மேய்த்துப்பேணுதல்
திரட்டு 2
இரட்சிக்கப்பட்ட பிறகு
பாடம் ஏழு – ஜீவ வார்த்தை
யோ. 6:63—ஆவியானவரே ஜீவன் தருகிறவர், மாம்சத்தால் எந்த இலாபமும் இல்லை; நான் உங்களிடம் பேசியிருக்கிற வார்த்தைகள் ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கின்றன (கிரே.).
2 தீமோ. 3:16, 17—வேத வாக்கியங்களெல்லாம் தேவன் சுவாசித்து ஊதியவை, அவை உபதேசத்துக்கும், கடிந்து கொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவை (கிரே.).
வேதத்தை அறிவதற்கான தேவை
நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு, ஆவிக்குரிய வளர்ச்சியைப் பெறுவதற்கு, நாம் வேதத்தை அறிய வேண்டும். வேதத்தை அறியாமல், ஒருவரும் கர்த்தரை நன்றாக அறிந்துகொள்ள முடியாது என்ற ஒரு காரியத்தை இரண்டாயிரம் ஆண்டுகளாகக் கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.
தேவன் நமக்குத் தந்திருக்கிற ஆவிக்குரிய சுதந்தரிப்பானது, ஒரு பக்கத்தில் காணப்படாத பரிசுத்த ஆவியையும், மறுபக்கத்தில் காணப்படும் பரிசுத்த வேதத்தையும் உள்ளடக்குகிறது. ஒரு பக்கம், ஆவியானவர் நமக்கு உள்ளே இருக்கிறார்; மறுபக்கம், வேத வாக்கியங்கள் நமக்கு வெளியே இருக்கின்றன. ஒரு நேர்த்தியான கிறிஸ்தவன் இந்த இரு பக்கங்களிலும் சமநிலையாக இருக்க வேண்டும்.
நீங்கள் உள்ளாகப் பரிசுத்த ஆவியைக் கொண்டு நிரப்பப்பட்டும், வெளியே வேதத்தை அறிந்தும் இருந்தால், அப்போது ஒரு கிறிஸ்தவனாக நீங்கள் ஜீவிக்கிறவர்களாகவும் நிலையானவர்களாகவும் இருக்கிறீர்கள், நீங்கள் துடிப்பாகவும், துல்லியமாகவும்கூட இருக்கிறீர்கள். நீங்கள் ஜீவிக்கிற மற்றும் நிலையான கிறிஸ்தவனாகவும், துடிப்பான மற்றும் துல்லியமான கிறிஸ்தவனாகவும் இருக்கிறீர்கள். (Truth Lessons—Level One, vol. 1, p. 2)
வேதவாக்கியம்—எல்லாம் தேவன்
சுவாசித்து ஊதியவை
“வேத வாக்கியங்களெல்லாம் தேவன் சுவாசித்து ஊதியவை, அவை உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும் சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவை” என்று [2 தீமோத்தேயு 3:16, கிரே.] கூறுகிறது. “வேத வாக்கியங்களெல்லாம் தேவன் சுவாசித்து ஊதியவை…அவை பிரயோஜனமுள்ளவை” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைகள், “தேவன் சுவாசித்து ஊதிய வேத வாக்கியம் ஒவ்வொன்றும் பிரயோஜனமுள்ளது” என்றும் மொழிபெயர்க்கப்படலாம். சபையின் சீரழிவில் மரணத்தையும், சீர்கேட்டையும், குழப்பத்தையும் எதிர்த்துப்போராட அதிகாரம் 1 ஆதாரமாகக் கொண்டுள்ள நித்திய ஜீவனும் (வவ. 1, 10), அதிகாரம் 2இல் வலியுறுத்தப்படும் தெய்வீக சத்தியமும் (வவ. 15, 18, 25), அதிகாரம் 3இல் உயர்வாய்க் கருதப்படும் பரிசுத்த வேத வாக்கியமும் (வவ. 14-17) தேவை. நித்திய ஜீவன் மரணத்தை விழுங்குவது மட்டுமல்லாமல், ஜீவ நிரப்பீட்டையும் வழங்குகிறது; தெய்வீக சத்தியமானது, சீர்கேட்டின் மாயையை எல்லா தெய்வீக ஐசுவரியங்களின் நிஜத்தைக் கொண்டு இடமாற்றம்செய்கிறது; பரிசுத்த வேத வாக்கியம் குழப்பத்தைத் துரத்துவது மட்டுமல்லாமல், தெய்வீக ஒளியையும் வெளிப்பாட்டையும் தருகிறது. எனவே, இந்தப் புத்தகத்தில் அப்போஸ்தலன் இந்த மூன்று காரியங்களை வலியுறுத்துகிறான்.
