மேய்த்துப்பேணுதல்
திரட்டு 4
ஆவியானவரும்
ஜீவனும்
பாடம் பதினான்கு – மறுசாயலாக்கப்படுதல்
2 கொரி. 3:17-18—கர்த்தரே ஆவியானவர்; கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. 18நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கண்ணாடியைப்போல், கர்த்தருடைய மகிமையை உற்றுநோக்கி பிரதிபலித்து, ஆவிக் கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையிலிருந்து மகிமைக்கு மறுசாயலாகிறோம்.
மறுசாயலாகுதல் தேவனுடைய ஜீவனின்
வளர்சிதைமாற்ற செயல்பாடாக இருத்தல்
மறுசாயலாகுதல் ஒரு புறம்பான மாற்றமோ, திருத்தமோ அல்ல, மாறாக விசுவாசிகளில் தேவ- னுடைய ஜீவனின் வளர்சிதைமாற்ற செயல்பாடு ஆகும். மறுசாயலாகுதல் என்பது வெளியிலிருந்து ஒரு சில திருத்தங்களைச் செய்வது அல்ல; அது உள்ளிருந்து வரும் வளர்சிதைமாற்ற செயல்பாடாகும், அது புறம்பே வெளியரங்கமாகிறது.
ஒரு நபர் ஊட்டச்சத்துப் பற்றாக்குறையினால் மெலிந்து நோயுற்றவனாகத் தோன்றுகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவன் வெறுமனே தன் முகத்தில் சிறிது வர்ணம் பூசுவதின் மூலம் முன்னேற்ற முடியாது. மாறாக அவனுக்கு ஊட்டச்சத்து வழங்கப்பட வேண்டும்; அப்போது அவனது உடல் நிலை முன்னேறும், மேலும் அவனது முக நிறம் புறத்தூண்டுதலின்றி இளஞ்சிவப்பாக ஆகிவிடும்.
விசுவாசிகள் தெய்வீக ஜீவனில் வளர சித்தமா- யிருந்தால், தெய்வீக ஜீவனின் மூலக்கூறு அவர்களில் அதிகரித்து, ஒரு வளர்சிதை மாற்றத்தைக் கொண்டுவரும். இவ்வாறு, அவர்களது உள்ளான பிறவிக்குணம் மறுசாயலடையும், அவர்களது புறம்பான சாயலும் கூட கர்த்தருடைய சாயல் இருக்கும் வண்ணமாகவே இருக்கும்படி மறுசாயலடையும். (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” p. 416)
ஒரு வளர்சிதைமாற்ற வழிமுறை
வளர்சிதைமாற்ற வழிமுறையில், ஓர் உயிரிக்கு ஒரு புதிய மூலக்கூறு வழங்கப்படுகிறது. இந்தப் புதிய மூலக்கூறு பழைய மூலக்கூறை இடமாற்றம் செய்து, அதை வெளியேற்றுகிறது. ஆகவே ஒரு ஜீவிக்கும் உயிரிக்குள் வளர்சிதைமாற்ற வழிமுறை நடைபெறு- கையில், வெளியேற்றப்படும் பழைய மூலக்கூறை இடமாற்றம் செய்வதற்கு புதிதான ஏதோவொன்று அந்த உயிருக்குள் உருவாக்கப்படுகிறது. எனவே, வளர்சிதைமாற்றம் மூன்று காரியங்களை உள்ளடக்கு- கிறது: முதலாவது, ஒரு புதிய மூலக்கூறு வழங்கப்படுதல்; இரண்டாவது, இந்தப் புதிய மூலக்கூறைக் கொண்டு பழைய மூலக்கூறை இடமாற்றம் செய்தல்; மூன்றாவது, புதிதான ஏதோவொன்று உற்பத்திசெய்யப்படக் கூடுமாறு பழைய மூலக்கூறு வெளியேற்றப்படுதல் அல்லது அகற்றப்படுதல்.
