மேய்த்துப்பேணுதல்

திரட்டு 2

இரட்சிக்கப்பட்ட பிறகு

பாடம் மூன்று – காலைப் புத்துயிர்

நீதி. 4:18—நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்.

கிறிஸ்தவ புத்துயிரடைதல் காலையில் நிகழ்தல்

காலை நேரம் துரிதமாகப் பறந்துவிடுகிறது. ஒரு மணிநேரம் சிறிது நேரத்திற்குள் முடிந்துவிடுகிறது. இதனாலேயே “காலத்தை மீட்டுக்கொள்ளுங்கள்” (எபே. 5:16, கிரே.) என்று கர்த்தருடைய வார்த்தை கூறுகிறது. அதிகபட்சமாக மீட்கப்பட வேண்டிய காலம், காலை ஆறு முதல் ஏழு மணிவரையான நேரமே ஆகும். இந்த மணிநேரத்தில், ஒவ்வொரு நிமிடமும் விலையேறப்பெற்றது. நாம் இந்த நேரத்தை மீட்க வேண்டும். (CWWL, 1989, vol. 1, “The Organic Practice of the New Way,” pp 517-518)

காலத்தை மீட்டல்

காலத்தை மீட்பதென்றால், கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவதாகும். இது நம் நடையில் ஞானமாக இருப்பதாகும்….நாட்கள் பொல்லாதவையாக இருப்பதால், நாம் காலத்தை மீட்டுக்கொள்ள வேண்டும். இந்தப் பொல்லாத யுகத்தில் (கலா. 1:4), ஒவ்வொரு நாளும், நம் நேரத்தை அழிக்கக்கூடிய, கெடுக்கிற, நாசமாக்குகிற பொல்லாத காரியங்கள் நிறைந்த ஒரு தீய நாளாகும். ஆகையால், கிடைக்கக் கூடிய ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்தி, நாம் நேரத்தை மீட்டுக் கொள்ளும்படி நாம் ஞானமான விதத்தில் நடக்க வேண்டும். நாம் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன் படுத்தாவிட்டால், நம் நேரம் வீணாகிவிடும். நம்மைத் திசைத்திருப்பவும், நம்மைச் சலிப்படையச் செய்யவும் பல பொல்லாத காரியங்கள் வரும். தொலைபேசி அழைப்புகள், கடிதங்கள் அல்லது பார்வையாளர்களால் நாம் திசைத்திருப்பப்படக் கூடும். நாம் கர்த்தருடைய பிரசன்னத்தை அனுபவித்துமகிழ்ந்து கொண்டிருக்கக் கூடும், திடீரென ஓர் எதிர்மறையான செய்தியோடு வரும் தொலைபேசி அழைப்பின் மூலம் தாக்கப்படக் கூடும். நாட்கள் பொல்லாதவையாக இருப்பதால், ஒவ்வொரு வாய்ப்பையும் அனுகூலமாக்கிக்கொள்ள நாம் உன்னிப்பாக இருக்க வேண்டும். (Life-study of Ephesians, p. 433)

கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடுதலும், அவரது வார்த்தையை ஜெப-வாசித்தலும்

