மேய்த்துப்பேணுதல்

திரட்டு 4

ஆவியானவரும்
ஜீவனும்

பாடம் பன்னிரண்டு – பரிசுத்தமாக்கப்படுதல்

1 கொரி. 6:11—உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்.

நிலைரீதியான பரிசுத்தமாகுதல், தேவனுடைய இரட்சிப்பின் சட்டரீதியான அம்சத்திற்கு உரியதாக இருத்தல்

முதலில் நாம், நிலைரீதியான பரிசுத்தமாகுதலுக்கும் குணரீதியான பரிசுத்தமாகுதலுக்கும் இடையிலான வித்தியாசத்தை அறிந்தாக வேண்டும். முந்தையது, தேவனுடைய இரட்சிப்பின் சட்டரீதியான அம்சத்திற்கு உரியது ஆகும், அப்படியிருக்க பிந்தையது, தேவனுடைய இரட்சிப்பின் ஜீவாதாரமான அம்சத்திற்கு உரியது ஆகும்.
நாம் இரட்சிக்கப்பட்டதற்கு முன்பு நாம் முற்றிலும் உலகத்திலே இருந்தோம். நாம் இரட்சிக்கப்பட்டு மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட பிறகு, நம்மைப் பரிசுத்தமாக்கும்படி கர்த்தர் நம்மை முழுமையாகப் பிரித்தெடுத்தார். இது, விசுவாசிகள் உலகத்தினின்று பிரித்தெடுக்கப்பட்டு, தேவனுக்கென்று பரிசுத்தமாக ஆக்கப்படுவதற்கான நிலைரீதியான பரிசுத்தமாகுதல் ஆகும் (1 கொரி. 1:2; ரோ. 1:2-3).

குணரீதியான பரிசுத்தமாகுதல்,
விசுவாசிகள் தேவனுடைய சுபாவத்தில்
பங்குபெறுவதற்காக இருத்தல்

எனினும் நிலைரீதியாக தேவனுக்கென்று பிரித்தெடுக்கப்பட்டு பரிசுத்தமாக ஆக்கப்படுவது போதுமானது அல்ல. நாம் நிலைரீதியாகப் பரிசுத்த- மாக்கப்பட்டு தேவனோடு ஒப்புரவாக்கப்பட்ட பிறகு, நாம் ஜீவனில் ஆசையாய்ப் பின்தொடர ஆரம்பிக்கையில், நம் பிறவிக்குணத்திற்குரியதாக அல்லாமல் மாறாக தேவனுடைய சுபாவமாக இருக்கும் ஏதோவொன்று நமக்குள் இருப்பதை நாம் உணர்வோம். தெய்வீக சுபாவம் நம் பிறவிக்குணமாக ஆகுமாறு, நமக்குள் இருக்கும் இந்த சுபாவம் நம் இயற்கையான பிறவிக்குணத்தோடும், நம் வினோதமான பிறவிக்குணத்தோடும், நம் உளப்பாங்கோடும் முழுவதுமாக இடைபடுகிறது. இது, விசுவாசிகள் தேவனுடைய பரிசுத்த சுபாவத்தில் பங்குபெற்று, அவருடைய இந்தக் குணாம்சத்திலே தேவனோடு ஒன்றாக இருக்கக்கூடுமாறு விசுவாசி- களை குணரீதியாகப் பரிசுத்தமாக்குவதற்கே உள்ளது (15:15). இவ்விதமான பரிசுத்தமாக்குதல் தேவனுடைய ஜீவனின் மூலக்கூறைச் சாரப்பொருளாகப் பயன்படுத்துகிறது, அதோடு, ஜீவ ஆவியால் விசுவாசிகளிலுள்ள பரிசுத்தமாக்கும் வேலையின் மூலமாக செயல்படுத்தப்படுகிறது (8:2).

