மேய்த்துப்பேணுதல்

திரட்டு 4

ஆவியானவரும்
ஜீவனும்

பாடம் பதினொன்று – மறுபடிஜெநிப்பிக்கப்படுதல்

யோ. 3:6-7—மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும். 7நீங்கள் மறுபடியும் பிறக்கவேண்டுமென்று நான் உனக்குச் சொன்னதைக் குறித்து அதிசயப்படவேண்டாம்.

1 பேது. 1:23—அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ளதுமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தினாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே.

“ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்”

நாம் மனந்திரும்பி, கர்த்தரில் விசுவாசித்த பிறகு, நம் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, நாம் தேவனிடத்திற்கு ஒப்புரவாக்கப்பட்டோம். அதன்பின், நம்மை நேசிக்கும் மற்றும் ஜீவன்-தரும் ஆவியாக இருக்கும் இந்த தேவன், நம் ஆவியை மறுபடிஜெநிப்பிக்கும்படி நமக்குள் வருகிறார். யோவான் 3, ஒரு யூத ஆளுநனாகிய நிக்கொதேமுவைக் குறித்து பேசுகிறது. இவன் கர்த்தராகிய இயேசுவை, தேவனிடத்தி- லிருந்து இஸ்ரயேலரிடம் வந்த ஒரு போதகரென்று மரியாதையுடன் அழைத்தான், ஆகவே இவன் அவரிடமிருந்து ஏதோ ஆலோசனை பெற வந்தான். எனினும் கர்த்தராகிய இயேசு இவனிடம், “ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணமாட்டான்” என்று கூறினார் (வ. 3). நிக்கொதேமு, மறுபடிஜெநிப்பித்தல் என்பதின் அர்த்தத்தைப் புரிந்துகொள்ளவில்லை. மறுபடி ஜெநிப்பிக்கப்படுதல் என்றால் ஒரு மனிதன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாவது முறை பிரவேசித்துப் பிறப்பது என்று அவன் எண்ணினான். எனவேதான் அவன் கர்த்தராகிய இயேசுவிடம், “ஒரு மனுஷன் முதிர்வயதாயிருக்கையில் எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாந்தரம் பிரவேசித்துப் பிறக்கக்கூடுமோ?” என்று கேட்டான். (வ. 4). எனினும் கர்த்தராகிய இயேசு குறிப்பிட்ட மறுபடிஜெநிப்பிக்கப்படுதல், ஒருவன் ஜலத்தினாலும் (அதாவது, மரணத்தாலும்) ஆவியினாலும் (அதாவது, ஜீவனாலும்) பிறப்பதற்காக இருந்தது (வ. 5). அதன்பின் கர்த்தர் தொடர்ந்து கூறினதாவது, “மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்” (வ. 6). முதலாவது ஆவி தெய்வீக ஆவி ஆகும், இது தேவனைக் குறிக்கின்றது. தேவன் ஆவியாயிருக்கிறார். நாம் அவரால் பிறக்கும்போது நாம் ஆவியினால் பிறக்கிறோம், இறுதியில் நாம் ஆவியாக இருக்கிறோம், இது யோவான் 3:6இல் குறிப்பிடப்பட்டுள்ள இரண்டாவது ஆவி ஆகும். இதுவே மறுபடிஜெநிப்பிக்கப்படுவது ஆகும்.

தேவனுடைய ஜீவ வார்த்தையின் மூலமாக

ஒன்று பேதுரு 1:23, “அழிவுள்ள வித்தினாலே அல்ல, என்றென்றைக்கும் நிற்கிறதும் ஜீவனுள்ள- துமான தேவவசனமாகிய அழிவில்லாத வித்தி- னாலே மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறீர்களே” என்று கூறுகிறது. இது, மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் தேவனுடைய ஜீவ வார்த்தையின் மூலமாக நடக்கிறது என்பதை நமக்குக் காட்டுகிறது. மறுபடி- ஜெநிப்பிக்கப்பட்ட ஒரு மாபெரும் திரளானோர் தேவனுடைய வார்த்தையின் மூலமாக மறுபடிஜெநிப்பிக்கப்பட்டனர். தேவனுடைய வார்த்தையானது ஒரு “மரபணுவாக” நமக்குள் நுழைந்து, நம்மில் கிரியைசெய்தது. இவ்விதமாக நாம் மறுபடி ஜெநிப்பிக்கப்பட்டோம்.

