மேய்த்துப்பேணுதல்

திரட்டு 4

ஆவியானவரும்
ஜீவனும்

பாடம் பதினைந்து – ஒத்தசாயலாகுதல்

ரோ. 8:29-30—தம்முடைய குமாரன் அநேக சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கும் பொருட்டு, தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக்கிறார்; 30எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்- தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்.

தேவனுடைய முதற்பேறான குமாரனின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படுதல்

எவ்வாறு நாம் தேவனுடைய முதற்பேறானவரின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்பட முடியும்? எவ்வாறு தேவனுடைய முதற்பேறானவரின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படுவது என்பதை அறிவதற்கு, எவ்வாறு தேவனுடைய முதற்பேறானவர் பூமியில் வாழ்ந்தார் என்பதை நாம் புரிந்துகொண்டாக வேண்டும். தேவனுடைய முதற்பேறான குமாரன் தேவ குமார- னாகவும் மனுஷகுமாரனாகவும் இருக்கிறார். அவர் தேவ-மனிதன், அவர் பூமியில் ஒரு மனிதனின் வாழ்க்கை வாழ்ந்தார். தேவன் மனிதனைச் சிருஷ்டித்த போது, மனிதன் வாழ வேண்டுமென்று அவர் வாஞ்சித்த இந்தச் சாட்சாத்து வாழ்க்கையே அவர் பூமியில் வாழ்ந்த வாழ்க்கையாக இருந்தது. மனிதன் வாழ வேண்டுமென்று தேவன் விரும்பிய வாழ்க்கையை மனிதனால் தனது வீழ்ச்சிக்குப் பிறகு வாழ முடியவில்லை. எனவே, தேவனுடைய ஒரே பேறான குமாரன் மனுஷகுமாரனாக ஆகும்படி வந்தார். நான்கு சுவிசேஷங்களில், ஆரம்பம் முதல் முடிவு வரை, கர்த்தர் தம்மையே மனுஷ குமாரன் என்று அழைத்தார் (மத். 8:20; 26:64); அவர் பூமியில் ஒரு மனிதனாக வாழ்ந்தார். அவர் அனுதினமும் சிலுவையின் நிழலின் கீழ் உள்ள ஒரு மனிதனாக வாழ்ந்து, அனுதினமும் தம்மையே மறுதலிக்கவும் சிலுவையிலறையவும் செய்தார். தாம் பேசின வார்த்தைகளில் எதுவுமே சுயமாய்ப் பேசப்படவில்லை என்றும், தாம் செய்த விஷயங்களில் எதுவுமே தமது சொந்த விருப்பத்திலிருந்து செய்யப்படவில்லை என்றும் அவர் மக்களிடம் கூறினார் (யோ. 8:28-29; 5:19; 14:10). அவர் தமது பிதாவின் சித்தத்தின் படியே வார்த்தைகளைப் பேசினார், காரியங்களைச் செய்தார். இதைச் செய்வதின் மூலம் அவர், சட்டரீதியாக தேவன் கோரினவற்றை நிறைவேற்றினார். இதனால்தான் அவர் சிலுவையில் நமக்காக மரிக்கத் தகுதியுள்ளவராக இருந்தார். முப்பத்து-மூன்றரை ஆண்டுகள் பூமியில் அவர் வாழ்ந்த மனித வாழ்க்கையில், கர்த்தராகிய இயேசு தேவனால் பரீட்சிக்கப்பட்டு, சோதிக்கப்பட்டார். இறுதியில் சட்டரீதியான தேவனுடைய நீதியான கோரிக்கையின்படி அவர் நம் பாவங்களைச் சுமந்து, நமக்காக மரிக்கச் சிலுவைக்குச் செல்வதற்குத் தகுதிப்படுத்தப்பட்டார். தேவன் அவரை ஒரு பாவியாக, பாவமாகவே கூட கருதி (2 கொரி. 5:21), அவரைச் சிலுவையில் ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்தார். அவரது மரணமானது, சட்டரீதியாக தேவனுடைய நீதியான கோரிக்கையின் நிறைவேற்றத்திற்காக முற்றுமுடிய ஒரு சட்டரீதியான காரியமாக இருந்தது. இதைத்தான் அவர் மனுஷ குமாரனாகச் செய்தார். மனுஷகுமாரனாக அவர் பூமியில் வாழ்ந்த சிலுவையிலறையப்பட்ட வாழ்க்கை ஓர் அச்சாக ஆயிற்று; நாம் இத்தகைய ஓர் அச்சுக்கு ஒப்பாக்கப்பட வேண்டும் (பிலி. 3:10).

கர்த்தருடைய மரணத்திற்கு ஒப்பாக்கப்படுதல்

சுருக்கமாக, ஒத்தசாயலாகுதல் என்பது விசுவாசிகள் ஜீவனில் மறுசாயலாக்கப்படுவதின் முழுநிறைவேற்றம் ஆகும், அது, தேவ-மனிதனாக உள்ள கிறிஸ்துவாகிய தேவனுடைய முதற்பேறான குமாரனின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படுவதும் ஆகும். தேவனுடைய முதற்பேறான குமாரனின் சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படுவது என்பது விசுவாசிகள் தேவ-மனிதர்களாக ஜீவனில் முழு வளர்ச்சியடைந்தவர்களாக ஆகுவதேயாம். இது, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் வல்லமையின் மூலமாக எல்லாவற்றிலும் அவரது மரணத்திற்கு ஒப்பாக்கப்படுவதும் (வ. 10), தேவ-மனிதனாகிய இயேசு கிறிஸ்துவின் ஆவியின் உதாரத்துவமான நிரப்பீட்டின் மூலமாக கிறிஸ்துவைப் பெரிதாக்கிக் காண்பிப்பதற்காக அவரை வாழ்வதும் ஆகும் (1:19-21). இது, நாம் துல்லியமாக தேவனுடைய முதற்பேறான குமாரனாகிய அவரைப் போன்றே இருக்கக்கூடுமாறு தேவ-மனிதனாகிய கிறிஸ்துவின் மறுபதிப்புகளாக இருப்பது ஆகும் (1 யோ. 3:2). (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” pp. 430, 432-434)

References: CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” ch. 5; CWWL, 1994-1997, vol. 4, “The Secret of God’s Organic Salvation—‘the Spirit Himself with Our Spirit,’” ch. 5

தேவ நிஜம் கிறிஸ்து என்ற இரகசியம்,
மகிமையின் நம்பிக்கை—கிறிஸ்து என்னில்

948
1 தேவ நிஜம் கிறிஸ்து என்ற இரகசியம்,
இப்போது வெளிப்படுத்தினார்.
தேவ தற்சுரூபம், கிறிஸ்து என் ஜீவன்,
கிறிஸ்தென் மகிமையின் நம்பிக்கை.

மகிமை, மகிமை, கிறிஸ்து என்னில் ஜீவன்!
மகிமை, மகிமை, என்னே நம்பிக்கை!
கிறிஸ்து என் ஆவியில் இருக்கும் இரகசியம்!
கிறிஸ்து என் மகிமையாகுவார்.

2 ஆவியில் என்னை மீண்டும் ஜெநிப்பித்தார்,
ஆத்மா மறுசாயல் செய்கிறார்.
தேகம் தம் தேகம்போல் உருமாற்றுவார்,

முற்றும் அவரைப்போல ஆக்குவார்.
3 ஜீவன், தன்மையில், என்னோடொன்றாயுள்ளார்;
அவரில் மகிமையாகுவேன்;
அவர் சமுகம் நித்யம் அனுபவிப்பேன்
முற்றும் அவரோடொத்த சாயலாய்.