மேய்த்துப்பேணுதல்

திரட்டு 4

ஆவியானவரும்
ஜீவனும்

பாடம் பத்து – ஆவியின்படி நடத்தல்

கலா. 5:25—நாம் ஆவியினாலே வாழ்ந்தால், ஆவியினாலே நடக்கவும் கடவோம்.

ஆவியின்படி நடத்தல் கலந்திணைந்த ஆவியின்படியான நம் நடையைப் பற்றியது, இது ஜீவ ஆவியைக்குறித்த காரியம் மட்டுமல்ல, நம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவியைக்குறித்த காரியமும்கூட. ஜீவனாயிருக்கிற கிறிஸ்து, ஜீவ ஆவி, நம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவி ஆகிய மூன்றும் ஒன்றாக இணைகின்றனர். ஜீவனாகக் கிறிஸ்து நாம் ஜீவ உணர்வைப் பெறும்படிச் செய்கிறார், பரிசுத்த ஆவியின் அபிஷேகமும் அசைவும் நாம் ஆவியானவரால் போதிக்கப்படும்படிச் செய்கின்றன, நாம் கர்த்தரின் ஜீவனின் ஆவியோடு ஒரே ஆவியாகக் கலந்திணைக்கப்படுதல், ஜீவ ஆவியின் அசைவிலிருந்து வரும் கர்த்தரின் ஜீவ உணர்வின்படி நம் ஆவியில் நம்மை நடக்கச் செய்கிறது.

இரு ஆவிகள் ஒன்றாகக்
கலந்திணைவதாகிய ஆவி

நம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவியில் தேவனின் ஜீவ ஆவியானவர் உள்வசிக்கும்படி பரிசுத்த ஆவியால் மறுபடிஜெநிப்பிக்கப்பட்டுள்ள நாம் கர்த்தரோடு ஒரே ஆவியாக உள்ளோம் என்று புதிய ஏற்பாடு நமக்குத் தெளிவாகவும் திட்டவட்டமாகவும் வெளிப்படுத்துகிறது. நம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவியும் நம்மை மறுபடிஜெநிப்பித்த ஜீவ ஆவியும், ஒரே ஆவியாகக் கலந்திணைந்துள்ளன என்பதே இதன் அர்த்தம் (1 கொரி. 6:17)….அப்போஸ்தலனாகிய பவுல் இந்தக் கலந்திணைந்த ஆவியின் அனுபவங்களால் நிறைந்திருந்தான். ஆகவே, அவன் நம்மிடம் இந்தக் கலந்திணைந்த ஆவியின்படி நடக்கும்படி கூறுகிறான். இது வெறுமனே தேவனின் ஆவியின்படி நடப்பது அல்ல, மாறாக தேவனின் ஜீவ ஆவி உள்வசிக்கிற, நம் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவியைப் பின்பற்றி நடப்பதாகும்.

விசுவாசிகளிடம் இருக்க வேண்டிய
வாழ்க்கை மற்றும் நடை

நம்முடன் தம்மையே கலந்திணைத்த மூவொரு தேவனின் விருப்பத்தின்படி, விசுவாசிகளாக நம் வாழ்க்கை, வேதத்தின்படியான ஒரு வாழ்க்கை மட்டுமோ, “பரிசுத்தப்படுத்தப்பட்ட,” “வெற்றிகரமான” ஒரு வாழ்க்கை மட்டுமோ அல்ல, மாறாக நம்மிலுள்ள ஆவியின்படி, அதாவது இரண்டு ஆவிகளின் ஒன்றாக கலந்திணைதலாக இருக்கும் அந்த ஆவியின்படி நடக்கிற ஒரு வாழ்க்கையாகும் (ரோ. 8:4). இப்படியொரு வாழ்க்கை நம் மாம்சம், நம் சுயம், நம் ஆத்துமா, மற்றும் நம் இயற்கை ஜீவன் ஆகியவற்றைத் தங்கள் நிலையையும் செயல்பாட்டையும் இழக்கும்படிசெய்து, பிதா, குமாரன், ஆவியானவராகிய பதனிடப்பட்ட மூவொரு தேவன் தம்மையே நம் ஆவி, ஆத்துமா, சரீரமாகிய நம் முப்பகுதி ஆள்தத்துவத்தோடு கலந்திணைக்க வேண்டுமென்ற இலக்கை அடையும்படி, அதாவது நாம் அவரது முழு வெளியாக்கமாக இருப்பதற்கு அவரோடு முழுமையாக ஒன்றாக இருக்கும்படி நாம் முழுவதுமாக அவரால் ஆக்கிரமிக்கப்பட்டு, அவரைக்கொண்டு நிரப்பப்பட்டு, பூரிதமாக்கப்பட்டு, அவரை நம் ஜீவனாக, நம் நபராக, நம் எல்லாமுமாக எடுத்துக்கொள்ளும்படி, அவர் நம்மில் முழுத் தளத்தையும் ஆதாயப்படுத்த அனுமதிக்கிறது….இந்த வாழ்க்கை, தேவன் தம் நீதியைப் பொருத்தவரை இனி தடுக்கப்படாதபடி, தேவனின் நியாயப்பிரமாணத்தின் நீதியான கோரிக்கையைத் திருப்தியாக்குவது மட்டுமல்லாமல், இது, தேவன் தம் பரிசுத்தத்தைப் பொருத்தவரை முழுவதும் திருப்தியடைந்து, தம் மகிமையைப் பொருத்தவரை எந்தக் குறைவும் இல்லாதவாறு, அவரது பொருளாட்சியின் குறிக்கோளையும் நிறைவேற்றுகிறது.

