மேய்த்துப்பேணுதல்

திரட்டு 4

ஆவியானவரும்
ஜீவனும்

பாடம் பதினாறு – மகிமையடைதல்

எபி. 2:10—தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகக் குமாரர்களை மகிமைக்குள் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது (கிரே.).

தேவனின் முழு இரட்சிப்பில், நாம் மறுபடி ஜெநிப்பிக்கப்படுதலில் ஆரம்பித்து, புதுப்பித்தல், பரிசுத்தமாக்கப்படுதல், மறுசாயலாக்கப்பபடுதல், முதிர்ச்சி, மற்றும் ஒத்தசாயலாக்கப்படுதல் ஆகியவற்றின் மூலமாகவும், உச்சமாக மகிமையடைதல் வரையும் கிறிஸ்துவின் ஐசுவரியமான ஜீவனைத் தொடர்ச்சியாக அனுபவமாக்கி, அனுபவித்துமகிழ்கிறோம். மகிமையடைதல் என்றால், கிறிஸ்துவில் தேவனின் வரம்பற்ற நித்திய ஜீவனை அளவில்லாமலும் எல்லையில்லாமலும் அனுபவமாக்கி, அனுபவித்துமகிழ தேவனின் மகிமைக்குள் நுழைவதாகும்.

தேவனின் குறிக்கோள்

நாம் தேவனின் நித்திய மகிமையை அனுபவித்து மகிழ்வதே நம்மைக் கிறிஸ்து இயேசுவில் அழைத்ததிலும் நமக்குச் சகல கிருபையையும் தருவதிலும் தேவனின் குறிக்கோள் என்று 1 பேதுரு 5:10இல் நமக்குக் கூறப்படுகிறது. கடந்த நித்தியத்தில், அவர் தம் முன்னறிவின்படியே நம்மை முன்குறித்தார், நாம் மகிமைப்படுத்தப்படுமாறு காலத்தில் அவர் நம்மை அழைத்தார், நம்மை நீதிப்படுத்தினார் (ரோ. 8:29-30).

தேவனின் நடத்துதலும் சீர்பொருத்துதலும்

தேவன் தம் சொந்த நித்திய மகிமையை நாம் அனுபவித்து மகிழ வேண்டுமென்று முன்குறித்த- தால், நம் இரட்சிப்பின் நாள் தொடங்கி, அவர் நம்மைத் தம் மகிமைக்குள் நடத்துகிறார். எல்லாவற்றின் சிருஷ்டிகராக, அவர் எல்லா காரியங்கள்மூலம் நம்மைத் தம் மகிமைக்குள் நடத்தும்படி, அவர் அவற்றுக்குக் கட்டளையிட்டு அவற்றை ஒழுங்குசெய்து, அவை நமக்காக வேலை செய்யும்படிச் செய்கிறார் (வவ. 8:28-30).
கிறிஸ்தவர்களாக இருப்பதற்காக, கர்த்தரைப் பின்பற்றுவதற்காக, அவருக்கென சாட்சியிடுவதற்காக நாம் இன்று அனுபவிக்கும் உபத்திரவம் கண நேரமே நிலைப்பதும் இலேசானதுமாகும் என்று 2 கொரிந்தியர் 4:17இல் நாம் பார்க்கிறோம். அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம் உபத்திரவம் மிகவும் அதிகதிகமான நித்திய கனமகிமையை நமக்காக உண்டாக்குகிறது. (ஜீவ பாடங்கள், திரட்டு 4, பப. 77-78)

மகிமையடைதலின் வரையறை
புறம்சார்ந்த மகிமையடைதல்

புறம்சார்ந்த ரீதியில், மகிமையடைதல் என்பது மீட்கப்பட்ட விசுவாசிகள் தேவனுடைய மகிமையில் பங்குகொள்ள தேவனுடைய மகிமைக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்பதே ஆகும் (எபி. 2:10; 1 பேது. 5:10). இதுவே மகிமையடைதலின் புறம்சார்ந்த வரையறை. இன்று தேவனுடைய மகிமையானது வெகுதூரம் அப்பால் பரலோகத்தில் உள்ளது என்பது போலவும், மீட்கப்பட்டவர்களாகிய நாம் பூமியில் இங்கு உள்ளோம் என்பது போலவும் தோன்றுகிறது; இந்த இருவருக்கும் இடையே ஒரு மாபெரும் தூரம் உள்ளது என்பது போல தோன்று- கிறது. நாம் தேவனுடைய மகிமையினின்று வெகுதொலைவில் இருப்பதாக சிலசமயங்களில் உணர்கிறோம், ஆனாலும் இவ்விதமான உணர்வு பகுதியளவான ரீதியில் மட்டுமே துல்லியமானது ஆகும்.

