மேய்த்துப்பேணுதல்
திரட்டு 4
ஆவியானவரும்
ஜீவனும்
பொருளடக்கம்
- ஜெபம்
- வேதம் வாசித்தல்
- ஆவிக்குரிய கூட்டாளிகள்
- ஆவியைப் பயிற்சிசெய்தல்
- பாடல்கள் பாடுதல்
- துதி
- ஜீவ உணர்வு
- ஜீவனின் ஐக்கியம்
- கர்த்தருடன் ஒரே ஆவியாயிருத்தல்
- ஆவியின்படி நடத்தல்
- மறுபடிஜெநிப்பிக்கப்படுதல்
- பரிசுத்தமாக்கப்படுதல்
- புதிதாக்கப்படுதல்
- மறுசாயலாக்கப்படுதல்
- ஒத்தசாயலாகுதல்
- மகிமையடைதல்
முகவுரை
புதிய விசுவாசிகளை மேய்த்துப்பேணுவதற்கான அடிப்படை செய்திகளை வழங்கும் ஆறு சிறு புத்தகங்கள் கொண்ட தொடரில் இதுவும் ஒன்று. இந்தச் சிறு புத்தகம் முற்றிலும் வாட்ச்மேன் நீ மற்றும் விட்னெஸ் லீ-யின் செய்திகளின் அடிப்படையிலானது. ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும் சில புத்தகத் தலைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன; அந்தந்தக் கருப்பொருளைக் குறித்து இன்னும் அதிகம் இந்தப் புத்தங்களில் வாசிக்கலாம். கவனிக்கவும்: CWWN மற்றும் CWWL முறையே, வாட்ச்மேன் நீ-யின் சேகரிக்கப்பட்ட படைப்புகள், விட்னெஸ் லீ-யின் சேகரிக்கப்பட்ட படைப்புகள் ஆகியவற்றைக் குறிக்கின்றன. வேத வசனங்களும் அடிக்குறிப்புகளும் இந்திய வேதாகம சங்கத்தால் வெளியிடப்பட்ட பரிசுத்த வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டப்பட்டுள்- ளன. சில வசனங்கள் அதிக துல்லியமான புரிந்துகொள்ளுதலுக்காக மூல மொழிகளாகிய எபிரேயு கிரேக்கு ஆகியவற்றிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டு மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அப்படிப்பட்ட வசனங்கள் பெரும்பாலும் (எபி.) அல்லது (கிரே.) என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. எல்லா செய்தி குறிப்புகளும் விட்னெஸ் லீ மற்றும் வாட்ச்மேன் நீ-யின் எழுத்துவடிவ ஊழியத்தின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்டுக் கூறப்படாத பட்சத்தில், ஊழியத்தின் பகுதிகள் யாவும் விட்னெஸ் லீ-யின் புத்தகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை, இவை, லிவிங் ஸ்டீரிம் மினிஸ்டீரியால் வெளியிடப்பட்டவை. அடைப்புக்குக் குறிக்குள் இருக்கும் பகுதிகள் [ ] தொகுப்பாளர்களால் மொழிபெயர்ப்பாளர்களால் சேர்க்கப்பட்டவை.