எனவே, நம் அதிகாலை நேரமே மிகவும் விலையேறப்பெற்றது. மற்ற காரியங்களுக்கு எவ்வளவு குறைவான நேரம் செலவிட முடியுமோ அவ்வளவு மட்டும் செலவிட்டு, இந்த நேரத்தை ஜெப-வாசிப்பதற்காக செலவிடுவதும் அதிசிறந்தது. நேரத்தை மிச்சப்படுத்துவதற்கு, நான் காலையில் உடை உடுத்தும்போது, நான் கர்த்தருடைய நாமத்தை நோக்கிக் கூப்பிடவும் அவரது வார்த்தையை ஜெப-வாசிக்கவும் துவங்குகிறேன். உங்கள் மனைவி இன்னும் விழித்துக்கொள்ளவில்லை என்றால், நீங்கள் சத்தமிடவோ கூவி அழைக்கவோ கூடாது. நீங்கள் உள்ளார்ந்தவிதத்தில் ஜெபிக்கலாம். நீங்கள் உங்கள் சட்டையை அணியும்போது, நேற்று நீங்கள் வாசித்த வசனத்தை ஜெப-வாசிக்கலாம்: “ஆதியிலே…தேவன்…வானங்களையும்…பூமியையும்…சிருஷ்டித்தார்.” நீங்கள் முகம் கழுவும்போதும், ஜெப-வாசிக்கலாம். நீங்கள் ஒரே நேரத்தில் இரண்டு காரியங்களைச் செய்யலாம். ஒருவேளை, ஆரம்பத்தில் இப்படிச் செய்வது அசெளகரியமாக இருப்பதாக நீங்கள் உணரக் கூடும். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, நீங்கள் செளகரியமாக உணர்வீர்கள். நீங்கள் கர்த்தருடைய வார்த்தையை ஜெபிக்கவும் வாசிக்கவும், இறுதியில் அந்த ஜெபித்தலை வாசித்தலுடன் கலந்திணைக்கவும் அரைமணி நேரம் அல்லது ஐம்பது நிமிடங்கள் கூட செலவிட்டால், உங்கள் ஆவி உயிரூட்டப்படும். இப்படிப்பட்ட ஒரு காலை, உங்கள் முழு ஆள்தத்துவத்திற்கும் ஒரு புத்துயிரைத் தரும். (CWWL, 1989, vol. 1, “The Organic Practice of the New Way,” pp. 520-521)

சூரியனின் நகர்வின்படி வாழ்தல்

கிறிஸ்தவப் புத்துயிரடைதலானது, பிற்பகலில் அல்லது சூரிய அஸ்தமனத்தில் நிகழ்வதில்லை. மாறாக, அது காலையில் நிகழ்கிறது. கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு சூரிய அஸ்தமனம் அல்ல. மாறாக, அது ஓர் சூர்யோதயம். உண்மையில், நாம்தானே சூரியனாக இருக்கிறோம். “அவரில் அன்புகூருகிறவர்களோ, வல்லமையோடே உதிக்கிற சூரியனைப் போல இருக்கக்கடவர்கள்” என்று நியாயாதிபதிகள் 5:31 கூறுகிறது. “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல் வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம் போலிருக்கும்” என்று நீதிமொழிகள் 4:18 கூறுகிறது. ஒரு கிறிஸ்தவனின் வாழ்க்கையானது, சூரியனின் நகர்வைப் பின்பற்றுகிற ஒன்றாக இருக்க வேண்டும். சூரியன் எழும்போது, நாம் அதனுடன் சேர்ந்து எழ வேண்டும். நண்பகலான முழுப் பகல்வரை நாம் மேலெழுந்துகொண்டே இருக்கிறோம். கிறிஸ்தவ வாழ்க்கைக்கு பிற்பகல்கள் இல்லை. நாம் உலக மக்கள் மத்தியில் இருந்தாலும் சரி, அல்லது சபை கூடுகைகளில் இருந்தாலும் சரி, நாம் மற்றவர்களுக்குப் பிரகாசிக்கிற ஒளியைக் கொண்டுவர வேண்டும். இந்தக் காரணத்தால்தான் நாம் எவ்வளவு மும்முரமாக இருக்கிறோம் என்பது ஒரு பொருட்டல்ல; நம் ஆவியைப் பயிற்சி செய்ய நாம் சிறிது நேரம் செலவிட வேண்டும்.

