மேய்த்துப்பேணுதல்

திரட்டு 2

இரட்சிக்கப்பட்ட பிறகு

பாடம் ஒன்று – இரட்சிப்பின் நிச்சயம்

ரோமர் 8:16—நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர்தாமே நம்முடைய ஆவியுடனேகூடச் சாட்சிகொடுக்கிறார்.

இன்றைய கிறிஸ்தவர்கள் மத்தியில் இரட்சிப்பைப் பற்றி பல்வேறு கண்ணோட்டங்கள் உள்ளன. நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை இன்று அறிவது சாத்தியமற்றது என்று சிலர் கருதுகின்றனர், மற்றவர்களோ நாம் இரட்சிக்கப்பட்ட பிறகு, நாம் இன்னும் அழிந்துபோகக் கூடும் என்று நினைக்கின்றனர். எனினும், நம் இரட்சிப்பு ஊகத்திற்குரிய ஒரு காரியமும் அல்ல, நிச்சயமற்ற ஒரு காரியமும் அல்ல என்று வேதம் நமக்குக் காட்டுகிறது. மாறாக, இது நிச்சயத்துடன் உறுதிபடுத்தப்படக் கூடியது, முழு உறுதியுடன் நாம் அறியக் கூடியது. மேலும், நம் இரட்சிப்பு பாதுகாப்பானது. நாம் அதைப் பெற்றவுடன், அது நமக்கு நித்தியத்திற்கும் இருக்கிறது. அது ஒருபோதும் அசைக்கப்படவோ மாற்றப்படவோ முடியாது.

தேவனுடைய வார்த்தையால்

முதலாவது, நம் இரட்சிப்பின் நிச்சயம் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் இருக்கிறது (1 யோ. 5:13). தேவன் தம் குமாரன் மூலம் நமக்காக தாம் நிறைவேற்றியிருக்கிற மீட்பைக் குறித்து வேதத்தின் மூலம் நமக்குக் கூறுகிறார், நமக்குச் சாட்சி பகர்கிறார்; தம் குமாரனில் ஆவியானவர் மூலம் நம்மில் அடித்துருவாக்கப்பட்டிருக்கிற இரட்சிப்பைக் குறித்து வேதத்தின் மூலம் அவர் நமக்கு வெளிப்படுத்துகிறார், சாட்சியளிக்கிறார். ஆகையால், நாம் இரட்சிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை வேதவாக்கியங்களிலுள்ள தேவனுடைய வார்த்தையால் நாம் அறிகிறோம். நாம் விசுவாசிக்கிற கணத்தில் நாம் பெறுகின்ற இரட்சிப்பைக் குறித்த [வேதவாக்கியங்கள்] நமக்கு தேவனுடைய வெளிப்பாடாகவும் வாக்குத்தத்தமாகவும் மட்டுமல்லாமல், நமக்கு அவரது உடன்படிக்கையாகவும், எழுதப்பட்ட சாட்சியமாகவும் இருக்கின்றன. நாம் கர்த்தரில் விசுவாசித்தவுடன், நம் பாவங்கள் நமக்கு மன்னிக்கப்பட்டு, நாம் விடுவிக்கப்பட்டு, கழுவப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, நீதிப்படுத்தப்பட்டு, தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டுவிட்டோம் என்பதை, நாம் நித்திய ஜீவனைப் பெற்றுகொண்டோம், நாம் அழிந்துபோவதில்லை என்பதை, நாம் மரணத்தை விட்டு ஜீவனுக்குள் கடந்துவந்துவிட்டோம் என்பதை, நாம் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்பதை உடன்படிக்கையிலுள்ள அவரது வார்த்தையாலும் எழுதப்பட்ட சாட்சியத்தாலும் நாம் அறிந்துகொள்ள முடியும், நிச்சயத்துடனும் உறுதியுடனும் நாம் அறிந்துகொள்ள முடியும்.
வேதம் நமக்கு ஒரு புறம்பான நிரூபணமாக இருப்பதால், இரட்சிப்பைப் பற்றி நம் உணர்வுகள் நமக்குத் தேவையில்லை; தெளிவான கூற்றுகளின்படி, நாம் கிருபை பெற்றிருக்கிறோம், நாம் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்பதை நாம் உறுதியாக அறிந்துகொள்ள முடியும். இது நமக்கு வெளியே இருக்கிற ஒரு நிரூபணம், இதைப் புறம்பான நிரூபணம் என்று நாம் அழைக்கலாம்.