அகம்சார்ந்த மகிமையடைதல்

அகம்சார்ந்த ரீதியில், மகிமையடைதல் என்பது முதிர்ச்சியடைந்த விசுவாசிகள் தங்கள் ஜீவ முதிர்ச்சியின் மூலம் தங்களுக்கு உள்ளிருந்து, தேவனுடைய மகிமையைத் தங்கள் ஜீவ முதிர்ச்சியின் மூலக்- கூறாக வெளியரங்கமாக்குவார்கள் என்பதே ஆகும் (ரோ. 8:17-18, 20; 2 கொரி. 4:17). இதுவே மகிமையடைதலின் அகம்சார்ந்த வரையறை. நாம், அகம்சார்ந்த மகிமையடைதலை எடுத்துக்காட்ட ஓர் உதாரணத்தைப் பயன்படுத்தலாம். தோட்டத்திலுள்ள ஒரு மலர் வளர ஆரம்பிக்கும் போது, அது மிருதுவான ஒரு சிறு பச்சிளம் முளையாகத்தான் உள்ளது. எனினும் அது எவ்வளவு வளர்கிறதோ அவ்வளவு முதிர்வடைகிறது. படிப்படியாக, மொட்டுக்கள் தோன்ற ஆரம்பிக்கின்றன. நீங்கள் இந்தச் செடிக்குத் தொடர்ந்து நீர்ப்பாய்ச்சினால், அது மேன்மேலும் வளரும். ஒரு சிறிது காலத்திற்கு பின் இந்தச் செடி பூப்பூக்கும். இந்த மலர்கள் முழுவதுமாகப் பூத்துக்குலுங்கும் போது, அதுவே மகிமையடைதல். இந்த மலர்களின் மகிமை வெளியிலிருந்து வருவதில்லை; மாறாக அது உள்ளிருந்து வெளி வளர்கிறது. ஆகவே ஒரு பக்கத்தில், கிறிஸ்து நம்மை மகிமைப்படுத்த வருகின்றார் என்ற ஒரு மகிமையின் நம்பிக்கை நமக்கு உள்ளது. இது புறம்சார்ந்தது. மறு பக்கத்தில் நாம் மகிமை மேல் மகிமையோடு, அதாவது மகிமையின்மேல் மகிமையடைந்து, கர்த்தருடைய சாயலாக மறுசாய- லாகிக் கொண்டிருக்கிறோம் (3:18). இது நம் மீது இறங்குகின்ற மகிமையல்ல, அது நமக்கு உள்ளிருந்து வெளிவளர்கின்ற மகிமை. வசந்தகாலத்தில் எல்லா விதமான மலர்களும் மலரும் போது, இந்த அழகான மலர்களில் எதுவுமே வெளியே இருந்து செடிகள் மீது இறங்குவதில்லை. மாறாக, அவை சாட்சாத்து செடிக்கு உள்ளிருந்துதான் வெளிவளர்கின்றன. நீங்கள் கர்த்தரை நேசிக்கும் ஒருவராக இருந்தால், உங்களில் வாழும்படி கர்த்தரை நீங்கள் அனுமதித்து நீங்கள் கர்த்தரால் வாழ்ந்தால், மக்கள் உங்களை உற்றுக்கவனிக்கும் போது அவர்கள் தேவனுடைய மகிமையை உங்கள் மீது பார்ப்பார்கள். இந்த மகிமை புறம்சார்ந்தது அல்ல, இது அகம்சார்ந்தது.