காலை புத்துயிரடைதலின் இரண்டு அம்சங்கள்
தனிப்பட்ட காலை புத்துயிரடைதல்

கர்த்தரை மட்டுமே தொடர்புகொள்ள நம் எல்லாருக்கும் ஒரு நேரம் தேவை என்பதை யாத்திராகமம் 34:3இல் மோசேக்கு கர்த்தர் இட்ட கட்டளை சுட்டிக்காட்டுகிறது. கர்த்தரைச் சந்திக்க நம் எல்லாருக்கும் ஒரு தனிப்பட்ட நேரம் தேவை. கர்த்தருடன் மட்டுமே இருக்கும் இந்த நேரத்தில், நாம் நம்முடன் எவரையும், அல்லது எதனையும் கொண்டுவரக் கூடாது. அதிகாலையில் நாம் கர்த்தரிடம் செல்லும்போது, நாம் தனியாக அவரிடம் செல்ல வேண்டும். நாம் நம் கணவர் அல்லது மனைவியைக்கூட பின்னால் விட்டுவிட வேண்டும். சில சகோதரர்களுக்கு, தாங்கள் செல்லுமிடமெங்கும் தங்கள் மனைவிகளை அழைத்துச்செல்லும் பழக்கம் இருக்கிறது. இந்தப் பழக்கம் நல்லதுதான். எனினும், மலையுச்சியில் கர்த்தரைச் சந்திக்கும் நேரம் வரும்போது, ஒரு சகோதரன் தன் மனைவியை மலையடிவாரத்தில் விட்டுவிட வேண்டும். நாம் இவ்விதத்தில் கர்த்தரைச் சந்திக்கும்போது, நாம் எல்லாவற்றையும், எல்லாரையும் மறந்துவிட வேண்டும். உங்கள் உடமைகளையும், உங்கள் கல்வியையும், உங்கள் பதவியையும், உங்கள் வருங்காலத்தையும் மறந்துவிடுங்கள். எவரும் அல்லது எதுவும் இன்றி தனியாகக் கர்த்தரிடம் செல்லுங்கள். (Life-study of Exodus, pp. 1888-1889)

பலருக்கு, விசேஷமாக, கூட்டாக வாழும் சூழ்நிலையிலுள்ள வாலிபர்களுக்கு, ஜெபிப்பதற்குத் தனிப்பட்ட நேரம் இல்லை. அவர்களுக்கு கூட்டு ஜெபம் மட்டுமே இருக்கிறது. எந்தத் தனிப்பட்ட ஜெப வேளையும் கூட்டு ஜெப நேரத்தை இடமாற்றம் செய்ய முடியாது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்….நீங்கள்தானே நேரடியாகவும், தனிப்பட்டரீதியிலும் கர்த்தரிடம் செல்லாவிட்டால், கர்த்தருடனான உங்கள் இடைபடுதல் மிகவும் நடைமுறைக்குரியதாக அல்லது விவரமானதாக இருக்காது. (CWWL, 1978, vol. 2, “Life Messages, Volume 1,” p. 175)

கூட்டான காலை புத்துயிரடைதல்

[நம் தொடர்பிலுள்ள நபர்களுடன் நாம் பத்து நிமிடங்கள் காலை புத்துயிரடைய] நாம் தொலைபேசியைப் பயன்படுத்தலாம். ஒரு நபரோடு காலை 6:15க்கும், அடுத்த நபரோடு காலை 6:30க்கும், அடுத்த நபரோடு காலை 6:45க்கும் நாம் நேரம் குறித்துக்கொள்ளலாம். காலையில் ஒரு மணி நேரத்தில், நீங்கள் மூன்று நபர்களைத் தொடர்புகொள்ளலாம். ஒவ்வொரு நாள் காலையிலும், நீங்கள் அதே மூன்று நபர்களுடன் ஜெப-வாசிக்கவும், அவர்களுடன் ஐக்கியப்படவும், மிகச் சுருக்கமாக அவர்களுடன் கிறிஸ்துவை அனுபவித்துமகிழவும் அவர்களைத் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு மூன்று மாதங்களுக்குள் இந்த ஒவ்வொரு நபரையும் குறைந்தபட்சம் எண்பது முறை தொடர்புகொள்ள முடியும். மூன்று மாதங்கள் இவ்விதமான தொடர்ச்சியான தொடர்புகொள்தலுக்குப் பிறகு, இவர்கள் கர்த்தருடைய ஆவலுக்காக ஆதாயப்படுத்தப்பட முடியும். (CWWL, 1991-1992, vol. 1, “Elders’ Training, Book 11: The Eldership and the God-ordained Way (3),” p. 206)