விசுவாசிகள் தேவனுடைய ஆவிக்குரிய ஜீவனைப் பெறுவதற்காக

யோவான் 1:12-13, “அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரைப் பெற்றுக் கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார். அவர்கள், இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள்” என்று கூறுகிறது. மறுபடி ஜெநிப்பிக்கப்படுவதற்கான வழி, கர்த்தராகிய இயேசுவுக்குள் விசுவாசிப்பதின் மூலம் அவரைப் பெற்றுக்கொள்வதே ஆகும் என்று இந்தப் பகுதி நமக்குச் சொல்லுகிறது. அவரே தேவனிடமிருந்து வந்த வார்த்தை (வ. 1), அவரே தேவனிடமிருந்து வந்த ஒளி (வ. 9). நாம் அவரைப் பெற்றுக்கொள்ளும் போது, நாம் தேவனுடைய பிள்ளைகளாக ஆவதற்கான அதிகாரத்தைப் பெறுகிறோம். இந்த அதிகாரம், தேவனுடைய ஜீவனே அன்றி வேறு எதுவும் இல்லை. நாம் தேவனுடைய பிள்ளைகளாக ஆகக் கூடுமாறு தேவன் தம் ஜீவனை நம் அதிகாரமாக நமக்குக் கொடுக்கிறார். எனவே, நாம் இரத்தத்தினாலாவது, மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். இதுவே மறுபடிஜெநிப்பித்தல், இது ஒரு மாபெரும் காரியம்.

தேவனுடைய முழுமையான இரட்சிப்பின் மையம்

மறுபடி ஜெநிப்பிக்கப்படுதல் என்பது தேவனுடைய முழுமையான இரட்சிப்பின் மையமாகவும், தேவ- னுடைய இரட்சிப்பின் ஜீவாதாரமான அம்சத்தில் அதின் தொடக்கமாகவும் உள்ளது என்று நாம் கூறலாம். நம்மை உயிருள்ளவர்களாக ஆக்கு- வதற்கு தேவன் தாமே ஆவியானவராக நம் ஆவிக்குள் வருகின்றார். வேறு வார்த்தைகளில், நாம் தேவ ஆவியானவர் மூலம் நம் ஆவியில் மறுபடி ஜெநிப்பிக்கப்பட்டு, உயிருள்ளவர்களாக ஆக்கப்படுகிறோம். இதுவே மறுபடிஜெநிப்பிக்கப்படுதல். (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” pp. 392-393)

References: CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” ch. 2; CWWL, 1994-1997, vol. 4, “The Secret of God’s Organic Salvation—‘the Spirit Himself with Our Spirit,’” ch. 1

தந்தையின் மடியினிலே
கர்த்தரைத் துதித்தல்—அவரது பெருக்கம்

203
1 தந்தையின் மடியினிலே,
யுகங்கள் தோன்றும் முன்பே,
தந்தையின் மகிமையில் நீர்
தேவனின் ஒரே மகன்,
தந்தை உம்மைத் தந்தபோது,
நபரில் நீர் அவரே.
தந்தையின் பரிபூரணம்
ஆவியில் அறிவிக்க.

2 மரணம், உயிர்ப்பால் தேவனின்
முதல் மகனானீர்
உம் ஜீவன் எம்முள் தந்ததால்
யாம் உந்தன் நகலானோம்,
மீண்டும் பிறந்து, தேவனின்
பல மகன்களானோம்;
உம் பல சகோதரராய்,
உம் போன்றோரே யாம் மெய்யாய்.

3 மரணம், உயிர்ப்பின்மூலம்
ஜீவனில் நீர் பெருக,
நீர் மண்ணில் வீழ்ந்து மடிந்த
ஒரே கோதுமை மணி,
உம் சுபாவத்தில் பிறந்த யாம்
பல மணிகள் ஆனோம்;
உம் நிறைவை அறிவிக்க,
ஓர் அப்பமாய் இழைந்தோம்.

4 யாம் உந்தன் மறுஉற்பத்தி,
உம் சரீரம், மணாளி,
என்றும் நீர் வசிக்க உந்தன்
பூரணம், வெளியாக்கம்.
உம் தொடர்ச்சி, உம் படர்ச்சி,
உம் ஜீவ விருத்தியாம்,
உம் வளர்ச்சி, மா திரட்சி,
எம் தலையோடொன்று யாம்.