மேய்த்துப்பேணுதல்

திரட்டு 2

இரட்சிக்கப்பட்ட பிறகு

பாடம் ஆறு – ஆவியில் நிரப்பப்படுதல்

அப். 2:2—அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடிதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று.
எபே. 5:18—துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியில் நிறைந்து;

ஆவியில் நிரப்பப்படுதல் என்பதன் பொருள்

மனித ஆவி மனித சரீரத்தைவிட அதிக முக்கியமானது. இதனால்தான் எபேசியர் 5:18, “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியில் நிறைந்து” என்று கூறுகிறது. தேவனுடைய சகல நிறைவுக்கென்று நாம் கிறிஸ்துவைக் கொண்டு நிரப்பப்பட வேண்டும் (1:23; 3:19, கிரே.). இன்று கிறிஸ்துவின் ஐசுவரியங்கள் அனைத்தும் ஜீவன்-தரும் ஆவியில் உள்ளடங்கியுள்ளன (1 கொரி. 15:45, 2 கொரி. 3:17). நம் ஆவியில் நிரப்பப்படுவதென்றால், சாராம்சத்தின் ஆவியானவரைக் கொண்டு நிரப்பப்படுவதாகும். சாராம்சத்தின் ஆவியானவர் ஜீவன்-தரும் ஆவியாக இருக்கிறார், இந்த ஜீவன்-தரும் ஆவி யோவான் 14:17இல் குறிப்பிடப்படும் கிறிஸ்துவின் நிஜமாக்குதலாகவுள்ள நிஜத்தின் ஆவியானவராக இருக்கிறார். கிறிஸ்து நம் இருதயங்களில் தம் வீட்டை அமைக்க விரும்புகிறார் என்று எபேசியர் 3:17 கூறுகிறது. நாம் நம் ஆவியில் சாராம்சத்தின் ஆவியானவரைக் கொண்டு முழுவதும் நிரப்பப்படும்போது, மூவொரு தேவனின் ஊனுருவாகிய கிறிஸ்து நம் இருதயத்தை ஆக்கிரமித்து, தம் வீட்டை நம் இருதயத்தில் அமைப்பார். மூவொரு தேவனின் உச்சநிலை முழுநிறைவேற்றமாகிய சாராம்சத்தின் ஆவியானவரைக் கொண்டு அனுபவம்சார்ந்தரீதியில் நாம் நம் ஆவியில் நிரப்பப்படும்போதும், மூவொரு தேவனின் ஊனுருவாகக் கிறிஸ்து நம் இருதயங்களை முழுவதும் ஆக்கிரமித்து, உடமையாக்கி, அவற்றில் தம் வீட்டை அமைக்கும்போதும், நாம் மூவொரு தேவனைக் கொண்டு முழுவதுமாக நிரப்பப்பட்டு, அவரால் ஆக்கிரமிக்கப்படுகிறோம் என்பதே அதன் விளைவாக இருக்கும். ஆவியானவருடைய நிரப்புதலின் உட்கருத்து இதுவே.

ஆவியில் நிரப்பப்படுவதற்கான வழி
முழுமையான ஜெபம் மற்றும் அறிக்கைசெய்தல் மூலமாக

நாம் எவ்வாறு மூவொரு தேவனைக் கொண்டு நிரப்பப்பட முடியும்? முழுமையான ஜெபம் மற்றும் அறிக்கைசெய்தல் மூலம் நாம் மூவொரு தேவனைக் கொண்டு நிரப்பப்பட முடியும்….[உங்கள் அர்ப்பணத்தைப் புதுப்பிப்பது] நல்லது, ஆனால் நீங்கள் தனியாகக் கர்த்தருக்கு முன் முழங்கால்படியிடவும், முழுமையாக ஜெபிக்கவும், அறிக்கையிடவும்கூட உங்கள் பரபரப்பான வாழ்க்கையின் மத்தியில் சிறிது நேரத்தைக் கண்டுபிடிக்கவும் வேண்டும். இது மிகவும் விலையேறப்பெற்றது. இந்த நேரத்தின் ஆரம்பத்தில், “கர்த்தாவே என்னை மன்னியும். நீர் என்னுடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்திருந்தாலும், ஒரு முழுமையான அறிக்கைசெய்தலும், ஒரு முழுமையான இடைபடுதலும் எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை. இன்று என்னுடைய பாவங்கள் அனைத்தையும் முழுமையாக உமக்கு முன் அறிக்கைசெய்ய விரும்புகிறேன். தயவுசெய்து என்மீது பிரகாசியும்!” என்று நீங்கள் கர்த்தரிடம் கூறலாம்.
நீங்கள் இவ்விதத்தில் ஜெபிக்கும்போது, உணர்வைத் தேடாதீர்கள். கர்த்தருடைய ஆவியானவர் உங்களுடன் இருக்கிறார் என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். நீங்கள் ஒரு வரிசைக்கிரமத்தின் படியும் அறிக்கைசெய்ய வேண்டியதில்லை. உள்ளாக நீங்கள் என்ன உணர்கிறீர்கள் என்பதன்படியும், உங்களுக்கு நினைவு இருக்கிறதின்படியும் அறிக்கை செய்யுங்கள். உங்கள் உள்ளார்ந்த உணர்வின்படியும், உங்கள் நினைவின்படியும் இதற்குமேல் அறிக்கைசெய்வதற்கு ஒன்றுமில்லை என்று ஆகும்வரை ஒன்றன்பின் ஒன்றாக உங்கள் பாவங்களை அறிக்கை செய்யுங்கள். நீங்கள் இதைச் செய்தவுடன், மூவொரு தேவனின் உச்சநிலை முழுநிறைவேற்றத்தைக் கொண்டு உங்கள் ஆவியில் நீங்கள் நிரப்பப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் எளிமையாக விசுவாசிக்க வேண்டும். (CWWL, 1985, vol. 5, “Vessels Useful to the Lord,” pp. 103, 105)

கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவதன் மூலமும், நாள் முழுவதும் கர்த்தரைப் பேசுவதன் மூலமும் ஆவியானவரைக் கொண்டு நிரப்பப்படுவதைப் பயிற்சிசெய்தல்

நாம் காலையில் எழும்போது, நாம் செய்யக்கூடிய அதிசிறந்த காரியம், மற்ற காரியங்களைப் பற்றிச் சிந்திக்காமல், கர்த்தராகிய இயேசுவைப் பற்றியே சிந்திப்பதேயாகும். இதைப் பற்றிப் பேசுவது எளிது, ஆனால் இதை நடைமுறைப்படுத்துவது எளிதல்ல. இது ஏனெனில், நம் எல்லாரிடமும், நம் இருதயங்களை நிரப்புகிற பல காரியங்கள் இருக்கின்றன. ஆனாலும்கூட, நாம் இதை இன்னும் நடைமுறைப்படுத்த வேண்டும். காலையில் இவ்விதத்தில் நீங்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட வேண்டும். பின்னர், அந்த நாள் முழுவதும் கர்த்தரைப் பேசுவதை நீங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். உங்களுடன் ஒருவரும் இல்லாதபோது, நீங்கள் கர்த்தராகிய இயேசுவை நோக்கிக் கூப்பிட வேண்டும்; உங்களுடன் மற்றவர்கள் இருக்கும்போது, நீங்கள் அவர்களிடம் கர்த்தராகிய இயேசுவைப் பேச வேண்டும். இறுதியில், நீங்கள் சுவாசிப்பதும் கர்த்தராகிய இயேசுவாகத்தான் இருக்கும், நீங்கள் பேசுவதும் கர்த்தராகிய இயேசுவாகத்தான் இருக்கும். அப்போது ஆவியாயிருக்கிற மூவொரு தேவனைக் கொண்டு நீங்கள் நிச்சயமாக நிரப்பப்படுவீர்கள்…இது ஒரு மிக இயல்பான காரியம். இது நம் இயல்பான தினசரி வாழ்க்கையாக இருக்க வேண்டும். (CWWL, 1987, vol. 2, “Words of Training for the New Way,” pp. 163-164)

பரிசுத்த ஆவியின் நிரப்புதலைப்
பராமரிப்பதற்கான இரகசியங்கள்

ஆவியானவரை அணைத்துப்போடாதிருத்தல்

நாம் பரிசுத்த ஆவியைக் கொண்டு நிரப்பப்பட்ட பிறகு, அந்த நிரப்புதலைப் பராமரிக்க நாம் இன்னும் ஒரு சில காரியங்களைச் செய்ய வேண்டும். முதலில், நாம் ஆவியானவரை அணைத்துப்போடக் கூடாது (1 தெச. 5:19). ஆவியானவர், நாம் ஆவியில் எரிந்து கொண்டிருக்கும்படிச் செய்கிறார் (ரோ. 12:11), நம்மிலுள்ள வரத்தை அனல்மூட்டி எழுப்பிக் கொண்டிருக்கிறார் (2 தீமோ. 1:6). எனவே, நாம் ஆவியானவரை அணைத்துப்போடக் கூடாது.

பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருத்தல்

இரண்டாவது, நாம் பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தக் கூடாது (எபே. 4:30). பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்துவதென்றால், அவருக்கு அதிருப்தியூட்டுவதும், நம் தினசரி நடையில் அவரின்படி நடக்காதிருப்பதுமாகும் (ரோ. 8:4). பரிசுத்த ஆவி துக்கமடைகிறாரா என்பதை நாம் எவ்வாறு அறிகிறோம்? நம் வாழ்க்கையினால் நாம் அறிய முடியும். நாம் நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இல்லையென்றால், இது பரிசுத்த ஆவி நம்மில் துக்கப்படுகிறார் என்பதற்கான ஓர் அடையாளமாகும். பரிசுத்த ஆவி நம்மில் துக்கப்பட்டுக் கொண்டிருப்பதால், நாம் மகிழ்ச்சியாக இல்லை. நாம் மகிழ்ச்சியாக இருந்தால், இது, நம்மில் பரிசுத்த ஆவியும் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. தன் முழு ஆள்தத்துவமும் புத்துணர்வூட்டப்பட்டு, தன் இருதயம் இலேசாகி, மகிழ்ச்சியால் நிறையும் அளவுக்கு தான் ஜெபித்ததாக ஒரு சகோதரி சாட்சிபகர்ந்தாள். இது அவளில் பரிசுத்த ஆவி மகிழ்ச்சியாக இருந்தார் என்பதற்கான ஓர் நிரூபணம். எனவே, பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருப்பது, உங்களையே துக்கப்படுத்திக்கொள்ளாதிருப்பதாகும்.

பரிசுத்த ஆவிக்குக் கீழ்ப்படிதல்

மூன்றாவது, நேர்மறையான பக்கத்தில், நாம் பரிசுத்த ஆவிக்குக் கீழ்ப்படிய வேண்டும். “தேவன் தமக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்குத் தந்தருளின பரிசுத்த ஆவி” (வ. 32) என்று நடபடிகள் 5ல் பேதுரு கூறினான். பரிசுத்த ஆவி நாம் கீழ்ப்படிவதற்காக இருக்கிறார் என்று இது காட்டுகிறது. கீழ்ப்படிதல், பரிசுத்த ஆவியை நாம் அனுபவித்துமகிழ்வதற்கான வழியும் கோரிக்கையும் ஆகும். “மாம்சத்தின்படி நடவாமல் ஆவியின்படி நட” என்று ரோமர் 8:4 கூறுகிறது. இது பரிசுத்த ஆவியைக் கொண்டு நிரப்பப்படுவதற்கான வழியும், பரிசுத்த ஆவியைக் கொண்டு நிரப்பப்படுகின்ற ஒரு வாழ்க்கையைப் பராமரிப்பதற்கான கோரிக்கையும் ஆகும். நாம் இந்த வசனங்களைப் படிப்பது மட்டுமல்லாமல், நம் அனுதின வாழ்க்கையில் அவற்றை நடைமுறைப்படுத்தவும் வேண்டும். (CWWL, 1985, vol. 5, “Vessels Useful to the Lord,” pp. 141-142)

References: CWWL, 1985, vol. 5, “Vessels Useful to the Lord,” chs. 7, 10, 12; CWWL, 1987, vol. 2, “Words of Training for the New Way,” chs. 9, 12

FILL ME WITH THY GRACIOUS SPIRIT

Fullness of the Spirit— The Filling

267

  • Fill me with Thy gracious Spirit,
    Fill my longing spirit now;
    Fill me with Thy hallowed presence,
    Come, dear Lord, and fill me now!

Fill me now! Fill me now!
Fill me with Thy Spirit now!
Strip me wholly, empty throughly,
Fill me with Thy Spirit now!

  • Thou can’st fill me with Thy Spirit,
    Though I cannot tell Thee how;
    But I need Thee, greatly need Thee;
    Come, dear Lord, and fill me now!
    Fill me now! Fill me now!
    Fill me with Thy Spirit now!
    Strip me wholly, empty throughly,
    Fill me with Thy Spirit now!
  • I am weakness, full of weakness;
    At Thy sacred feet I bow;
    By Thy blest, eternal Spirit,
    Fill with strength, and fill me now!
    Fill me now! Fill me now!
    Fill me with Thy Spirit now!
    Strip me wholly, empty throughly,
    Fill me with Thy Spirit now!
  • Cleanse and comfort, bless and save me;
    Fill my broken spirit now!
    Thou art comforting and saving,
    Thou art sweetly filling now.
    Fill me now! Fill me now!
    Fill me with Thy Spirit now!
    Strip me wholly, empty throughly,
    Fill me with Thy Spirit now!