நாம் மகிமைக்குள் நுழைதல் என்பதில் மகிமையடைதலின் இந்த இரண்டு அம்சங்களும் இருக்கின்றன. நீங்கள் கர்த்தரால் வாழ்வதில்லை என்றும், நீங்கள் கிறிஸ்துவை வாழ்வதில்லை என்றும் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்ததையெல்லாம் செய்கிறீர்கள் என்றும், நீங்கள் செய்கிற எல்லாவற்றிலும், பெரிய பாவங்கள் அரிதென்றாலும், அடிக்கடி சின்னச்சின்ன பாவங்கள் உள்ளன என்றும் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இப்படிப்பட்ட ஒரு கிறிஸ்தவனாக இருந்தால், நீங்கள் தாராளமாகக் கோபப்படவோ, வீட்டிலுள்ளவர்களைக் கோபமாக முறைக்கவோ கூடும், சபையிலும் எவரும் உங்களோடு இடைபட முடியாது. நீங்கள் இப்படிப்பட்ட ஒரு நபராக இருந்தால் கர்த்தருடைய மகிமை உங்கள் மீது இல்லை, தேவனுடைய மகிமை உங்களில் காணப்படுவது சிறிதும் இல்லை. எனினும் நீங்களோ, கிறிஸ்து வரும்போது நீங்கள் மகிமைப்படுத்தப்படுவீர்கள் என்றும் நீங்கள் மகிமைக்குள் நுழைவீர்கள் என்றும் கூறுகிறீர்கள். நான் உங்களிடம் இதைச் சொல்லட்டும்: ஆம், கிறிஸ்து திரும்பி வரும்போது நீங்கள் மகிமைக்குள் பிரவேசிப்பீர்கள், ஆனாலும் அந்த மகிமை ஒரு சிறிய இம்மியளவு மகிமையாக மட்டுமே இருக்கும். எனவேதான் 1 கொரிந்தியர் 15:41இல் அப்போஸ்தலனாகிய பவுல், “சூரியனுடைய மகிமையும் வேறே, சந்திரனுடைய மகிமையும் வேறே, நட்சத்திரங்களுடைய மகிமையும் வேறே, மகிமையிலே நட்சத்திரத்துக்கு நட்சத்திரம் விசேஷித்திருக்கிறது” என்று கூறுகிறான். எப்படி நட்சத்திரத்தின் மகிமையானது சூரியன் அல்லது சந்திரனின் மகிமையோடு ஒப்பிடப்பட முடியும்? கர்த்தருடைய வருகையில் பவுலின் மகிமை மகா பெரியதாக இருக்கும், அப்போது நீங்கள் அரிதாகவே பார்வைக்குத் தென்படக்கூடிய ஒரு சின்னஞ்சிறு நட்சத்திரமாக மட்டுமே இருப்பீர்களோ என்று நான் அஞ்சுகிறேன். அங்கே நீங்கள் மகிமையானவர்களாக இருப்பீர்களா? அங்கே மகிமையில் நீங்கள் மகிமையானவர்களாக இருக்க மாட்டீர்கள்.

இன்று நீங்கள் கர்த்தரை நேசித்து, நீங்கள் உங்களுக்கு உள்ளிருந்து கர்த்தருடைய மகிமையை வாழ்ந்துகாட்டினால், அவர் உங்களை ஓர் அதிஉயர்ந்த அளவிலான மகிமையில் வைப்பார். ஆனால் நீங்கள் இன்னும் உங்களது பழைய வழியில்—மற்றவர்களைக் கோபமாக முறைத்துப் பார்த்துக்கொண்டு, வீண்பேச்சு பேசிக்கொண்டு, இஷ்டம்போல விமர்சித்து, பெரிய பாவங்களைச் செய்வது அரிதென்றாலும் அடிக்கடி சின்னச்சின்ன பாவங்கள் செய்து—நடந்துகொண்டால், கர்த்தர் திரும்பி வரும் போது நீங்கள் அப்போஸ்தலனாகிய பவுலைப் போல் மகிமையானவர்களாக இருப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா?
மகிமை என்பது கர்த்தரால் கொடுக்கப்படு- கிறது, ஆனால் மகிமையின் அளவை நீங்கள்தான் நிர்ணயிக்க வேண்டும். தோற்கடிக்கப்பட்ட ஒரு கூட்ட மக்களும் உள்ளனர், அவர்கள் மகிமைக்குள் பிரவேசிக்க மாட்டார்கள். அவர்கள் இருளுக்குள் போய்விடுவார்கள், அங்கே பற்கடிப்பு இருக்கும். (CWWL, 1993, vol. 1, “God’s Salvation in Life,” pp. 389-390)

கிறிஸ்து தம் பரிசுத்தவான்களில் மகிமைப்படுத்தப்படுதல்

கிறிஸ்துவில் விசுவாசிக்கும் நாம், தேவன் நமக்காக முன்குறித்த மகிமைக்குள் இன்னும் நுழையவில்லை என்றாலும், மகிமையின் நம்பிக்கையாக நமக்குள் கிறிஸ்துவைப் பெற்றிருக்கிறோம் (கொலோ. 1:27).