நாம் உண்ணும் உணவு ஜீரணமாகுதலிலும் தன்மயமாகுதலிலும் வளர்சிதைமாற்றம் சம்பந்தப்பட்டுள்ளது. முதலில் நாம் உணவை நம் வயிற்றுக்குள் எடுத்துக்கொள்கிறோம். அப்போது பழைய மூலக்கூறுகளை இடமாற்றம் செய்யும்படி புதிய மூலக்கூறுகள் கூட்டிச் சேர்க்கப்படக் கூடுமாறும், புதிய உயிரணுக்கள் உண்டாக்கப்படக் கூடுமாறும் இந்த உணவு நம் உடலுக்கு நிரப்பீட்டளிக்கும்படி வளர்சிதைமாற்ற ரீதியில் ஜீரணமாகிறது. இந்த வளர்சிதைமாற்ற வழிமுறையின் மூலம் நாம் வளர்கிறோம், நாம் பலப்படுகிறோம். நேர்த்தியான வளர்சிதைமாற்றம் மூலமாக நாம் சில சுகவீனங்களிலிருந்து சுகமடையவும் கூடும். வளர்சிதைமாற்ற வழிமுறையில் நம் பெளதிக சரீரங்களில் ஒரு சுகமடைதல் நிலையாக நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. இந்தச் சுகமடைதல் ஒரு மருத்துவரால் கொடுக்கப்படும் மருந்தால் ஏற்படவில்லை; இது, சரீரம் தானே நேர்த்தியாகச் செயல்படுவதின் மூலம் ஏற்படும் ஒரு சுகமடைதல் ஆகும். தினமும் வளர்சிதை மாற்றத்தின் வழிமுறை மூலம் நாம் சுகமடைதலை அனுபவிக்க முடியும். (Life-study of 2 Corinthians, pp. 201-202)
கர்த்தரிடம் திரும்பி அவரை உற்றுநோக்குவதின் மூலம் மறுசாயலாக்கப்படுதல்
நாம் இவ்விதமான மறுசாயலாகுதலைப் பெற வாஞ்சித்தால், முதலில் நாம் கர்த்தரிடம் திரும்புவதன் மூலமும் ஒரு முக்காடு நீக்கப்பட்ட முகத்தோடு அவரை உற்றுநோக்கி ஒரு கண்ணாடியைப் போல அவரது மகிமையைப் பிரதிபலிப்பதன் மூலமும் (வ. 18) நம் பழைய கருத்துக்கள் என்ற பல்வேறு வகையான முக்காடுகளை நாம் முதலில் அகற்றியாக வேண்டும் (2 கொரி. 3:16). இவ்விதத்தில் நாம் கர்த்தரின் வெளியாக்கத்திற்காக மகிமையின் ஒரு நிலையிலிருந்து மகிமையின் இன்னொரு நிலைக்கு கர்த்தருடைய அதே சாயலாக மறுசாயலடைகிறோம்.
கர்த்தருடைய அதே சாயலாகத்தானே,
ஆவிக் கர்த்தரிடமிருந்து மறுசாயலடைதல்
ஆவிக் கர்த்தரிடமிருந்துதான், அதாவது ஜீவன்- தரும் ஆவியாகிய கிறிஸ்துவிடமிருந்துதான் விசுவாசிகள் கர்த்தருடைய அதே சாயலாகத்தானே மறுசாயலடைகின்றனர். நம் புதிய மூலக்கூறாக இருப்பதற்கான உதாரத்துவமான நிரப்பீட்டை இந்த ஆவியானவர் உள்ளடக்கியுள்ளார். நாம் இயேசு கிறிஸ்துவின் ஆவியின் உதாரத்துவமான நிரப்பீட்டை அனுபவித்துமகிழ்ந்து, நம்மில் வேலைசெய்யும்படி அவரை அனுமதித்தாக வேண்டும். இதுவே மறுசாயலாகுதல்.
நீங்களும் இன்னொரு சகோதரனும் ஒரே வீட்டில் வாழ்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்தச் சகோதரன் காலை புத்துயிரடைந்து, ஜெபித்து, வேதம் வாசித்து, கர்த்தருடைய வார்த்தையைத் தியானிக்கிறான். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, அவனில் ஏதோ மறுசாயலாகுதல் நடைபெற்றிருக்கிறது என்பதை நீங்கள் நிச்சயமாக பார்ப்பீர்கள்.
