித்துச் செல்லப்படுவோம். இந்தப் போக்குக்கு எதிராகச் செல்வதற்கு ஜெபம் மட்டுமே நமக்குத் திறனளிக்க முடியும். ஆகவே நாம் ஜெபத்தில் விடாமுயற்சியோடு இருக்க வேண்டும், அதாவது விடாப்பிடியாக ஜெபிக்க வேண்டும். (Life- study of Colossians, pp. 252-253)

நம் ஜெப வாழ்க்கையைக் குறித்த
ஒரு பொருத்தனை

நீங்கள் ஜெபத்தில் விடாமுயற்சியோடு இருக்க முயற்சிப்பதற்கு முன், நீங்கள் முதலில் உங்கள் ஜெப வாழ்க்கையைக் குறித்து கர்த்தரோடு ஒரு ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஒரு திட்டவட்டமான விதத்தில் அவரிடம் ஜெபித்து, “கர்த்தாவே, ஜெபத்தைப் பற்றிய இந்தக் காரியத்தில் நான் உம்மோடு சிரத்தையாக இருக்க விரும்புகிறேன். இந்நேரம் முதற்கொண்டு நான் ஒரு ஜெப வாழ்க்கையைக் கொண்டிருப்பேன் என்பதற்கு சாட்சிபகிர வானத்தையும் பூமியையும் நான் அழைக்கிறேன். நான் ஒரு ஜெபமற்ற நபராக இருக்க மாட்டேன். மாறாக, நான் ஒரு ஜெபிக்கின்ற நபராக இருப்பேன்” என்று கூறுங்கள். கர்த்தரிடம் இத்தகைய ஒரு ஜெபத்தை நீங்கள் ஜெபிக்காவிட்டால், நீங்கள் ஜெபத்தில் விடாமுயற்சியோடு தொடர உங்களால் முடியாது. நாம் அவரிடம், “கர்த்தாவே, நான் இதைக் குறித்து தவிப்பாய் இருக்கிறேன். நான் ஒரு ஜெப வாழ்க்கை வாழுமாறு நான் என்னையே உமக்கு ஏறெடுக்கிறேன். கர்த்தாவே, என்னை ஜெப ஆவியில் காத்துக்கொள்ளும். நான் இதை மறந்துவிட்டால் அல்லது இதைப் புறக்கணித்துவிட்டால், நீர் அதை மறக்கமாட்டீர் என்று எனக்குத் தெரியும். ஜெபத்தைக் குறித்து எனக்கு மீண்டும் மீண்டும் நினைப்பூட்டும்” என்று கூற வேண்டும். இவ்விதமான ஜெபம், கர்த்தரிடத்தில் செய்யப்படும் ஒரு பொருத்தனையாகக் கருதப்- படலாம். நம் ஜெப வாழ்க்கையைக் குறித்து நாம் அனைவரும் அவரிடத்தில் ஒரு பொருத்தனை பண்ண வேண்டும். நாம் கர்த்தரிடம், “கர்த்தாவே, நான் இந்தப் பொருத்தனையை மறந்துவிட்டாலும் நீர் அதை மறக்க மாட்டீர் என்று எனக்குத் தெரியும். தொடக்கம் முதற்கொண்டு, கர்த்தாவே நான் இந்தப் பொறுப்பை உம்மிடம் தெளிவாகக் கையளித்துவிட விரும்புகிறேன். கர்த்தாவே, என்னை விட்டு விடாதேயும். ஜெபிக்கும்படி எனக்கு நினைப்பூட்டும்” என்று சொல்ல வேண்டும்

திட்டவட்டமான நேரத்தை நிர்ணயித்தல்

நாம் ஜெபத்தைக் குறித்து கர்த்தரோடு இத்தகைய ஓர் ஒப்பந்தம் செய்த பின், நாம் ஜெபத்திற்காக திட்ட வட்டமான நேரங்களை நிர்ணயிக்க வேண்டும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் இதற்குப் பத்து நிமிடங்ள் ஒதுக்கலாம். இந்த நேரத்தின் போது, ஜெபத்திற்கே தலையாய முன்னுரிமை இருந்தாக வேண்டும். ஜெபமே நம் அதி முக்கியத்துவம் வாய்ந்த தொழில் என்பதும், அதில் தலையிடுவதற்கு எதையும் அனுமதிக்கக் கூடாது என்பதும் நம் மனப்பாங்காக இருக்க வேண்டும். நம்மிடம் இந்த மனப்பாங்கு இல்லாவிட்டால், நாம் ஒரு வெற்றிகரமான ஜெப வாழ்க்கையைக் கொண்டிருக்க முடியாது. ஒவ்வொரு நாளும் நாம் எத்தனை விஷயங்களைச் செய்ய வேண்டியிருந்தாலும் சரி, ஜெபத்திற்காக இங்கும் அங்குமாக குறைந்தபட்சம் ஒரு சில நிமிடங்களாவது நிச்சயம் நாம் ஒதுக்க முடியும். நாம் காலையில் சிறிது ஜெபிக்கலாம். அதன்பின் மீண்டும் மதிய வேளையிலும், வேலைக்குப் பிறகும், மாலை வேளையிலும் நாம் ஜெபத்திற்கு மேலும் சிறிது நேரம் ஒதுக்கலாம். பகலில் இப்படிப்பட்ட திட்டவட்டமான நேரங்களை நிர்ணயிப்பதின் மூலம், ஒரு நாளில் ஜெபத்திற்காக ஒதுக்கி வைக்கப்பட்ட அரை மணி நேரம் நமக்குக் கிடைத்துவிடும் (pp. 579-580).

References: Lessons on Prayer, ch. 1; Life- study of Colossians, msgs. 30, 65

இயேசிடம் ஜெபித்து ஐக்யம்கொள்
ஜெபம்—கர்த்தருடன் ஐக்கியம்கொள்ளுதல்

784
1 இயேசிடம் ஜெபித்து ஐக்யம்கொள்,
ஆவியில் தேடு அவரை;
அந்தரங்கம் காத்திருந்து
அவர் சமூகத்தில் கேள்.

இயேசிடம் ஜெபித்து ஐக்யம்கொள்,
ஆவியில் தேடு அவரை;
அந்தரங்கம் காத்திருந்து
அவர் சமூகத்தில் கேள்.

2 இயேசிடம் ஜெபித்து ஐக்யம்கொள்,
முக்காடில்லா முகமாய்;
கபடில்லா தூய்மையாக
உள்ளம் திறந்து நோக்கு.

3 இயேசிடம் ஜெபித்து ஐக்யம்கொள்,
நிச்சயத்துடன் தேடு;
ஆவியாய் அவரைத் தொட்டு,
பயபக்தியாய் நோக்கு.

4 இயேசிடம் ஜெபித்து ஐக்யம்கொள்,
பாசாங்காய்ப் பேசாதிரு;
ஆவியின்படி இயங்கி,
உள்ளுணர்வினால் ஜெபி.

5 இயேசிடம் ஜெபித்து ஐக்யம்கொள்,
அவர் பேசுவதைக் கேள்;
அவர் நோக்கங்கள் அறிந்து,
உன்னை விட்டுக்கொடுப்பாய்.

6 இயேசிடம் ஜெபித்து ஐக்யம்கொள்,
அவர் சமுகத்தில் நில்;
அவர் அழகால் நிறைந்து
அவர் மாட்சி வீசிடு.