ஆவியின்படி மட்டுமே வாழ்தலும் நடத்தலும்

…ஆவியின்படி வாழ்தலும் நடத்தலும் மிக முக்கியமாக இருப்பதால், நாம் மாம்சத்தின்படி அல்லாமல், ஆவியின்படியே வாழவும் நடக்கவும் வேண்டும் (வ. 4). உண்மையில், ஆவி அல்லாத மற்ற காரியங்களின்படியுள்ள எந்த வாழ்க்கையும் நடையும், மாம்சத்தின் படியான ஒரு வாழ்க்கையும் நடையுமாகும். நாம் ஆவியின்படி நடவாமல் வேதத்தின்படி நடக்கப் பெருமுயற்சி செய்தால், நாம், வெளிப்படையாக இல்லாவிட்டாலும், உண்மையில், மாம்சத்தின்படி நடக்கிறோம். இதற்குக் காரணம், இஸ்ரயேலர்கள் தங்கள் சொந்த வல்லமையால் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டதுபோல, நாம் நம் சொந்தப் பலத்தால் வேதத்தின் வார்த்தைகளைக் கைக்கொள்கிறோம். ஆவியின்படி நடக்கிறவன், எல்லாவற்றையும் தன் சொந்தப் பலத்தாலல்ல, ஆவியினாலேயே செய்கிறான். இந்த விதத்தில், நம் நடை, தேவனின் சித்தத்தின்படி அவரைப் பிரியப்படுத்துவதை வெறுமனே செய்வது அல்ல, மாறாக நாம் செய்யவேண்டுமென்று தேவன் விரும்புவதை நம் ஆவியில் கலந்திணைந்த பரிசுத்த ஆவியாகிய தேவனாலேயே நிறைவேற்றுவதாகும். (ஜீவ பாடங்கள், திரட்டு 3, பப. 67-70)

ஜீவனாக நம் உள்ளே இருக்கும் தேவன்—
என்ற தரிசனத்தைப் பெற வேண்டியிருத்தல்

முதலில் உங்களிடம் தரிசனம் இருந்தாக வேண்டும்; அதாவது, உங்களிடம் வெளிப்பாடு இருந்தாக வேண்டும்.…சில சமயங்களில் கிறிஸ்த வாழ்க்கை பிரகாசமான சூரிய வெளிச்சமிக்கதாக, கர்த்தருடைய பிரசன்னம் நிறைந்ததாக உள்ளது, எனினும் சில சமயங்களில் அது மேகமூட்டமாகவும், புயலடிப்- பதாகவும் இருளானதாகவும் கூட உள்ளது. அப்படிப்பட்ட நேரங்களில் நாம் இது போன்ற கேள்விகளை நமக்குநாமே கேட்கக் கூடும்: தேவன் நிஜமானவரா இல்லையா? மறுபடிஜெநிப்பித்தல் நிஜமானதா இல்லையா? எனக்கு உள்ளிருக்கும் தேவ ஆவியின் பரிசுத்தமாக்குகின்ற மற்றும் மறுசாயலாக்குகின்ற வேலை நிஜமானதுதானா இல்லையா? நாம் அனைவரும் இந்த விதமான சூழ்நிலையில் இருந்திருக்கிறோம் என்று நாம் நம்பு- கிறேன். ஆனால் எப்பேர்ப்பட்ட உபத்திரவங்கள் வழியாக நாம் கடந்துசென்றாலும் சரி, ரத்துசெய்யப்பட முடியாத ஏதோவொன்று நமக்கு உள்ளிருக்கிறது என்பதை நாம் கண்டுபிடித்தோம். நாம் அவரது இருத்தலை மறுதலிக்க முடியாது…. தேவன் ஜீவனாக நமக்கு உள்ளிருக்கிறார் என்ற தரிசனத்தை நாம் அனைவரும் பார்த்தாக வேண்டும்.