நம்மில் ஓர் ஆவி இருக்கிறது, நம் ஆவியில் ஆவியானவராகக் குடியிருக்கும் கர்த்தர் நமக்கு மிக அருகில் இருக்கிறார்….நீங்கள் எல்லாவற்றிலும் அவருடன் பேசி, அவருடன் கலந்து ஆலோசிக்கலாம். கர்த்தருடைய வார்த்தை, “நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல், எல்லாவற்றையுங்குறித்து உங்கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று கூறுகிறது (பிலி. 4:6). எனவே, உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருந்தால், நீங்கள் அவரிடம் சொல்ல வேண்டும், அவ்வளவே. அவர் உங்களுக்கு உள்ளேயே இருக்கிறார், அவர் உங்களுடன் முகம் முகமாக நேருக்கு நேராக இருக்கிறார். மூவொரு தேவன்—பிதா, குமாரன், ஆவியானவர்—நமக்குத் தொல்லை கொடுப்பதற்- காக அல்ல, நம் ஆறுதலளிப்பவராக, தேற்றரவாளனாக, ஆதரவாளராக இருப்பதற்காகதான் நம்மில் இருக்கிறார். இவ்வாறு நீங்கள் கர்த்தருடைய மூலக்கூறை உங்களுக்குள் பெற்றுக்கொள்ளு- கிறீர்கள், வளர்சிதைமாற்றம் உங்களில் நிலையான ரீதியில் வேலைசெய்யும். இதன் விளைவாக, புறம்பான ரீதியில் உங்கள் மூலமாக வெளிக்காட்டப்படுவது கிறிஸ்துவே. இதுவே கிறிஸ்துவை வாழ்வதாகும்….உண்மையில், நீங்கள் கர்த்தருடன் பேசுவதை நிலையானரீதியில் நடைமுறைப்படுத்த வேண்டும், அவ்வளவே; அப்போது புறத்தூண்டுதலின்றி நீங்கள் கிறிஸ்துவை வாழ்வீர்கள். (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” pp. 417-418)
தெய்வீகத்தோடு மனுஷீகம்
கலந்திணைவதின் மூலம் மறுசாயலடைதல்
ஆதாமிலிருந்து கிறிஸ்துவினிடமும், பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டினிடமும், பழைய போதனையிலிருந்து புதிய போதனையினிடமும், பழைய ஏற்பாட்டு ஊழியத்திலிருந்து புதிய ஏற்பாட்டு ஊழியத்தினிடமும் இடமாற்றஞ்செய்யப்படும் நம் இடமாற்றத்தில் நம் ஆள்த்தத்துவத்திற்குள் தெய்வீக மூலக்கூறு கூட்டிச் சேர்க்கப்பட்டது. இந்த இரண்டு மூலக்கூறுகளும் ஒன்றாகக் கலந்திணைக்கப்படுதல், இப்போது, மறுசாயலாகுதல் என்ற வளர்சிதைமாற்ற விளைவை உண்டாக்கிவிட்டது. தெய்வீக மூலக்கூறு நமக்குள் நிலையாகக் கூட்டிச் சேர்க்கப்படுவதற்கான வழி, முக்காடுநீக்கப்பட்ட முகத்தோடு கர்த்தரை நாம் உற்றுப்பார்த்துப் பிரதிபலிப்பது மட்டுமே. இதனால்தான் ஒவ்வொரு நாளும் நாம் காலைப் புத்துயிரடைய வேண்டும். காலைப் புத்துயிரடைதலைத் தொடர்ந்து நாள் முழுவதும் நாம், ஜீவன்-தரும் ஆவியாகிய கர்த்தரை இன்னும் உற்று நோக்கவும் பிரதிபலிக்கவும் வேண்டும். ஜீவன்- தரும் ஆவியாக அவர் நமக்கு விடுதலை அளிக்கிறார். நாம் உற்றுநோக்கிப் பிரதிபலிக்கையில், நாம் தெய்வீக மூலக்கூறைப் பெற்றுக்கொள்கிறோம், இது மறுசாயலாகுதலை விளைவிக்கிறது.
