மேய்த்துப்பேணுதல்
திரட்டு 4
ஆவியானவரும்
ஜீவனும்
பாடம் ஒன்பது – கர்த்தருடன் ஒரே ஆவியாயிருத்தல்
1 கொரி. 6:17—அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.
நாம் கிறிஸ்துவை அனுபவித்து, கிறிஸ்துவை எல்லாமுமாக எடுத்துக்கொள்ள முடியும், ஏனெனில் நாம் அவரோடுகூட ஒரே ஆவியாகிவிட்டோம். இது ஓர் ஆழமான பரம்புதிராக இருந்தாலும், இது ஓர் நிச்சயமான உண்மை, இதை, கிறிஸ்துவுக்குள் விசுவாசித்திருக்கிற, அவரது தெய்வீக ஜீவனில் அவரோடு இணைக்கப்பட்டிருக்கிற நாம் ஒவ்வொருவரும் விசுவாசித்து, அறிக்கைசெய்து, பயிற்சிசெய்ய வேண்டும். (ஜீவ பாடங்கள், திரட்டு 3, ப. 41)
பரிசுத்த ஆவியால் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஒரு மனித ஆவி நமக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தறிவது முக்கியமானதாக இருத்தல்
நான் அநேக ஆண்டுகளுக்கு முன்பு இந்த நாட்டில் ஊழியத்தை ஆரம்பித்தபோது, கிறிஸ்துவில் விசுவாசிக்கும் நமக்கு ஒரு மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட மனித ஆவி, அதாவது தெய்வீக ஆவியானவரால் உள்வசிக்கப்படும் ஒரு மனித ஆவி உள்ளது என்கிறதும், நாம் கர்த்தருடன் ஒரே ஆவியாக இருக்கிறோம் என்கிறதுமான உண்மையை நான் வலியுறுத்தினேன். தங்களுக்கு ஓர் ஆவி உள்ளது என்பதை அறிந்ததே அநேகருக்கு ஆச்சரியமாக இருந்தது. கண்டிப்பாக அவர்கள் தங்களுக்கு ஓர் ஆத்துமாவும் ஓர் இருதயமும் இருந்தது என்பதை அறிந்திருந்தனர், ஆனாலும் அவர்கள் மனித ஆவியை அறிந்திருக்கவில்லை. எல்லா கிறிஸ்தவர்களும் பரிசுத்த ஆவியை அறிந்திருக்கின்றனர், ஆனாலும் தங்களுக்கு ஒரு மனித ஆவி உள்ளது என்பதை எல்லாரும் உணர்ந்தறிவதில்லை. பரிசுத்த ஆவியால் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஒரு மனித ஆவி தங்களுக்கு உள்ளது என்பதை சமீபகாலமாக சபை வாழ்க்கைக்குள் வந்திருக்கும் அனைவரும் உணர்ந்தறிவது முக்கியம். மேலும், நம் அனுதின வாழ்க்கையில் நாம் ஆவியைப் பயிற்சி செய்தாக வேண்டும். (Life- study of 1 Corinthians, p. 109)
தேவன் ஆவியாயிருத்தலும்,
கிறிஸ்து ஜீவன்-தரும் ஆவியாகுதலும்
தேவன் ஆவியாயிருக்கிறார் என்று யோவான் 4:24 கூறுகிறது. இது, தேவனின் சுபாவத்தைக் குறித்துப் பேசுகிறது. தெய்வீக சாராம்சத்தைப் பொருத்தவரை, தேவன், அதாவது முழு மூவொரு தேவனும் ஆவியாயிருக்கிறார்.
மூவொரு தேவன் மூவராக—பிதா, குமாரன், ஆவியானவராக—இருக்கிறார். பிதா ஊற்று, குமாரன் பிதாவின் வெளியாக்கம், ஆவியானவர் குமாரனின் நிஜமாக்குதல் (மத். 28:19).
கடைசி ஆதாம் மாம்சமான கிறிஸ்துவே, இவர் தேவனின் உச்சநிலை வெளியாக்கமான ஜீவன்- தரும் ஆவியாய் (1 கொரி. 15:45), அதாவது ஜீவ ஆவியாய் ஆக (2 கொரி. 3:6, 17) மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் உருமாற்றப்பட்டார்.
நம் மையமும் ஆவியாக இருத்தல்
நம் முழு நபர்—ஆவி, ஆத்துமா, சரீரம் என்ற—மூன்று பகுதிகளால் ஆனது என்று 1 தெசலோனிக்கேயர் திட்டமும் தெளிவுமாக நமக்கு வெளிப்படுத்துகிறது. சரீரம் நம் புறம்பான பகுதி, இதைக்கொண்டு நாம் செயல்படுகிறோம், நடக்கிறோம், இதைக்கொண்டு நாம் பெளதிகக் காரியங்களைத் தொடர்புகொள்கிறோம். ஆத்துமா என்பது நம் ஆளுமையும் சுயமுமாகும், இது நம் சரீரத்துக்கும் நம் ஆவிக்கும் இடையே உள்ள பகுதி, இதைக்கொண்டு நாம் மனோதத்துவ காரியங்களைத் தொடர்புகொள்கிறோம். ஆவி நம் உள்ளான பகுதி, இதைக்கொண்டு நாம் தேவனை அறிகிறோம், ஆராதிக்கிறோம், இதைக்கொண்டு ஆவிக்குரிய காரியங்களைத் தொடர்புகொள்கிறோம். ஆகவே, ஆவி நம் ஆள்தத்துவத்தின் மையமாக உள்ளது, இது தேவனுக்கு முக்கியமானது, வானங்களையும் பூமியையும்விட அதிக முக்கியமானது (சக. 12:1).
