மேய்த்துப்பேணுதல்
திரட்டு 2
இரட்சிக்கப்பட்ட பிறகு
பாடம் எட்டு – தேவனுடைய வார்த்தையை ஜெப-வாசிப்பு செய்தல்
எபே. 6:17-18—இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். 18எந்தச் சமயத்திலும் சகல விதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியிலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மனஉறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுதலோடும் விழித்துக்கொண்டிருங்கள் (கிரே.).
வேதத்தின் வார்த்தைகளை தேவனிடம் நாம் ஜெபிக்கும் ஜெபமாகப் பயன்படுத்துதல்
ஆவியானவரே தேவனுடைய வார்த்தை என்று [எபேசியர் 6:17] சுட்டிக்காட்டுகிறது. ஆவியானவரும் வார்த்தையும் கிறிஸ்துவே (2 கொரி. 3:17; வெளி. 19:13).
எல்லாவிதமான ஜெபம் மற்றும் விண்ணப்பத்தின் மூலம் நாம் தேவனுடைய வார்த்தையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எபேசியர் 6:17 மற்றும் 18இன்படி, சகலவிதமான ஜெபத்தின் மூலம் நாம் தேவனின் வார்த்தையை எடுத்துக்கொள்ள வேண்டும். ஜெப-வாசித்தல் மூலம், அதாவது, வேதத்தின் வார்த்தைகளைத் தேவனிடமான நம் ஜெபமாகப் பயன்படுத்தி, வேத வாக்கியத்தின் வார்த்தையைக் கொண்டும் வார்த்தையைக் குறித்தும் ஜெபித்து வார்த்தையை நாம் எடுத்துக் கொள்ளலாம் என்று இந்த வசனங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஜெப-வாசிப்பு என்ற பதம் வேதத்தில் இல்லை. எனினும், ஜெப-வாசிப்பு என்ற உண்மை வேத வாக்கியங்களின்படியானது. (Life-study of Ephesians, p. 817)
ஜெபத்துடனும் ஜெபத்தின் மூலமும் வார்த்தையை வாசித்தலே வார்த்தையை
வாசிப்பதற்கான அதிசிறந்த வழியாக இருத்தல்
ஜெபத்துடனும் ஜெபத்தின் மூலமும் வார்த்தையை வாசிப்பதே, அதாவது வார்த்தையை ஜெப-வாசிப்பு செய்வதே வார்த்தையை வாசிப்பதற்கான அதிசிறந்த வழியாகும். வெறும் வாசித்தலுக்கு, நம் கண்களும், நம் மனத்திறனாகிய நம் புரிந்துகொள்ளுதலும் மட்டுமே தேவை. ஆனால் நம் ஆள்தத்துவத்தின் ஆழங்களுக்குள் தேவனுடைய வார்த்தையைப் பெறுவதற்கு, நம் ஆவி தேவை, நம் ஆவியைப் பயிற்சிசெய்வதற்கான மேலோங்குகிற வழி ஜெபித்தலே ஆகும். நாம் ஜெபிக்கும்போதெல்லாம், நாம் புறத்தூண்டுதலின்றி நம் ஆவியைப் பயிற்சிசெய்கிறோம். அப்போது, நம் கண்களைக் கொண்டு நாம் வாசிப்பதும், நம் மனத்திறனில் புரிந்துகொள்வதும் நம் ஜெபத்தின் மூலம் நம் ஆவிக்குள் செல்லும். வேதத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தைக்கும் நம் ஜெப-வாசித்தல் தேவை. (CWWL, 1987, vol. 2, “The God-ordained Way to Practice the New Testament Economy,” p. 375)
தேவனுடைய வார்த்தையை நம் ஆவியைக் கொண்டு ஜெப-வாசிப்பு செய்தல்
