மேய்த்துப்பேணுதல்

திரட்டு 4

ஆவியானவரும்
ஜீவனும்

பாடம் பதின்மூன்று – புதிதாக்கப்படுதல்

ரோ. 12:2—நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.

தீத்து 3:5—நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.

பரிசுத்தமாக்கப்படுதல்
புதிதாக்கப்படுதலைக் கொண்டுவருதல்

மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் மூலமாக நாம் தேவ- னுடைய ஜீவனைப் பெறுகிறோம், பரிசுத்தமாக்கப்படுதல் மூலமாக நம் பிறவிக்குணம் மாற்றப்படுகிறது. விசுவாசிகள் குணரீதியாகப் பரிசுத்தமாக்கப்படும்போது, இவர்கள் தங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் புறத்தூண்டுதலின்றி புதிதாக்கப்படுகின்றனர்.

மனம் புதிதாக்கப்படுதல்

ரோமர் 12:2, “நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல்…உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்” என்று கூறுகிறது. நாம் இந்த யுகத்திற்கு ஏற்றபடி வேஷந்தரிக்கக் கூடாது. இதன் அர்த்தம், நாம் நவநாகரீகமாக இருக்கக் கூடாது. மாறாக, மனம் புதிதாக்கப்படுதலின் மூலம் நாம் மறுசாயலாக்கப்பட வேண்டும். வேதவாக்கியங்கள் கற்பிக்கும் புதிதாகுதல் மனது புதிதாக்கப்படுதல் ஆகும்; அது முற்றிலும் மனதோடு தொடர்புடைய ஒரு காரியம். மனம் என்பது மக்கள், விஷயங்கள், முதலியவற்றைக் குறித்த நம் மனநிலையும், நம் தத்துவமும், நம் மதரீதியான கருத்துக்களும், நம் கண்ணோட்டங்களும் ஆகும். நாம் முக்கியமாக நம் மனதில் புதிதாக்கப்பட வேண்டும்.

பரிசுத்த வேதவாக்கியங்களின் போதனையும், பரிசுத்த ஆவியின் பிரகாசிப்பித்தலும்

நம் ஆள்த்தத்துவம் முழுவதும் புதிதாக்கப்- படக் கூடுமாறு எவ்வாறு நம் மனம் புதிதாக்கப்பட முடியும்? புதிதாக்கப்படுதலின் வழி ஜெபத்திலும், வேதம் வாசித்தலிலும் இருக்கிறது, ஏனெனில் நாம் நம் மனதில் புதிதாக்கப்படுவது என்றால் மனித வாழ்க்கையின் காரியங்களைக் குறித்த நம் பழைய கருத்துக்கள் எல்லாவற்றையும் கைவிட்டுவிட்டு, பரிசுத்த வேதவாக்கியங்களின் போதனை மூலமாகவும் பரிசுத்த ஆவியின் பிரகாசிப்பித்தல் மூலமாகவும் மீண்டும் புதிதாக ஆக்கப்படுவதாகும். நீங்கள் வேதாகமத்தை வாசித்து அதனுடன் பரிச்சயமாகும்போது, பரிசுத்த ஆவி உங்களைப் பிரகாசிப்பித்து உங்களை வழிநடத்துவார். இவ்வாறு நீங்கள் நாளுக்கு நாள் வார்த்தையை ஜெபித்து, வாசிக்கையில் உங்களைப் பிரகாசிப்பிக்க பரிசுத்த ஆவி வரும்போது, உங்களிலுள்ள மனம் பழையதிலிருந்து புதிதாக மாற்றப்படுகின்றது. உங்கள் கண்ணோட்டம் வித்தியாசமாக ஆகிறது, உங்கள் ஆள்த்தத்துவம் புதிதாக்கப்படுகிறது.

இது, விசுவாசிகள் தங்கள்
ஆவிக்குரிய வாழ்க்கையில்
மறுசாயலாக்கப்படுவதை விளைவித்தல்

மனதின் இத்தகைய புதிதாக்கப்படுதல் விசுவாசிகள் தங்கள் ஆவிக்குரிய வாழ்கையில் மறுசாயலாக்கப்படுவதை விளைவிக்கிறது. தீத்து 3:5 மறுஜென்ம முழுக்கையும், பரிசுத்த ஆவியின் புதிதாக்குதலையும் குறித்து பேசுகிறது. மறுஜென்ம முழுக்கு, நம் பழைய வாழ்க்கையைக் கழுவி நீக்குகிறது; இதைத் தொடர்ந்து பரிசுத்த ஆவியின் புதிதாக்குதல் நம் மனதை மாற்றுகிறது. நம் மனது புதிதாக்கப்படும்போது நம் ஆள்த்தத்துவம் முழுவதும் மறுசாயலாக்கப்படுகிறது. இதுவே, மனம் புதிதாக்கப்படுவதின் மூலம் மறுசாயலாக்கப்படுவது ஆகும். மறுஜென்ம முழுக்கு, நம் பழைய மனிதனின் பழைய சுபாவத்திலுள்ள எல்லாக் காரியங்களையும் வெளியேற்றி நீக்கி விடுகிறது, அப்படியிருக்க பரிசுத்த ஆவியின் புதிதாக்குதல் புதிய மனிதனின் தெய்வீக சாராம்சமாகிய புதிய காரியங்களை நம் ஆள்த்தத்துவத்திற்குள் பகிர்ந்தளிக்கிறது. இதன் மூலமாக நாம், ஒரு காலத்தில் நாம் இருந்ததான பழைய நிலைமையிலிருந்து முற்றிலும் புதியதொரு நிலைமைக்கும், பழைய சிருஷ்டிப்பின் நிலையிலிருந்து புதிய சிருஷ்டிப்பின் நிலைக்கும் திரும்புகிறோம். (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” pp. 407-409)

References: CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” ch. 3; CWWL, 1994-1997, vol. 4, “The Secret of God’s Organic Salvation—‘the Spirit Himself with Our Spirit,’” ch. 3

பிதாவே புதுமை குன்றா
பிதாவைத் தொழுதுகொள்ளுதல்—
அவரது புதுத்தன்மை

16
1 பிதாவே புதுமை குன்றா,
நீர் என்றும் புதிது;
நீரே ஜீவ வார்த்தை, பனிபோல்,
நீர் பசுமையே.

பிதாவே, நீர் மாறிடீர்,
பழைமை அடையீர்;
சதாகாலம் பசுமையாய்,
என்றும் மங்காதவர்.

2 நீரே தேவன் நீரே “புதிது;”
நீரின்றி சிதைவு.
பல்லாண்டுகள் ஓடினும், உம்மில்
எல்லாம் பசுமையே.

3 நீர் எமக்குத் தந்த ஆசீர்
என்றும் புதியவை;
உம் உடன்படிக்கை, வழிகள்
மங்கா புதியவை.

4 புது ஆவி, புது இதயம்,
புதுப் படைப்பு.
நாடோறும் புதிதாக்கி,
புது ஜீவன் தருகிறீர்.

5 புது வானம், புது பூமி,
புது நகர் பங்கு;
மாதந்தோறும் புதுக் கனிகள்,
எல்லாம் புதியவை.

6 பிதாவே, நீர் என்றும் புதிது,
உம்மில் புதிது எல்லாம்;
புதுப் பாடல் பாடிப் புது
துதி செலுத்துவோம்.