சகோதர சகோதரிகளே, நாம் புறம்பான விதிமுறை- களைக் கொண்டு நம்மையே கட்டுப்படுத்து- கிறோமா? தேவனுடைய பரிசுத்த சுபாவத்தின்படியா, புறம்பான விதிமுறைகளின்படியா நாம் எவற்றின்படி வாழ்கிறோம், எவற்றின்படி நடக்கிறோம்? இன்று நமக்கு இந்தப் புறம்பான விதிமுறைகள் தேவையில்லை; தேவனின் பரிசுத்த சுபாவம் மட்டுமே நமக்குத் தேவை, அது நம்மைப் பரிசுத்தமாக்க வல்லது. எடுத்துக்காட்டிற்கு, பெண்களின் உடையைப் பொருத்தவரை வேதாகமம், பெண்கள் நேர்த்தியான வஸ்திரத்தில் தங்களையே அலங்கரிக்க வேண்டும் என்று கூறுகின்ற வார்த்தை மட்டுமே நமக்குக் கொடுக்கிறது (1 தீமோ. 2:9). ஆனால் எவ்விதமான வஸ்திரம் நேர்த்தியானதாகக் கருதப்படுகிறது? உங்களுக்கு உள்ளிருக்கும் தெய்வீக சுபாவம் உங்களுக்குச் சொல்லும். இதுவே குணரீதியான பரிசுத்தமாக்குதல்; இதுவே, கிறிஸ்து ஆவியானவராக நம்மில் செயல்படுத்துகின்ற ஜீவாதாரமான வேலை ஆகும். அது சட்டரீதியானதல்ல; அது முற்றிலும் ஜீவாதாரமானது. பரிசுத்தமாக்குதலின் இந்த அம்சம், விசுவாசிகளைத் தெரிந்தெடுப்பதில் தேவன் கொண்டிருந்த குறிக்கோளின் நிறைவேற்றத்திற்கான (எபே. 1:4) மறுசாயலாகுதலை மறைவாய்க் காட்டுகிறது (ரோ. 6:19, 22). இறுதியில் தேவனுடைய முழுமையான இரட்சிப்பின் சட்டரீதியான அம்சத்திலுள்ள நிலைரீதியான பரிசுத்தமாகுதலும் ஜீவாதாரமான அம்சத்திலுள்ள குணரீதி- யான பரிசுத்தமாகுதலும், அது உச்சநிலையாகப் பரிசுத்த நகரமாக ஆகும்படி புதிய எருசலேமில் வெளியரங்கமாக்கப்படும் (வெளி. 21:2, 10; 22:19). (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” pp. 404-406)

References: CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” ch. 3; CWWL, 1994-1997, vol. 4, “The Secret of God’s Organic Salvation—‘the Spirit Himself with Our Spirit,’” ch. 2

தூய பிதாவே போற்றுவோம்
பிதாவைத் தொழுதுகொள்ளுதல்—
அவரது பரிசுத்தம்

22
1 தூய பிதாவே போற்றுவோம்,
துதிப் பாடல் பாடுவோம்;
தூயவர் நீர், உயர்ந்தோர் நீர்,
“உம் பெயர் பரிசுத்தம்.”

2 தந்தையின் உள்ளம் அன்பாமே,
உம் வழிகள் நீதியே;
உம் சுபாவம் என்னே தூய்மை,
கிறிஸ்துவைக் காட்டிடுதே.

3 கர்த்தரே உம் இரத்தம் கொண்டு,
பரிசுத்தம் செய்தீரே;
உம் சத்திய வார்த்தையாலே
பிரித்தீர் பாவிகளை.

4 உம் தூய ஆவியால், எம்மை
தூய்மை செய்தீர் உமக்காய்;
ஆவி, ஆன்மா, சரீரமும்
முற்றும் தூய்மையாக்குமே.

5 இயேசுவின் தூய வாழ்வை, உம்
க்ருபையால் யாம் பெற்றோமே;
எமைப் பங்கெடுக்கச் செய்தீர்,
உம் தூய சுபாவத்தில்.

6 அந்தத் தூய நகரில், உம்
முழு தூய்மை பங்குற்று,
முற்றிலும் பறைசாற்றுவோம்,
“நீரே தூயர்,” என்றென்றும்.

 

`