நாம் ஜெப-வாசிப்பு செய்து, நாம் பார்க்கிற அனைத்தையும், நாம் புரிந்துகொள்கிற அனைத்தையும் ஜெபமாக மாற்ற வேண்டும். நாம் ஜெபிக்கும்போது, நாம் நம் ஆவியைப் பயன்படுத்துகிறோம். ஜெபிப்பதற்கு முதலில் நாம் நம் மனதை பயன்படுத்தக் கூடும், ஆனால் மூன்று முதல் ஐந்து வாக்கியங்களுக்குப் பிறகு, நம் ஆவி மேலெழும்பும். இது ஒரு திட்டவட்டமான உண்மை. ஆகையால், தேவனுடைய வார்த்தையின் சாராம்சம் தேவனுடைய வெளிசுவாசித்தல் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். நீங்கள் அதை வாசிக்கும்போது, நீங்கள் அதை உள்சுவாசிக்க வேண்டும். தேவனுடைய பக்கத்தில், அது அவர் வெளிசுவாசிப்பதைப் பற்றிய காரியம்; நம் பக்கத்தில், இது நாம் உள்சுவாசிப்பதைப் பற்றிய காரியம். இந்த ஆவிக்குரிய சுவாசம் அவரிலிருந்து வெளிவந்து, நம்முள் நுழைகிறது. அவரிலிருந்து வெளிவந்து, நம்முள் நுழையும் அந்தக் காரியம் ஆவிக்குரிய சுவாசமாகும். தேவனுடைய வார்த்தை ஆவியும் ஜீவனுமாக இருக்கிறது. நம் மனம் ஆவியானவரைத் தொட முடியாது; நம் ஆவி மட்டுமே ஆவியானவரைத் தொட முடியும். நாம் ஆவியானவரைத் தொடாவிட்டால், நம்மிடம் ஜீவன் இல்லை. ஆவியானவரைத் தொடுவதன் மூலம் மட்டுமே நாம் ஜீவனைப் பெற முடியும். உச்சநிலையாக, இந்த ஜீவன் கிறிஸ்துவே, இது தேவனும் கூட.
முதலில், நாம் வாசித்ததை நாம் விளக்கிக்கூறத் தேவையில்லை, நாம் அதைப் புரிந்துகொள்ள வேண்டியதும் இல்லை; நாம் அப்படியே வார்த்தையை ஜெப-வாசிப்பு செய்ய மட்டுமே வேண்டும். நாம் ஜெப-வாசிப்பு செய்யும்போது, நம் ஆவி வேதத்தின் ஆவியானவரைத் தொடுகிறது, இவ்வாறு நாம் ஜீவனைப் பெறுகிறோம். (CWWL, 1985, vol. 4, “The Full Knowledge of the Word of God,” p. 145)
கர்த்தருடைய வார்த்தையை
ஜெப-வாசிப்புசெய்வதன் நடைமுறை
தனிப்பட்ட ஜெப-வாசிப்பு
இப்போது வார்த்தையிடம் வருவதற்கான நேர்த்தியான வழியை நாம் பார்க்க வேண்டும். இது என்ன? எபேசியர் 6:17-18இல் பதிவு செய்யப்பட்டுள்ளபடி நாம் தேவனுடைய வார்த்தையைப் பார்க்க வேண்டும். இந்தப் பகுதியின்படி நாம் தேவனுடைய வார்த்தையை எந்த வழியில் எடுத்துக்கொள்ள வேண்டும்? சகலவிதமான ஜெபம் மற்றும் விண்ணப்பத்தின் மூலம். இதைத்தான் நாம் ஜெப-வாசிப்பு என்று அழைக்கிறோம்! நாம் இதை மீண்டும் கூற வேண்டும்—தேவனுடைய வார்த்தை சகலவிதமான ஜெபத்தின் மூலம் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
எளிமையாக வேதத்தை எடுத்து, காலையிலும் மாலையிலும் ஒரு சில வசனங்களை ஜெப-வாசிப்பு செய்யுங்கள். சில வார்த்தைகளைக் கட்டாயமாக வெளியே கொண்டுவர உங்கள் மனதைப் பயிற்சி செய்ய வேண்டியதில்லை, நீங்கள் வாசிப்பதைக் குறித்து சிந்திப்பது அவசியமற்றது. நீங்கள் வாசிக்கிற அதே வார்த்தைகளைக் கொண்டு ஜெபியுங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வசனத்திலும் ஒரு ஜீவிக்கிற ஜெபம் இருக்கிறது.
