மேய்த்துப்பேணுதல்

திரட்டு 2

இரட்சிக்கப்பட்ட பிறகு

பாடம் நான்கு – கலந்திணைந்த ஆவி

2 தீமோ. 4:22—கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக.
1 கொரி. 6:17—அப்படியே கர்த்தரோடிணைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.

“அப்படியே கர்த்தரோடிணைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்” என்று 1 கொரிந்தியர் 6:17 கூறுகிறது. இன்று கிறிஸ்து ஜீவன்-தரும் ஆவியாக இருப்பதாலும், நம்மிடம் மனித ஆவி என்னும் உள்ளான பகுதி இருப்பதாலும், இவ்விரு ஆவிகளும் ஒன்று சேர்ந்து, கலந்திணைந்து, ஒரே ஆவியாகின்றன. கர்த்தரோடு இணைந்திருக்கிறவன் ஒரே ஆவியாயிருக்கிறான். இப்போது நமக்கு ஒரு கலந்திணைந்த ஆவி இருக்கிறது. இது பரிசுத்த ஆவியா அல்லது மனித ஆவியா என்பதைச் சொல்வது கடினம், ஏனெனில், இந்த இரு ஆவிகளும் ஒன்றாகக் கலந்திணைந்துவிட்டன. ஆவியின்படி நடக்குமாறு ரோமர் 8:4 நமக்குக் கூறுகிறது. இது என்ன ஆவி? நாம் பரிசுத்த ஆவியின்படி மட்டுமல்ல, மனித ஆவியின்படி மட்டுமல்ல, கலந்திணைந்த ஆவியின்படியும் நடக்க வேண்டும். இப்போது பரிசுத்த ஆவியும் மனித ஆவியும் ஒன்றாகக் கலந்திணைந்துவிட்டன. இங்கு, இந்தப் பூமியில், இந்தப் பிரபஞ்சத்தில், ஜீவன்-தரும் ஆவியாகிய கிறிஸ்து நம்முடன் ஒன்றாயிருக்கிற ஒரு குறிப்பான இடம் உள்ளது. இப்போது நாம் இந்த அற்புதமான, கலந்திணைந்த ஆவியின்படியே நடக்கிறோம். கிறிஸ்து நம் ஆவிக்குள் இருக்கும் ஜீவன்தரும் ஆவியாக இருக்கிறார். (CWWL, 1965, vol. 3, “Our Human Spirit,” pp. 225-226)

ஆவியானவர் நம் ஆவியுடன் சாட்சிகொடுத்தல்

“நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்” என்று ரோமர் 8:16 கூறுகிறது. தேவனுடைய ஆவி இருக்கிறார் என்றும், நம் ஆவியும் இருக்கிறது என்றும், இவ்விரு ஆவிகளும் ஒன்றாக இருக்கின்றன என்றும் இந்த வசனம் நமக்குத் தெளிவாகச் சொல்லுகிறது. ஆவியானவர்தாமே நம் ஆவியுடன் சாட்சிகொடுக்கிறார். இரு ஆவிகளும் ஒன்றாகச் சேர்ந்து வேலைசெய்கின்றன. (CWWL, 1965, vol. 3, “Our Human Spirit,” p. 247)