தேவனுடைய வார்த்தையாகிய வேத வாக்கியம் தேவனுடைய சுவாசமாக இருக்கிறது. தேவனுடைய பேசுதல் தேவனுடைய சுவாசித்தலாகும். எனவே, அவருடைய வார்த்தை ஆவியாக, நியூமாவாக, அல்லது சுவாசமாக இருக்கிறது (யோ. 6:63). இவ்வாறு வேத வாக்கியம் ஆவியானவராக இருக்கும் தேவனுடைய ஊனுருவாக இருக்கிறது. பாஸ்பரஸ், தீக்குச்சிகளின் அடிப்படை சாரப்பொருளாக இருப்பதுபோல, ஆவியானவர் வேத வாக்கியத்தின் சாட்சாத்து சாராம்சமாக, சாரப்பொருளாக இருக்கிறார். நாம் தெய்வீக அக்கினியைத் தூண்டிவிட வேத வாக்கியத்தின் ஆவியானவரை நம் ஆவியைக்கொண்டு “உரச” வேண்டும்.
ஆவியாகிய தேவனின் ஊனுருவாக வேத வாக்கியம் கிறிஸ்துவின் ஊனுருவாகவும் இருக்கிறது. கிறிஸ்து தேவனுடைய ஜீவிக்கும் வார்த்தை (வெளி. 19:13), வேதவாக்கியம் தேவனுடைய எழுதப்பட்ட வார்த்தை (மத். 4:4). (Life-study of 2 Timothy, pp. 50-51)
எழுதப்பட்ட வார்த்தை
ஜீவிக்கும் வார்த்தையாகுதல்
கர்த்தர் ஜீவிக்கும் வார்த்தையாக இருக்கிறார், வேதம் எழுதப்பட்ட வார்த்தையாக இருக்கிறது. எழுதப்பட்ட வார்த்தையும் ஜீவிக்கும் வார்த்தையும் இரண்டு வித வார்த்தைகளா? எழுதப்பட்ட வார்த்தை ஜீவிக்கும் வார்த்தையிலிருந்து வேறுபட்ட ஒன்று என்று நாம் கருதினால், எழுதப்பட்ட வார்த்தை நமக்கு, செத்த அறிவாக இருக்கும். எழுதப்பட்ட வார்த்தை ஜீவிக்கும் வார்த்தையிலிருந்து பிரிக்கப்பட முடியாது, அது ஜீவிக்கும் வார்த்தையுடன் ஒன்றாக இருக்க வேண்டும்.