நீங்கள் ஜெப-வாசிப்பு செய்யும்போது, உங்கள் கண்களை மூட வேண்டியதில்லை. நீங்கள் ஜெபிக்கும்போது, உங்கள் கண்களை வார்த்தையின் மீது வையுங்கள்….நாம் ஜெபிக்கும்போது, நாம் நம் கண்களை மூடத் தேவையில்லை என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். நாம் நம் மனதை மூடுவது சிறந்தது! நீங்கள் எந்த வாக்கியங்களையும் தொகுக்கவோ ஒரு ஜெபத்தை உருவாக்கவோ தேவையில்லை. வார்த்தையை ஜெப-ஜெபவாசிப்பு செய்யுங்கள், அதுபோதும். வேதத்தின் வார்த்தைகள் என்ன சொல்கின்றனவோ துல்லியமாக அதையே ஜெபியுங்கள். இறுதியில், முழு வேதமும் ஒரு ஜெப புத்தகம் என்பதை நீங்கள் காண்பீர்கள்! நீங்கள் வேதத்தின் எந்தப் பக்கத்தையும் திறந்து, வார்த்தையின் எந்தப் பகுதியுடனும் ஜெபிக்க ஆரம்பிக்கலாம்.
ஒருவேளை முழு ரோமர் புத்தகமும் உங்களுக்கு மிகப் பரிச்சயமாக இருக்கக்கூடும். ஆனால் இன்றும் கூட, நீங்கள் இன்னும் அதன் ஒன்று அல்லது இரண்டு வசனங்களை ஜெப-வாசிப்பு செய்ய வேண்டும். நாம் உணவைப் பற்றி எல்லாவற்றையும் அறிந்திருந்தாலும், நாம் இன்னும் தினமும் ஏதேனும் உணவை உட்கொள்ளத்தான் வேண்டும். நாம் அதைக் குறித்து எவ்வளவு அறிந்திருந்தாலும் சரி, நாம் இன்னும் புசித்தாகவே வேண்டும்! அறிவது என்பது வேறு, புசிப்பது என்பது வேறு….நீங்கள் பல ஆண்டுகள் ஒரு கிறிஸ்தவனாக இருந்திருக்கலாம், ஆனால் நீங்கள் எவ்வளவு காலம் ஒரு கிறிஸ்தவனாக இருந்தாலும்சரி, நீங்கள் இந்தப் புத்தகத்தை எத்தனை முறை வாசித்திருந்தாலும்சரி, நீங்கள் இன்னும் அதை வாசிக்க வேண்டியது மட்டுமல்ல, அதை ஜெப-வாசிப்பு செய்யவும் வேண்டும்! நீங்கள் தினந்தோறும் அதைப் புசிக்கவும், அதில் பங்குபெறவும், அதை அனுபவித்துமகிழவும் வேண்டும்.