கர்த்தரோடு ஒரே ஆவியாய் இணைக்கப்படுதல்
நாம் கர்த்தரோடு இணைக்கப்பட்டுள்ளதால், நாம் அவரோடு ஒரே ஆவியாயிருக்கிறோம் (1 கொரி. 6:17) நம் ஆவி மற்றும் கர்த்தரின் ஆவியின் கலந்திணைதலாகவுள்ள ஆவி, கர்த்தரின் ஆவியும் நம் ஆவியுமாக இருக்கிறது என்பதே இதன் அர்த்தம்; இது, நம் ஆவியோடு கலந்திணைந்துள்ள கர்த்தரின் ஆவியும், கர்த்தரின் ஆவியோடு கலந்திணைந்துள்ள நம் ஆவியும் ஆகும். நாம் இரட்சிக்கப்பட்டபிறகு உள்ள நம் ஆவிக்குரிய அனுபவங்கள் யாவும், கர்த்தருடனான நம் ஐக்கியம், அவரிடமான நம் ஜெபம், அவருடனான நம் வாழ்க்கை, அவருக்கான நம் கீழ்ப்படிதல் போன்றவை, கர்த்தரின் ஆவியும் நம் ஆவியும் ஒன்றாகக் கலந்திணைந்துள்ள இந்த ஆவியில் இருக்கின்றன (ஜீவ பாடங்கள், திரட்டு 3, பப. 41-43)
நம் அனுதின வாழ்க்கையில் நம் ஆவியைப் பயிற்சிசெய்ய வேண்டியிருத்தல்
நாம் நம் அன்றாட வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது, நாம் நம் ஆத்துமாவைக்கொண்டோ, நம் சரீரத்தைக்கொண்டோ, அல்லது நம் ஆவியைக்கொண்டோ செயல்படலாம். ஒரு சகோதரன் ஒரு நாள் முழுவதும் உழைத்துக் களைத்து வேலையிலிருந்து வீட்டிற்குத் திரும்பி வருகிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அவனது மனைவி புகார்கூறிக்கொண்டு அவனிடம் சந்தோஷமின்றி இருப்பதை அவன் காண்கிறான். இந்தச் சகோதரன் கீழ்க்காணும் மூன்று வழிகளுள் ஏதேனும் ஒன்றில் மாறுத்தரம் செய்யலாம். பிரபஞ்சளாவிய ரீதியில் பொதுவான முதல் வழி என்னவெனில், அவன் ஆத்துமாவில் குறிப்பாக மனதிலிருந்து அல்லது உணர்ச்சியிலிருந்து செயல்படலாம். இரண்டாவது சாத்தியக்கூறு என்னவென்றால், அவன் ஒரு பெளதிக வழியில் கோபமாகச் செயல்படலாம். மூன்றாவது மாற்றுவழி என்னவெனில், இந்தச் சகோதரன் தன் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவியைப் பயிற்சிசெய்து மாறுத்தரம் அளிப்பதாகும். நம் ஆவி மறுபடிஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறது, அது சகலத்தையும்-உள்ளடக்கிய ஜீவன்-தரும் ஆவியால் உள்வசிக்கப்படுகிறது என்பதை எல்லா விசுவாசிகளும் உணர்ந்தறிவது மிகவும் முக்கியம். தன் மனைவியோடு ஒரு சிரமத்தை எதிர்கொள்கின்ற இந்தச் சகோதரன் தன் ஆவியை இயக்கி, தன்னை வழிநடத்தும்படி ஜீவன்-தரும் ஆவியை அனுமதிக்க வேண்டும். அப்போது அவன் தன் மனைவியிடம் என்ன சொல்வது என்றும், எவ்வாறு நடந்துகொள்வது என்றும் அறிந்துகொள்ளுவான். இப்படிப்பட்ட ஒரு வழியில் வாழ்கின்ற ஒரு சகோதரனை உற்றுக்கவனிக்கின்ற எவனும், அவன் மற்ற சாதாரண கணவர்களிலிருந்து வித்தியாசமானவன் என்பதை உணர்ந்தறிவான். பெளதிகமாக செயல்பட தன் சரீரத்தைப் பயிற்சிசெய்வதற்குப் பதிலாக, அல்லது தன் ஆத்துமாவைப் பயிற்சிசெய்வதற்குப் பதிலாக, அவன் தன் ஆவியைப் பயிற்சி செய்கிறான். நாம் அனைவரும் நம் அன்றாட வாழ்க்கையில், குறிப்பாக நம் திருமண வாழ்க்கையிலும் குடும்ப வாழ்க்கையிலும் நம் ஆவியைப் பயிற்சிசெய்ய வேண்டும்.