இரண்டாவதாக நாம், விசுவாசிகளாக நம் முப்- பகுதி மனிதனின் பழைய மனிதன் கிறிஸ்துவுடனேகூட சிலுவையிலறையப்பட்டிருக்கிறான் என்பதைப் பார்த்தாக வேண்டும். நாம் பிறந்ததற்கு முன்பே கூட நாம் சிலுவையிலறையப்பட்டோம். மூன்றாவதாக, முழுநிறைவடைந்த முழுமையாக்கப்பட்ட மூவொரு தேவன் இப்போது நம் ஆவியை ஜீவனாக ஆக்கியிருக்கிறார் என்பதை நாம் பார்த்தாக வேண்டும். வேறு வார்த்தைகளில், மூவொரு தேவனின் ஆவி இப்போது நம் ஜீவனாக நம் ஆவிக்கு உள்ளிருந்து, தேவனை நம் எல்லாமுமாக அனுபவித்துமகிழ நமக்குத் திறனளிக்கின்றார். முதற்கனிகளின் அனுபவ மகிழ்ச்சியாக இந்த ஜீவனை நாம் நம் ஆவிக்குள்ளே பெற்றிருக்கிறோம்.

நான்கு முக்கியமான அனுபவங்கள்

இந்தத் தரிசனத்தைப் பார்த்தப் பிறகு நமக்குப் பின்வரும் அனுபவங்கள் தேவை. முதலில் நாம் எந்தக் கலப்படமான எண்ணங்களும் இன்றி நம் மனதை ஆவியின் மீது பொருத்த வேண்டும் (ரோ. 8:6). நாம் நம் சுய-மேம்படுத்துதல் மூலம் நம்மையே முன்னேற்றவோ திருத்தவோ முயற்சிப்பதைப் பற்றி யோசிக்கக் கூடாது. நம் மனதை ஆவியின் மீது பொருத்துவதற்கான அதிசிறந்த வழி ஜெபித்துத் துதிப்பதேயாம். இது நம் மனதை ஜீவனாக ஆக்கி- விடும். இரண்டாவதாக நாம் கலந்திணைந்த ஆவியின்படி நடக்க வேண்டும் (வ. 4). மூன்றாவதாக, மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் வழியாகக் கடந்து சென்று, நம் ஆவிக்கும் நம் மனதிற்கும் மட்டு மல்லாமல் நம் சாவுக்கேதுவான சரீரத்திற்கும் கூட ஜீவனைக் கொடுக்கின்ற மூவொரு தேவனின் ஆவியை நாம் அனுபவமாக்க வேண்டும் (வ. 11). இந்த அனுபவங்களின் மூலம் நம் ஆவியிலும், நம் ஆத்துமாவிலும், நம் சாவுக்கேதுவான சரீரத்திலும் கூட ஜீவன் இருக்கிறது. நம் ஆள்த்தத்துவத்தின் மூன்று பகுதிகளாகிய ஆவியும், ஆத்துமாவும், சரீரமும் ஜீவனைப் பெறும்.

கடைசியாக, முழு நபரின் செய்கைகளாகிய சரீரத்தின் செய்கைகளை ஆவியானவரால் நாம் மரணத்திற்கு உட்படுத்த வேண்டும் (வ. 13). நாம் நம்மையே மரணத்திற்கு உட்படுத்துவதன்மூலம் வாழ்கிறோம். இந்தக் குறிப்பைப் பற்றி பவுலின் வார்த்தைகள் மிகப் பரம்புதிராகவும், ஆழமாகவும், முழுமையாகவும் உள்ளன. நமக்கு உள்ளிருக்கும் ஆவியானவரால் நாம் சரீரத்தின் செய்கைகளை மரணத்திற்கு உட்படுத்துகிறோம் என்று அவன் கூறுகிறான். சரீரமானது திரைப்படங்களுக்குச் செல்லவோ, கோபப்படவோ, நையாண்டி செய்யவோ, நேசிக்கவோ, வெறுக்கவோ, நன்மை செய்யவோ, தீமை செய்யவோ விரும்புகிறது. இவை யாவும் மரணத்திற்கு உட்படுத்தப்பட வேண்டும். நீங்கள் சரீரத்தின் செய்கைகளை மரணத்திற்கு உட்படுத்தினால் வாழ்வீர்கள். கிறிஸ்தவ வாழ்க்கை என்பது மரிப்பதின் மூலம் வாழும் ஒன்று ஆகும். மரணத்தின் மூலம் ஜீவன் என்ற தலைப்பில், மேடம் குயோன் இதைப் பற்றிய ஒரு புத்தகம் எழுதினார். சரீரத்தின் செய்கைகளை மரணத்திற்கு உட்படுத்துவதற்கான வழி, கர்த்தருடைய மரணத்தில் தொடர்ச்சியாக நிலைத்திருப்பதே ஆகும். நாம் கர்த்தரில் தங்கியிருக்கவும் நிலைத்திருக்கவும் வேண்டும் என்று யோவான் 15 கூறுகிறது. நாம் கர்த்தரில் தங்கியிருக்க வேண்டுமானால், நாம் கர்த்தரின் மரணத்திலே தங்கியிருந்து, நிலைத்திருந்தாக வேண்டும்.