கர்த்தருடன் ஒரே ஆவியாயிருத்தல்

வேதத்திலுள்ள மாபெரும் வசனங்களுள் ஒன்றான 1 கொரிந்தியர் 6:17, “கர்த்தரோடிணைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்” என்று கூறுகிறது. இந்த வசனம் மறைவாகக் காட்டும் உட்கருத்துக்கள் ஆச்சரியமானவை, தொலை தூரம் எட்டக்கூடியவை. விசுவாசிகளாகிய நாம் கர்த்தரோடு ஒரே ஆவியாயிருக்கிறோம். என்னே பிரம்மாண்டமானது! நாம் அவரில் இருக்கிறோம், அவர் நம்மில் இருக்கிறார் என்பதை இது மறைவாகக் காட்டுகிறது. ஜீவனில் ஒன்றாகும்படி, நாமும் அவரும் கலந்திணைந்திருக்கிறோம், ஜீவாதாரமாக இழைந்திணைந்திருக்கிறோம் என்பதையும் இது மறைவாகக் காட்டுகிறது. கர்த்தருடன் ஒரே ஆவியாயிருப்பது என்பது, நாமும் அவரும் ஒரு ஜீவிக்கிற வஸ்து என்பதை மறைவாகக் காட்டுகிறது.நாம் கர்த்தருடன் ஒரே ஆவியாயிருக்கிறோம் என்று கூறுவதற்கு, தேவத்துவத்தில் நமக்கு ஏதேனும் பங்கு இருக்கிறது என்று ஒருபோதும் அர்த்தமல்ல. எனினும் நிச்சயமாக, மனுஷீகத்தோடு தெய்வீகம் கலந்திணைவதை அது மறைவாகக் காட்டுகிறது. பாடல்கள் #501இன் வார்த்தைகளின்படி, “மானிடத்தோடிணைந்த தேவன், என்னுள் எல்லாமாய் உள்ளார்.” கர்த்தருடன் ஒரே ஆவியாயிருப்பதென்றால், நாம் அவரோடு ஜீவாதாரமானமுறையில் இழைந்திணைந்திருக்கிறோம், ஜீவனில் அவரோடு கலந்திணைந்திருக்கிறோம் என்று அர்த்தம். இதைப் பற்றிய அதிகமான அனுபவம் நமக்கு அவசரமாய்த் தேவை. நாம் கிறிஸ்துவில் வேர்கொண்டிருந்து, அவர் என்னவாக இருக்கிறாரோ அவை யாவற்றையும் நமக்குள் உறிஞ்சிகொள்ள வேண்டும். அப்போது, நாமும் அவரும், அவரும் நாமும், ஒரே ஆவியாயிருக்கும்படி ஜீவாதாரமாக ஜீவனில் ஒன்றாக இழைத்திணைக்கப்படுவோம். என்னே ஆழம்! என்னே அற்புதம்! (Life-study of Colossians, pp. 457-458)

விசுவாசத்தின் மூலம், கலந்திணைந்த
ஆவியை அனுபவமாக்குதல்

நம் ஆள்தத்துவத்தின் மிக முக்கியமான பகுதி நம் ஆவியே. பல வேளைகளில், பரிசுத்தவான்களுடனான நம் ஐக்கியமும் தொடர்பும், நாம் இன்னும் நம் மாம்சத்திலும், நம் ஆத்துமாவிலும், அதாவது நம் மனம், உணர்ச்சி, சித்தம் ஆகியவற்றிலுமே இருக்கிறோம் என்பதை உணர நமக்கு உதவுகின்றன. நாம் நம் மாம்சத்திலோ, நம் ஆத்துமாவிலோ வாழாமல், எப்போதும் நம் ஆவியில் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும். நாம் யார் மீதாவது கோபமாயிருக்கும்போது, அடிக்கடி, நம் மாம்சத்தில் இருக்கிறோம். அதன்பின், நாம் அவர்களிடம் நயமாக நடந்துகொள்ள வேண்டும் என்று உணரும்போது, நாம் கனவான்கள்போல செயல்பட்டு, அதிக சிந்தனையோடு அதிக அறிவுப்பூர்வமாகப் பேசுகிறோம். இது ஆத்துமாவில் பேசுவதும், வாழ்வதும், நடந்துகொள்வதும் ஆகும். தேவனுக்கு முன்பாக, மாம்சத்தில் வாழ்வதும் கணக்கில்லை, ஆத்துமாவில் வாழ்வதும் கணக்கில்லை. 1 கொரிந்தியர் புத்தகம், மூன்று வகையான நபர்களை வெளிப்படுத்துகிறது: மாம்சரீதியான மனிதன், ஆத்துமரீதியான மனிதன், ஆவிக்குரிய மனிதன். 1 கொரிந்தியர் 1—3இல் பவுல் பிரிவினையைக் கண்டனம்செய்கிறான், ஏனெனில், பிரிவினை மாம்சத்தில் இருக்கிறது (1:10, 11; 3:3). மேலும், நாம் ஆத்துமாவில் நடக்கக் கூடாது என்றும் பவுல் கூறுகிறான் (2:14). நாம் மாம்சரீதியான மனிதர்களாகவும் இருக்கக் கூடாது, ஆத்துமரீதியான மனிதர்களாகவும் இருக்கக் கூடாது. மாறாக, நாம் நம் ஆவியில் நடக்கிற, ஆவிக்குரியவர்களாக இருக்க வேண்டும் (வவ. 11-13, 15). நாம் நேர்த்தியான கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு, மூவொரு தேவனின் ஊனுருவாகிய கர்த்தராகிய இயேசு இன்று நம் ஆவியில் வசித்து, நம் ஆவியோடு ஒரே ஆவியாகக் கலந்திணைந்திருக்கிற (1 கொரி. 6:17) ஆவியானவராக இருக்கிறார் (2 கொரி. 3:17) என்பதை நாம் அறிய வேண்டும்.