மற்ற கிறிஸ்தவர்களுடன் ஜெப-வாசிப்பு செய்தல்
அதிக அனுபவமகிழ்ச்சி மற்றும் போஷாக்குக்காகவும், வார்த்தையை நேர்த்தியாகவும் போதுமான விதத்திலும் ஜெபவாசிப்பு செய்யவும், நமக்குச் சபையாகிய சரீரம் தேவை. நாம் தனிப்பட்ட ரீதியில் வார்த்தையை ஜெப-வாசிப்பு செய்வதை அனுபவித்து மகிழக்கூடும், ஆனால் இதை ஒரு குழுவாக மற்ற கிறிஸ்தவர்களுடன் நாம் முயற்சிசெய்தால், நாம் மூன்றாம் வானத்தில் இருப்போம். இதன் விளக்கம் என்னவென்றால், உணவு வெறுமனே ஓர் அவயவத்திற்காக மட்டும் அல்ல, முழுச் சரீரத்திற்காகவும் இருக்கிறது என்பதாகும்….ஆகையால், ஜெப-வாசிப்பு செய்வதற்கான அதிசிறந்த வழி சரீரத்தின் மற்ற அவயவங்களுடன் அதைச் செய்வதாகும். தனிப்பட்டரீதியில் ஜெப-வாசிப்பு செய்வதன் மூலம் நீங்கள் பயன்பெறுவீர்கள், ஆனால் மற்ற சகோதர சகோதரிகளுடன் கூடிவரும்போது, நீங்கள் வித்தியாசத்தைக் காண்பீர்கள்.
ஜெப-வாசிப்புக்கான நான்கு திறவுகோல்கள்—
துரிதம், சுருக்கம், நிஜம், பசுமை
மற்ற சகோதர சகோதரிகளுடன் ஜெப-வாசிப்பு செய்ய நாம் கூடிவரும்போது, நாம் நினைவில் வைக்க வேண்டிய நான்கு வார்த்தைகள் உள்ளன: துரிதம், சுருக்கம், நிஜம், பசுமை. முதலாவது, நாம் தயங்காமல், துரிதமாக ஜெபிக்க வேண்டும். ஜெபிப்பதற்கு நாம் துரிதமாக இருக்கும்போது, நாம் நம் மனதைப் பயன்படுத்தவும், பரிசீலிக்கவும் நேரம் இருக்காது. அடுத்து, நம் ஜெபங்கள் சுருக்கமாக இருக்க வேண்டும், ஏனெனில் நீளமான ஜெபங்களுக்கு தொகுத்தல் தேவை. நாம் ஒரு நீளமான ஜெபத்தைத் தொகுப்பதைக் குறித்து மறந்துவிட வேண்டும், ஒரு சொற்றொடர் அல்லது ஒரு வாக்கியத்தை மட்டுமே கூற வேண்டும். ஒரு துரிதமான, சுருக்கமான விதத்தில் அதைச் செய்யுங்கள். அதோடு, நாம் நிஜமாக இருக்க வேண்டும், பாசாங்கு செய்யக் கூடாது. ஒரு நிஜமான விதத்தில் எதோவொன்றைக் கூறுங்கள். இறுதியில், நம் ஜெபங்கள் பழமையாக அல்ல, பசுமையாக இருக்க வேண்டும். நம் சொந்த வார்த்தைகளைக் கொண்டு ஜெபிக்காமல், வேதத்தின் வார்த்தைகளைக் கொண்டு ஜெபிப்பதே பசுமையாக இருப்பதற்கான அதிசிறந்த வழி. இந்தப் புத்தகத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வரியும் ஒரு ஜெபமாகப் பயன் படுத்தப்படலாம், அதுவே அதிபசுமையான ஜெபமாக இருக்கும்.