எல்லாவற்றிலும் விழிப்பாகவும்
கவனமாகவும் இருக்க வேண்டியிருத்தல்

நாம் தேவனை ஜீவனாக அனுபவமாக்க வேண்டுமானால், மூவொரு தேவன் நம் ஜீவனாக இருக்க விரும்புகிறார் என்பதை நாம் முதலில் பார்த்தாக வேண்டும். இதற்காக அவர் நம் முப்பகுதி மனிதனின் பழைய மனிதனை கிறிஸ்துவுடனேகூட சிலுவையில் தீர்த்துக்கட்டினார், இதன் மூலமாக மூவொரு தேவனின் ஆவியாக அவர் நம் ஆவிக்குள் வந்து, நாம் அவரை அனுபவித்துமகிழ்வதற்காக நம் ஆவியை ஜீவனாக ஆக்க முடிகிறது. நம் ஆவியில் இருக்கும் மூவொரு தேவனின் ஆவி நம் மனதிற்குள் வந்து, நம் மனதை ஜீவனாக ஆக்கக் கூடுமாறு நாம் நம் மனதை ஆவியின் மீது பொருத்த வேண்டும். அதோடுகூட, நாம் ஆவியானவரின்படி மட்டுமே வாழவும் நகரவும் வேண்டும். நாம் இந்த காரியங்களைச் செய்தால் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினூடாய்க் கடந்து சென்ற மூவொரு தேவனின் ஆவி நம் சாவுக்கேதுவான சரீரத்திற்கு ஜீவன் தருவார், இவ்வாறு நம் ஆள்தத்துவம் முழுவதையும்—ஆவியையும், ஆத்துமாவையும், சரீரத்தையும்—ஜீவனாக ஆக்கி- விடுகின்றார். அதன்பின் ஆவியானவரின் மூலம் நாம் சரீரத்தின் செய்கைகளை மரணத்திற்கு உட்படுத்தி, வாழ வேண்டும். இந்த வழியில் நாம் தேவனை நம் ஜீவனாக அனுபவித்துமகிழ்கிறோம். பெரியதோ சிறியதோ நம் அன்றாட அலுவல்களின் ஏதோவொரு குறிப்பிட்ட தருணத்தில் நாம் ஆவியின்படி இல்லாதிருக்கக்கூடும் என்று அஞ்சி, நடைமுறைப் பயிற்சியில் நாம் விழிப்பாகவும் கவனமாகவும் இருந்தாக வேண்டும். ஏதேனும் குறிப்பிட்ட தருணத்தில் நாம் ஆவியின்படி இல்லையெனில், நாம் நேர்த்தியாக இல்லை.

இந்த அதிகாரத்தில் வழங்கப்பட்டிருக்கிறவற்றை நீங்கள் எல்லாரும் நடைமுறைப்படுத்துவீர்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன். (CWWL, 1988, vol. 2, “Words of Life from the 1988 Full-time Training,” pp. 208-210)

References: Life Lessons, vol. 3, lsn. 34; CWWL, 1988, vol. 2, “Words of Life from 1988 Full-time Training,” ch. 1

CHRIST MY VERY PEACE IS

Experience of Christ— By Following the Spirit – 594

1. Christ my very peace is
And my life within;
Sharing in the spirit
I unite with Him.

Following the Spirit,
Living in the Lord,
Life He doth supply me
And His peace afford.

2. To the Lord belonging,
Bound I’ll never be,
For the law of life now
Sets me wholly free.

3. Minding flesh no longer,
I’ll the spirit mind;
Self-will never follow,
But the Spirit’s find.

4. Christ within empow’rs me
Spiritual to be!
E’en my body quick’ning
By His pow’r in me.

5. Spirit with the spirit
Witnesseth in one,
I’m of God begotten,
Heir with Christ the Son.