தேவன் ஒரு மனித ஆவியுடன் நம்மைச் சிருஷ்டித்தார் என்று நாம் எளிமையாய் விசுவாசிக்க வேண்டும். மேலும், தேவன் ஆவியாயிருக்கிறார், அவர் மாம்சத்தையும், இரத்தத்தையும் தரித்துக்கொண்டு மாம்சமானார். அதன்பின், அவர் மரித்து, அடக்கம்பண்ணப்பட்டு, தம் உயிர்த்தெழுதலில், ஜீவன்-தரும் ஆவியானார். நாம் அவரில் விசுவாசித்தபோது, ஜீவன்-தரும் ஆவியானவராக அவர் நம் ஆவிக்குள் நுழைந்தார். இப்போது ஆவியானவர் நம் ஆவியுடன் சேர்ந்து வேலைசெய்கிறார்; எது இன்னதென்று பகுத்தறிவது கடினமாயிருக்கிற அளவுக்கு இரு ஆவிகளும் ஒன்றாகிவிட்டன. நாம் நம் ஆவியை அறியவில்லையென்றால், நம்மால் ஒரு நேர்த்தியான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ முடியாது. கிறிஸ்தவ வாழ்க்கை முற்றும்முடிய நம் கலந்திணைந்த ஆவியில் இருக்கும் வாழ்க்கையாகும்.

பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டிருப்பதின் அடிப்படையில், நம் விசுவாசத்தைப் பயிற்சிசெய்வதற்கான தேவை

நம்மிடம் இந்த இரண்டு ஆவிகள் இருக்கின்றன என்பதை நாம் ஆராயவோ, நம்மை நாமே நம்பவைக்கவோ, அல்லது மற்றவர்களை நம்பவைக்கவோ முயற்சிக்கக் கூடாது. பரிசுத்த வேதாகமத்தில் எழுதப்பட்டிருப்பதின் அடிப்படையில், நாம் நம் விசுவாசத்தைப் பயிற்சிசெய்ய வேண்டும். பவுல், திருமணத்தைக் குறித்தத் தன் அபிப்பிராயத்தை வெளிப்படுத்தும்போது, “என்னிடத்திலும், தேவனுடைய ஆவி உண்டென்று எண்ணுகிறேன்” என்று அவன் கூறினான் (1 கொரி. 7:40). அவன் ஆவியானவரை உணராமல் இருந்திருக்கக் கூடும், தன்னிடம் ஆவியானவர் இருக்கிறார் என்பதை நிரூபிக்க அவனுக்கு வழியில்லாமல் இருந்திருக்கக் கூடும், ஆனால் தன்னிடம் தேவனுடைய ஆவி உண்டென்று அவன் எண்ணினான். நாம் ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்கு முன் ஜெபிக்கவும், பல காரியங்களைச் செய்யவும் வேண்டும் என்ற போதனையால் நாம் ஆதிக்கம்செலுத்தப்படக் கூடாது. நாம் எளிமையாய் வார்த்தையை எடுத்துக்கொண்டு, வார்த்தை சொல்வதை விசுவாசிப்பதற்கு நம் ஆவியைப் பயிற்சிசெய்ய வேண்டும். நம்மிடம் ஆவியானவர் இருக்கிறார் என்ற ஒரு குறிப்பிட்ட உணர்வு நமக்கு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நாம் மறந்துவிட வேண்டும்.