மகிமைப்படுத்தப்பட்ட கிறிஸ்துவின்
சாயலுக்கு மறுசாயலாக்கப்படுதல்
நாம் மகிமைப்படுத்தப்பட்ட கிறிஸ்துவின் சாய- லுக்கு மறுசாயலாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் என்னவாக இருக்கிறோமோ அதின் வெளியாக்கமாகிய நம் சாயல், மகிமைப்படுத்தப்பட்ட கிறிஸ்து இருக்கும் வண்ணமாகவே ஆகிவிடு- கிறது. அவர் பரிசுத்தர், நாமும் பரிசுத்தமாக இருக்கிறோம். அவர் அன்பானவர், நாமும் அன்பாக இருக்கிறோம். அவர் பொறுமையானவர், நாமும் பொறுமையாக இருக்கிறோம். அவர் கண்ணிய- மானவர், நாமும் அவ்வாறே இருக்கிறோம். இதுவே மறுசாயலாகுதலால் ஏற்படும் ஜீவனிலுள்ள வளர்ச்சி.
மறுசாயலாகுதல் ஆவிக் கர்த்தரிடமிருந்து வருகிறது (2 கொரி. 3:18). ஆவிக் கர்த்தர் என்ற இந்தக் கூட்டுத் தலைப்பு ஒரு நபரையே குறிக்கிறது. இன்று நம் மூவொரு தேவன் ஆவிக் கர்த்தராக இருக்கிறார். நம் மனுஷீகத்தோடு தெய்வீகத்தின் கலந்திணைதலாகிய மறுசாயலாகுதல் அவரிடமிருந்தே புறப்பட்டு வருகிறது.
சுருக்கமாக, மறுசாயலாகுதல் என்பது கர்த்தரை உற்றுநோக்கி பிரதிபலிப்பதன் மூலம் தெய்வீக மூலக்கூறை நம் ஆள்தத்துவத்திற்குள் பெற்றுக் கொள்வது ஆகும், இது ஒரு வளர்சிதைமாற்ற வழிமுறையை உண்டாக்குகிறது. இந்த வளர்சிதை மாற்ற வழிமுறையே, தேவ-மனிதனாகிய மகிமை- யான கிறிஸ்துவின் அதே சாயலை வெளிக்காட்டுவதற்கான, தெய்வீகத்தோடு மனுஷீகத்தின் கலந்திணைதலாகிய மறுசாயலாகுதல் ஆகும். (CWWL, 1989, vol. 3, “The Experience and Growth in Life,” p. 115)
References: CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” ch. 4; Life-study of 2 Corinthians, msg. 23; CWWL, 1989, vol. 3, “The Experience and Growth in Life,” msg. 17; CWWL, 1994-1997, vol. 4, “The Secret of God’s Organic Salvation—‘the Spirit Himself with Our Spirit,’” ch. 3
தேவ நோக்கம் நாம் அவர் மகன்
உள்ளான ஜீவனின் பல்வேறு அம்சங்கள்—மறுசாயலாகுதல்
750
1 தேவ நோக்கம் நாம் அவர் மகன்
சாயலுக்கொப்பாவதே;
ஆவியானவர் நம்மை மறு
சாயலாக்கிட வேண்டும்.
மனம், உணர்ச்சி, சித்தம் உம்போல்
சாயல் மாற்றும் கர்த்தாவே
என்னை முற்றும் உம் ஆவியால்,
பூர்த்தியாய் நிரப்புமே.
2 தேவன் தம் ஜீவனால் நம் ஆவி
மீண்டும் ஜெநிப்பித்திட்டார்;
தம் ஜீவனால் நம் ஆத்மாவை
மறுசாயலாக்க வேண்டும்.
3 ஆவியினின்று கர்த்தர் பரவி
ஆத்மாவின் உட்பாகங்கள்,
மறுசாயலாய்ப் புதிதாக்குகின்றார்,
தம் ஆளுகைக்கீழ் வர.
4 தேவ ஆவியின் வல்லமையால்
மறுசாயலாக்குகிறார்;
மகிமைமேல் மகிமை அடைந்து
ஒத்தசாயலாக்குவார்.
5 அவர்போல் தேறும்வரை சுத்தராக்கி,
மறுசாயலாக்குகிறார்;
அவர்போல் வளரும்வரை ஆட்கொண்டு,
மறுசாயலாக்குகிறார்.