புத்துயிரடைதல் மறுசாயலாகுதலைக் கொண்டுவருதல்

இந்தத் தினசரி புத்துயிரடைதல் தன்னுடன் மறுசாயலாகுதலைக் கொண்டுவருகிறது. “உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுசாயலாகுங்கள்” என்று ரோமர் 12:2 கூறுகிறது. “நாமெல்லாரும் முக்காடு நீக்கப்பட்ட முகத்துடன், ஒரு கண்ணாடியைப் போல், கர்த்தருடைய மகிமையைக் கண்டு, பிரதிபலித்து, ஆவிக் கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையிலிருந்து மகிமைக்கு மறுசாயலாக்கப்படுகிறோம் (கிரே.)” என்று இரண்டு கொரிந்தியர் 3:18 கூறுகிறது. மறுசாயலாகுதல் கர்த்தரை நோக்கிப்பார்ப்பதிலிருந்து வருகிறது என்று இது நமக்குக் காட்டுகிறது. நாம் கண்ணாடிகளைப் போல இருக்கிறோம், முக்காடு நீக்கப்பட்ட முகத்துடன் கர்த்தரை நோக்கிப்பார்க்கிறோம். நாம் எவ்வளவாய் அவரை நோக்கிப்பார்க்கிறோமோ அவ்வளவாய்க் கர்த்தருடைய மகிமையைப் பிரதிபலிக்கிறோம், மகிமையின் ஒரு நிலையிலிருந்து இன்னொன்றுக்கு கர்த்தருடைய சாயலாக மறுசாயலாக்கப்படுகிறோம். இந்த மறுசாயலாகுதல் ஆவிக் கர்த்தரிடமிருந்து வருகிறது. புத்துயிரடைதல் மட்டுமல்ல, மறுசாயலாகுதலும் நிகழ்கிறது. எனவே, தினமும் புதுப்பிக்கப்படுகிற ஓர் புத்துயிரடைதலைப் பெறுவதென்றால், தினமும் பசுமையான ஒரு மறுசாயலாகுதலைப் பெறுவதாகும். நம் முழு வாழ்க்கையிலும் நாம் இந்த மறுசாயலாகுதலில் நிலைத்திருந்தால், நாம் கர்த்தருடைய ஜீவனில், முதிர்ச்சியடையும்வரை வளர்வோம். இந்த வகையான புத்துயிரடைதல், புதுப்பித்தல், மற்றும் மறுசாயலாகுதலே இன்று நம் அனைவரின் தேவை. (CWWL, 1988, vol 4, “A Timely Trumpeting and the Present Need,” p. 41)

References: CWWL, 1989, vol. 1, “The Organic Practice of the New Way,” ch. 4; Life-study of Ephesians, msg. 51; Lifestudy of Exodus, msg. 178; CWWL, 1978, vol. 2, “Life Messages, Volume 1,” ch. 2; CWWL, 1991-1992, vol. 1, “Elders’ Training, Book 11: The Eldership and the Godordained Way (3),” ch. 9; CWWL, 1988, vol. 4, “A Timely Trumpeting and the Present Need,” ch. 4

I COME TO HIS PRESENCE AFRESH

Experience of Christ— Fellowship with Him

554

  1. I come to His presence afresh
    Ere the night has passed into morning;
    And His face I see as it shine on me-
    The Lord within is dawning.
    And He speak to me and reveals to me
    All His riches for me today;
    And with sweet delight I partake of Him,
    My hunger has passed away.
  2. As Spirit He speaks thru the Word
    Till my heart in echo is singing,
    And the fount of life with His grace and pow’r
    Within my soul is springing.
    And He speaks to me and reveals to me
    All His riches for me today;
    And I drink of Him for my every need,
    My thirsting has passed away.
  3. In tenderness He deals with me,
    While I stay with joy in His presence;
    And He saturates and supplies my soul
    With all His precious essence.
    And He speaks to me and reveals to me
    All His riches for me today;
    And in every way I partake of Him,
    My problems all passed away.