நாம் ஆவியில் இல்லாதபோது,
அதை அறிந்துகொள்வது சுலபமாயிருத்தல்

நாம் நம் ஆவியில் செயல்படுகிறோம், நடந்துகொள்கிறோம், நம் ஆள்தத்துவத்தைக் கொண்டிருக்கிறோம் என்ற நிச்சயம் நமக்கு இருக்க வேண்டும், ஆனால் நாம் ஆவியில் இருக்கிறோமா என்பதைச் சொல்வது கடினம். நாம் ஆவியில் இல்லாதபோது, அதை அறிந்துகொள்வது சுலபம். நாம் கோபப்பட்டால், அது மாம்சத்தில் உள்ளது என்பது நமக்குத் தெரியும். நாம் மிகவும் தர்க்கப்பூர்வமாகவும், தத்துவமுள்ளவர்களாகவும் இருந்தால், அது ஆத்துமாவில் உள்ளது என்பது நமக்குத் தெரியும். நாம் ஆவியில் இல்லாதபோது, அது நமக்குத் தெரியும், ஆனால் நாம் ஆவியில் இருக்கும்போது, அது நமக்குத் தெரியாது. நம் உடலின் உறுப்புக்களால் இது விளக்கிக்காட்டப்படலாம். நம் வயிற்றில் எந்தப் பிரச்சினையும் இல்லாதபோது, அதைப் பற்றிய உணர்வு நமக்கில்லை, ஆனால் நம் வயிற்றில் ஏதோ பிரச்சினை ஏற்படும்போது, அதைப் பற்றிய உணர்வு நமக்கு ஏற்படுகிறது. அறியாமல் இருப்பது மாபெரும் ஆசீர்வாதம். நாம் நம் ஆவியில் ஏதோவொன்றை அறிந்திருக்கிறோம் என்று நாம் நிச்சயமாயிருந்தால், நாம் ஆவியில் இல்லை என்பதை இது சுட்டிக்காட்டக் கூடும். நாம் ஆவியில் இருக்கிறோம் என்று நிச்சயமாய்க் கூறுவது, ஒரு நல்ல அறிகுறி அல்ல.

நாம் இதைப் பகுத்தாய்வுசெய்ய முடியாது,
இதை விசுவாசிக்க மட்டுமே முடியும்

நாம் நம் உணர்ச்சிகளை நம்பாதிருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதற்குப் பதிலாக, அதிகமாக விசுவாசிப்பது சாலச்சிறந்தது. “விசுவாசத்தினாலே கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வீடமைக்கவும் (கிரே.)” என்று பவுல் கூறுகிறான் (எபே. 3:17). உணர்ச்சியால் அல்ல, மாறாக விசுவாசத்தின் மூலம் கிறிஸ்து நம் இருதயங்களில் தம் வீட்டை அமைக்கிறார் என்பதை நாம் அறிகிறோம். இது முற்றும்முடிய விசுவாசத்தைப் பற்றிய விஷயமாகும். கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகளாக, நம்மிடம் மனித ஆவி இருக்கிறது என்றும், அது மறுபடி ஜெநிப்பிக்கப்பட்டிருக்கிறது என்றும் நாம் விசுவாசிக்க வேண்டும். மேலும், கர்த்தராகிய இயேசுவை ஜீவன்-தரும் ஆவியானவராக நாம் நம் ஆவியில் பெற்றிருக்கிறோம், இந்த இரண்டு ஆவிகளும் ஒன்றாயிருக்கின்றன….நாம் இதைப் பகுத்தாய்வுசெய்ய முடியாது, இதை விசுவாசிக்க மட்டுமே முடியும். நாம் நம் ஆவியில் வாழவும், செயல்படவும், நகரவும், காரியங்களைச் செய்யவும், நம் ஆள்தத்துவத்தை வைத்துக்கொள்ளவும் வேண்டிய நம் கடமையைச் செய்ய வேண்டும், அவ்வளவே. (CWWL, 1990, vol. 2, “Messages to Trainees in Fall 1990,” pp. 497-499)

References: CWWL, 1965, vol. 3, “Our Human Spirit,” chs. 1, 5; Life-study of Colossians, msg. 52; CWWL, 1990, vol. 2, “Messages to Trainees in Fall 1990,” msg. 9

GOD’S WHOLE RELATIONSHIP WITH MANKIND

Experience of God— In the Spirit

8450

  1. O Lord, Thou art the Spirit now
    That gives us life and quickens us,
    With all Thy riches strengthening,
    O how divine and glorious!
  2. O Lord, Thou art the Spirit now
    That with Thy power liberates;
    And by Thy liberation true
    The law of life now regulates.
  3. O Lord, Thou art the Spirit now
    That transforms us and saturates,
    And to Thine image true conforms
    And with Thy light illuminates.
  4. O Lord, Thou art the Spirit now
    Who in my spirit makes His home;
    He mingles with my spirit too,
    And both one spirit thus become.
  5. Lord, teach me how to exercise
    My spirit now to contact Thee,
    That in Thy Spirit I may walk
    And live by Thy reality.