வேதத்தின் ஒவ்வொரு வசனத்துடனும் நாம் இவ்விதத்தில் இடைபட வேண்டும். நம் கண்களால் நாம் அதை வாசிக்கிறோம், நம் மனதால் புறத்தூண்டுதலின்றி அதைப் புரிந்துகொள்கிறோம், எழுதப்பட்ட அந்த வார்த்தையை, கிறிஸ்துவாகிய, ஜீவிக்கும் வார்த்தையாக மாற்றுவதற்கு, ஆவியைப் பயிற்சிசெய்து அதனுடன் இடைபடுகிறோம். ஏதோவொன்றைச் செய்ய உங்களுக்கு உதவும்படி கர்த்தரிடம் கேட்கும் விதத்தில் ஒருபோதும் ஜெபிக்காதீர்கள். அது தவறான வழி. இதற்குப் பதிலாக, எப்போதும் அவரது வார்த்தையின் நிறைவேற்றமாக அவரை எடுத்துக்கொள்ளுங்கள். நாம் ஒருவரையொருவர் நேசிக்க வேண்டும் என்று கூறுகிற யோவான் 15:12ஐ நீங்கள் வாசிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். “கர்த்தாவே, நான் என் சகோதரனை நேசிக்க வேண்டும். ஆனால் கர்த்தாவே, நான் பலவீனன் என்று உமக்குத் தெரியும். கர்த்தாவே, நேசிக்க எனக்கு உதவிச்செய்யும்” என்று ஜெபிக்காதீர்கள். இந்த ஜெபத்திற்குப் பிறகு, சகோதரர்களை நேசிக்க நீங்கள் உங்கள் மனதைத் தயார்ப்படுத்துவீர்கள், நீங்கள் அம்பலமாக்கப்பட்டு, தோல்வியைடைவீர்கள். நீங்கள் தோல்வியைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்கக் கூடாது. நீங்கள் ஒரு குறுகிய காலம் வெற்றி பெறக்கூடும், ஆனால் இறுதியில் நீங்கள் தோல்வியடைவீர்கள். நீங்கள் வெற்றியடைந்தாலும் கூட, அதற்கு எந்த அர்த்தமும் இருக்காது, அதற்கு எந்த மதிப்பும் இருக்காது.
வேதத்தின் வார்த்தையானது, [கர்த்தரை அனுபவித்துமகிழ்தல் என்ற விதத்தில்] கையாளப்படவும் எடுத்துக்கொள்ளப்படவும் வேண்டும். அப்போது வார்த்தையை வாசிப்பதன் மூலம், நாம் நிஜமாகக் கர்த்தரைப் புசித்து விருந்துண்ணுவோம். அப்போது எழுதப்பட்ட வார்த்தை ஜீவிக்கும் வார்த்தையாக, அதாவது கிறிஸ்துவாகவே ஆகும். கிறிஸ்துவும் வேதமும் ஒன்றாக இருக்கும். நாம் இதை ருசித்துப் பார்க்க வேண்டும். இவ்விதத்தில் கர்த்தருடைய வார்த்தையைத் தொடர்புகொள்வதற்கு நாம் சகோதர சகோதரிகளுக்கு உதவ வேண்டும். கர்த்தருடைய இரக்கத்தால் நாம் வேதத்தை அறிவு விருட்சமாக அல்ல, மாறாக ஜீவ விருட்சமாகிய ஜீவ புத்தகமாகக் கைக்கொள்ள வேண்டும். அறிவு இறுமாப்படையச் செய்கிறது (1 கொரி. 8:1). பல கிறிஸ்தவர்கள் எவ்வளவாய் வேதத்தைக் கற்கின்றனரோ அவ்வளவாய் இறுமாப்படைகின்றனர். மற்றவர்களை ஆக்கினைத்தீர்க்கவும், விமர்சிக்கவுமே அவர்கள் அறிவைப் பெறுகின்றனர். செத்த எழுத்துக்களிலுள்ள மிகையான அறிவு அகந்தையை உண்டாக்குகிறது. இந்த ஜீவிக்கிற புத்தகத்தை செத்த எழுத்துக்களாலான ஒரு புத்தகமாக்காதீர்கள். எழுத்து கொல்லுகிறது என்று பவுல் கூறுகிறான் (2 கொரி. 3:6). எழுத்தினாலான வேதம் கொல்லுகிறது என்பதே இதன் பொருள். நாம் வேதத்தை எழுத்தினாலான ஒன்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது. நாம் வார்த்தையை ஜீவனாலான ஆவியாலான ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டும். நாம் எல்லாரும் கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப் பார்ப்போமாக. (CWWL, 1965, vol. 2, “The Tree of Life,” pp. 170, 172-173)
வேதம் விசுவாசிகளின் ஜீவ அப்பமாக இருத்தல்