தேவனுடைய வார்த்தையிடம் வருவதற்கான சரியான வழி இதுவே என்று ஆயிரக்கணக்கானோர் நிரூபித்திருக்கின்றனர். இது அவர்களின் வாழ்க்கைகளைப் புரட்சிகரமாக்கியிருக்கிறது. இது முதலில் சிறிது சங்கடமாகத் தோன்றக்கூடும், ஆனால் உண்மையான இருதயத்துடன் இதைப் பழகினால், நீங்கள் ஜீவிக்கும் ஆவியானவரைத் தொடுவீர்கள். நீங்கள் இதைத் தனிப்பட்டரீதியிலும், கூட்டானரீதியிலும் முயற்சிசெய்வீர்கள் என்றால், தேவனுடைய வார்த்தையை ஜெப-வாசிப்பு செய்வதன் மூலம் உங்களுக்கு உட்பகிரப்பட்டிருக்கும் கிறிஸ்துவின் ஐசுவரியங்களைக் குறித்து நீங்களே சாட்சிபகர முடியும். நீங்கள் உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கையில் ஆசீர்வாதத்தையும் வளர்ச்சியையும் காண்பீர்கள். ஒரு மாபெரும் மாற்றம் ஏற்படும். கிறிஸ்துவை அனுபவித்துமகிழவும், அவரால் போஷிக்கப்படவும் இவ்விதத்தில் வார்த்தையைத் தொடர்புகொள்வதன் மூலம், நீங்கள் ஜீவனால் நிறைந்து, இந்த ஜீவிக்கிறவரைக் கொண்டு பூரிதமாக்கப்பட்டு, முதிர்ச்சியடையும்படி வளர்கிற நபராக இருப்பீர்கள். (Pray-reading the Word, pp. 7-13)
References: Life-study of Ephesians, msg. 97; CWWL, 1987, vol. 2, “The God-ordained Way to Practice the New Testament Economy,” ch. 8; CWWL, 1985, vol. 4, “The Full Knowledge of the Word of God,” ch. 2; Pray-reading the Word
இதயத்தில் பசி, ஆவியில் தாகம்;
வார்த்தையை ஆழ்ந்து படித்தல்— வார்த்தையை உண்ணுதல் – 811
1 இதயத்தில் பசி, ஆவியில் தாகம்;
நிரப்பீடு தேடி நான் வருகிறேன்;
பசியும் தாகமும் தீர்த்திடவே,
நீரல்லால் வேறோன்றும் தேவையில்லை.
உணவாய், பானமாய் உம்மைத் தாரும்,
பசியும் தாகமும் தீர்த்தருளும்;
ஜீவ பெலனாய் எனக்கு இருந்தருளும்,
பசியும் தாகமும் தீர்த்தருளும்.
2 நீரே என் போஜனம், ஜீவத்தண்ணீர்
ஆவியை உயிர்ப்பித்துத் தாங்குகின்றீர்;
வாசித்து ஜெபித்து உம்மில் மகிழ
புசித்து குடிக்க வாஞ்சிக்கின்றேன்.
3 தேவ பூரண நிறை வார்த்தை நீர்,
ஜீவனாய் மாறிட ஆவியானீர்;
வார்த்தையில் உணவாய் இரசிக்கின்றேன்,
ஆவியாய்த் தண்ணீராய்க் குடிக்கின்றேன்.
4 வானத்திலிருந்து வந்த மன்னா,
பிளவுண்டு எனக்காய் பானமானீர்;
உணவாகத் தீராத நிரப்பீடு,
தண்ணீராய்ப் பாய்கின்ற நீரோடை நீர்.
5 உம் வார்த்தை ஆவியும் ஜீவனுமே,
உம் வார்த்தையில் உம்மைப் புசிக்கின்றேன்;
ஆவியாய் ஆவியில் ஜீவிக்கின்றீர்,
என் ஆவியில் உம்மைப் பருகுகின்றேன்.
6 வார்த்தையை ருசிக்க வருகின்றேன்,
என் பசி தீரும்வரைப் புசிக்க,
என் ஆவியில் உம்மிடம் திரும்பி,
என் தாகம் தீரும்வரைக் குடிப்பேன்.
7 உம்மை நான் பருகிப் புசிக்கின்றேன்,
வாசித்து உம்மை நான் புசிக்கின்றேன்;
ஜெபித்து உம்மைப் பருகுகின்றேன்,
வாசித்து ஜெபித்து மகிழ்கின்றேன்.
8 எவரும் கேட்டிடா ருசித்திடா
உன்னத விருந்தாய் இருக்கின்றீர்;
உம் ஆவியால் வெள்ளம்போலப் பாயும்
உம் வார்த்தையால் என்னை நீர் நிரப்பும்