இன்று, நாம் கிறிஸ்துவை நம் ஜீவனாக அனுபவித்துமகிழ்கிறோம். அவர் வெளிப்படும்போது, அவரது தெய்வீக மகிமையை அனுபவித்துமகிழ அவரது மகிமையில் அவரோடுகூட நாம் வெளிப்படுவோம் (3:4). அந்த மகிமை, கறைபடுத்தப்பட்ட சிருஷ்டிப்பு இன்று இருக்கிறதான அந்த அடிமைத்தனத்திலிருந்து நம்மை விடுவிக்கும். இது, அனுபவித்துமகிழும்படி நாம் வாஞ்சிக்கிற ஒரு மகிமை மட்டுமல்ல, முழுச் சிருஷ்டியும் ஆவலாய் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு மகிமையும்கூட (ரோ. 8:19-21). இன்று, அந்த மகிமை நம்மிலுள்ள, தொடர்ச்சியாக நம்மில் வளர்கிற, கிறிஸ்துவே. கிறிஸ்து வரும்போது, ஒரு பக்கத்தில், நம்மை அந்த மகிமைக்குள் நடத்துபவர் தேவன், மறுபக்கத்தில், நாம் நுழையப்போகிற அந்த மகிமையாக நமக்குள் ஊடுருவிப் பரவுபவர் கிறிஸ்து. இது, கிறிஸ்து தம் பரிசுத்தவான்களில் மகிமைப்படுத்தப்படுவதாகும், வியந்து பாராட்டப்படுவதாகும் (2 தெச. 1:9), அதாவது, தம் விசுவாசிகளுக்குள்ளிருந்தும் தம் விசுவாசிகள்மீதும் மகிமையாகவும் அவர்களது அனுபவமகிழ்ச்சி- யாகவும் கிறிஸ்து வெளியரங்கமாக்கப்படுவதாகும். (ஜீவ பாடங்கள், திரட்டு 4, பப. 78-79)

References: ஜீவ பாடங்கள், திரட்டு 4, பாடம் 48; CWWL, 1993, vol. 1, “God’s Salvation in Life,” ch. 4; CWWL, 1994-1997, vol. 4, “The Secret of God’s Organic Salvation—‘the Spirit Himself with Our Spirit,’” ch. 5

கிறிஸ்து மகிமை நம்பிக்கை, அவர் என் ஜீவன்
மகிமையின் நம்பிக்கை—
கிறிஸ்து மகிமைப்படுதல்

949
1 கிறிஸ்து மகிமை நம்பிக்கை, அவர் என் ஜீவன்,
மீண்டும் ஜெநிப்பித்தென்னைப் பூர்த்தியாய்
நிரப்பினார்;
மேலோங்கும் தம் ஆற்றலால்
தம் மகிமை தேகம்போல்
என் தேகம் மாமகிமையாக்க வருகிறார்!

வருகின்றார், மகிமைப்படுத்திட!
என் தேகத்தை உம்
தேகம்போல் உருமாற்றுவீர்.
வருகின்றார், மீட்பை நிறைவேற்ற!
மகிமையின் நம்பிக்கையாய் மகிமைப்படுத்தி.

2 கிறிஸ்து மகிமை நம்பிக்கை, தேவ இரகசியம்;
தேவ பூரணம் பகிர்ந்து, அவரை
என்னுள் கொணர்கிறார்.
அவர் மகிமையில் பங்கடைந்து, அவருடன்
என்னை முற்றும் ஒன்றாய்ப்
பிணைக்க வருகிறார்.

3 கிறிஸ்து மகிமை நம்பிக்கை, பூரண மீட்பு:
மீட்பார் சரீரம், இல்லை மரணம்,
எனக்கு விடுதலை.
அற்பமான என் தேகம் மகிமையாக்குவார்,
மரணத்தை ஜெயமாய் விழுங்க வருகிறார்.

4 கிறிஸ்து மகிமை நம்பிக்கை, என் சரித்திரம்:
என்னோடவர் ஒன்று, அவர்
வாழ்வென் அனுபவம்;
அவரோடென்றும் முற்றும் ஒன்றாக வாழ்ந்திட,
மகிமை விடுதலை கொண்டு வருகிறார்.