கர்த்தரோடு ஒரே ஆவியாக இருப்பதின் மூலம் அவரைச் சகலத்தையும்-உள்ளடக்கியவராக அனுபவமாக்க வேண்டியிருத்தல்
நம்மிடம் ஒரு மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட ஆவி இருப்பதால், நாம் கிறிஸ்துவை நம் பங்காக அனுபவமாக்கி, இந்தக் கிறிஸ்துவின் ஐக்கியத்தை அனுபவமாக்கவும் முடியும். நம் ஆவி, ஆவியானவரால் மறுபடிஜெநிப்பிக்கப்படாமலும் ஆவியானவரால் உள்வசிக்கப்படாமலும் இருந்தது என்றால், கிறிஸ்து நம் பங்காக இருக்க முடியாது, நாம் கிறிஸ்துவின் ஐக்கியத்தில் இருக்கவும் முடியாது. மின்சார உபகரணங்கள் செயல்பட வேண்டும் எனில் அவற்றுக்கு மின் ஓட்டம் வேண்டியிருப்பது போலவே, நாம் கிறிஸ்துவை நம் பங்காக அனுபவமாக்கி, அவரது ஐக்கியத்தை அனுபவித்துமகிழ வேண்டும் என்றால் நாம் ஆவியில் இருந்தாக வேண்டும். மின் ஓட்டம் உபகரணங்களுக்குள் பாய்ந்தோடும்போது மட்டுமே உண்மையில் நாம் வெளிச்சத்தையோ, வெப்பத்தையோ, குளிர்ந்தக் காற்றையோ பெற முடியும். அது போலவே, கர்த்தரோடு ஒரே ஆவியாக இருப்பதின் மூலம் மட்டுமே நாம் அவரைச் சகலத்தையும்-உள்ளடக்கியவராக அனுபவமாக்க முடியும்.
1 கொரிந்தியர் 1:2 மற்றும் 9, கிறிஸ்து அவர்களுடையவராகவும் நம்முடையவராகவும் இருக்கிறார் என்றும், நாம் இந்தக் கிறிஸ்துவின் ஐக்கியத்திற்குள் அழைக்கப்பட்டிருக்கிறோம் என்றும் கூறுகின்றன. இந்த ஐக்கியம் ஆவியில் மட்டுமே இடம்பெறுகிறது. கர்த்தருடனே இணைந்திருக்கிறவன் அவருடனே ஒரே ஆவியாக இருக்கிறான் என்பதற்காக அவருக்கு ஸ்தோத்திரம்! ஆகவே நமக்கு ஓர் ஊற்றும், ஒரு சுனையும், ஒரு தீர்க்கமுடியா நீர்த்தேக்கமும் உள்ளது. இந்த ஊற்று, சகலத்தையும்-உள்ளடக்கிய ஜீவன்-தரும் ஆவியாகிய பதனிடப்பட்ட மூவொரு தேவனாகிய கிறிஸ்துவே. (Life-study of 1 Corinthians, pp. 109-110, 112)
References: ஜீவ பாடங்கள், திரட்டு 3, பாடம் 30; Life-study of 1 Corinthians, msg. 12
கர்த்தாவே ஆவியானீர், எம்
உள்ளான ஜீவனின் பல்வேறு அம்சங்கள்—இரண்டு ஆவிகளும் ஒன்றாக
745
1 கர்த்தாவே ஆவியானீர், எம்
ஆவியில் வாழ்கின்றீர்;
ஆவி இரண்டும் ஒன்றாகி,
ஒருமை தருதே.
2 உம் ஆவி எம் ஆவியோடு,
சாட்சி பகர்கின்றார்
யாம் பிதாவின் பிள்ளைகளும்
தேவ வாரிசென்றும்.
3 எம் ஆவியில் உம்மைத் தொட்டு
உம் வளங்கள் துய்ப்போம்,
ஆவியாய் உம்மை மாசின்றி
எமக்கு ஈகின்றீர்.
4 ஆவியில் நடந்து உம்மை
யாம் பின்தொடர்கின்றோம்,
ஆவியாய் வழி நடத்தி
ஒளி உட்பகிர்வீர்.
5 எம் ஆவியில், உம் ஆவியால்,
வாழ்ந்து ஆராதிப்போம்;
எம் ஆவியில் உம் ஆவியால்
பலப்படுத்துவீர்.
6 உம் ஆவியோடெம் ஆவியில்,
ஜெபம் ஏறெடுப்போம்,
வாக்குக்கெட்டா பெருமூச்சாய்,
நீர் எம்மில் வேண்டும்போழ்.
7 எம் ஆவிக்குத் திரும்புவோம்
அங்கும்மை சந்திக்க;
ஆவியில் நாம் பகிர்கின்றோம்
தெய்வ சொத்துரிமை.
8 என்னே ஒருமை, கர்த்தாவே,
இரு ஆவி இணைய!
உம் ஆவி எமதில் வாழ,
எமதும்மில் வாழும்!