வேத வார்த்தை நம் ஆவிக்குரிய ஜீவ அப்பமாகவும் இருக்கிறது (மத். 4:4). நம் பெளதிக ஜீவனுக்குப் போஷாக்கு தேவைப்படுவதுபோல, நம் ஆவிக்குரிய ஜீவனுக்கும் போஷாக்கு தேவை. நம் ஆவிக்குரிய ஜீவனுக்கான போஷாக்கு வேதத்தின் வார்த்தை மூலமாக மட்டுமே வழங்கப்பட முடியும். நாம் தேவனுக்கு முன் ஜீவிக்கிறவர்களாகவும் பலமாகவும் இருப்பதற்கு, அப்பத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது, மாறாக ஒவ்வொரு வார்த்தையையும், அதாவது, தேவனுடைய வாயினூடாகப் புறப்படுகிற வேத வார்த்தையையும் சார்ந்திருக்க வேண்டும். நாம் வேத வார்த்தையை நம் உணவைவிட அதிக முக்கியமானதாகக் கூட கருதி (யோபு 23:12), தேவனுடைய வார்த்தையை உணவாக எடுத்துக்கொண்டு, அதைப் புசிக்க வேண்டும் (எரே. 15:16). இல்லையெனில், நம் ஆவிக்குரிய ஜீவன் வளர முடியாது. வியாக்கியானிக்கக் கடினமான வார்த்தைகளைப் புரிந்துகொள்ளக்கூடியவர்களாக நாம் இருக்குமாறு, அதாவது, முதிர்ந்தவர்களைப் போன்று நாம் திடமான உணவைப் புசிக்கக் கூடுமாறு (எபி. 5:13-14) வேதத்தின் வார்த்தையைக் கிரகித்துக்கொள்வதில் நம் புலன்களைப் பயிற்சிசெய்வதை நாம் நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையெனில் நம் ஆவிக்குரிய வாழ்க்கை பலமாக இருக்க முடியாது. (Truth Lessons—Level One, vol. 1, pp. 4-6)
கர்த்தருடைய வார்த்தை
ஆவியாகவும் ஜீவனாகவும் இருத்தல்
தேவனுடைய வார்த்தையானது, பலருக்கு வெறுமனே இறையியல் அறிவாக இருக்கிறது; அது அவர்களுக்கு ஜீவனாக இல்லை. ஆனால் தம் வார்த்தை ஆவியாகவும் ஜீவனாகவும் இருக்கிறது என்று கர்த்தர் கூறுகிறார். தேவனுடைய வார்த்தை நம் ஆவியையும் நம் ஜீவனையும் தொடுகிறது; இது நம் மனதுடன் தொடர்புடையதல்ல. மனம் புரிந்துகொள்வதில்லை என்பது ஒரு சிறிய காரியமே. ஒரு புத்தகத்தை வாசிப்பதில், அல்லது ஒரு பிரசங்கத்தைக் கேட்பதில், நாம் உள்ளாக ஆவியையும் ஜீவனையும் தொட்டிருக்கிறோமா அல்லது நாம் மனதைத் தொட்டிருக்கிறோமா என்பதை நாம் உடனடியாகக் கூற முடியும். நாம் அறிவை மட்டுமே கேட்டிருந்தால், அதன் விளைவு மரணம், நாம் உள்ளாக அசெளகரியமாக உணர்கிறோம். நாம் ஆவியையும் ஜீவனையும் கேட்டிருந்தால், அதன் விளைவு ஜீவனும் உள்ளில் நிச்சயமும் ஆகும். (CWWN, vol. 45, p. 1016)
References: Truth Lessons—Level One, vol. 1, ch. 1; Life-study of 2 Timothy, msg. 6; CWWL, 1965, vol. 2, “The Tree of Life,” ch. 11; CWWN, vol. 45, ch. 141
SPEAK, LORD, IN THE STILLNESS
Study of the Word— Seeking for the Word
809
- Speak, Lord, in the stillness,
While I wait on Thee;
Hushed my heart to listen,
In expectancy. - Speak, O blessed Master,
In this quiet hour;
Let me see Thy face, Lord,
Feel Thy touch of power. - For the words Thou speakest,
They are life indeed;
Living bread from heaven,
Now my spirit feed! - All to Thee is yielded,
I am not my own;
Blissful, glad surrender,
I am Thine alone. - Speak, Thy servant heareth,
Be not silent, Lord;
Waits my soul upon Thee
For the quickening word. - Fill me with the knowledge
Of Thy glorious will;
All Thine own good pleasure
In Thy child fulfill. - Like a watered garden.
Full of fragrance rare,
Lingering in Thy presence,
Let my life appear.