நம் ஆவியுடன் ஆவியானவரின் சாட்சிபகர்தலால்

நம் இரட்சிப்பின் நிச்சயம் நம் ஆவியுடன் ஆவியானவரின் சாட்சிபகர்தலின் அடிப்படையில் இருக்கிறது (ரோ. 8:16). நாம் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்ற உண்மையை உறுதிப்படுத்துகிற தேவனுடைய வார்த்தையை நமக்கு வெளியே நாம் கொண்டிருப்பது மட்டுமல்லாமல், நாம் தேவனுடைய பிள்ளைகள் என்றும் தேவன் நம் பிதா என்றும் நம் ஆவியுடன் சாட்சிபகர்கிற ஆவியானவரையும் நம்முள்ளே பெற்றிருக்கிறோம். கர்த்தரில் விசுவாசிக்கிற ஒவ்வொருவரும் தேவனை “அப்பா, பிதாவே” என்று அழைப்பதை அனுபவித்துமகிழ்கின்றனர். தேவனை “அப்பா, பிதாவே” என்று நாம் அழைப்பது ஒரு புறத்தூண்டுதலற்ற காரியம். மேலும், “அப்பா, பிதாவே” என்று நாம் அவரை அழைக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளே நாம் இனிமையாகவும் செளகரியமாகவும் உணர்கிறோம். இது ஏனெனில், நாம் தேவனால் பெற்றெடுக்கப்பட்ட பிள்ளைகளாக இருக்கிறோம், நாம் தேவனின் ஜீவனைப் பெற்றிருக்கிறோம், தேவனுடைய குமாரனின் ஆவி நமக்குள்ளே வந்துவிட்டார். மாம்சத்தின்படியான நம் தகப்பனை நாம் “அப்பா” என்று அழைப்பது புறத்தூண்டுதலற்றது, இனிமையானது. ஆகையால், தேவனை “அப்பா, பிதாவே” என்று அழைப்பதை நாம் அனுபவித்துமகிழ்வதாலும், ஓர் இனிமையான செளகரியமான உணர்வோடு கூட புறத்தூண்டுதலற்ற விதத்தில் நாம் இதைச் செய்வதாலும், நம்மிடம் தேவனுடைய ஜீவன் இருக்கிறது என்பதும், நாம் தேவனால் பிறந்த பிள்ளைகள் என்பதும் நிரூபணமாகிறது. எனவே, நம் ஆவியுடன் ஆவியானவரின் உள்ளார்ந்த சாட்சிபகர்தல் மூலம், நாம் தேவனுடைய பிள்ளைகள் என்றும் நாம் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்றும் உறுதியுடன் நாம் அறிய முடியும். இது நம்முள் இருக்கிற ஓர் நிரூபணம், இதை உள்ளார்ந்த நிரூபணம் என்று நாம் அழைக்கலாம்.

சகோதரர்களை நாம் நேசிப்பதால்

இரட்சிப்பின் நிச்சயம் நாம் சகோதரர்களை நேசிக்கிறோம் என்ற உண்மையை அடிப்படையாகக் கொண்டது. “நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்” என்று ஒன்று யோவான் 3:14 கூறுகிறது. தேவன் அன்பாக இருப்பதாலும் (4:16) நாம் அவரது ஜீவனைப் பெற்றிருப்பதாலும், நிச்சயமாக நம்மிடம் தெய்வீக அன்பு இருக்கிறது. மேலும், நாம் தேவனால் பெற்றெடுக்கப்பட்டிருப்பதால், அவரால் பெற்றெடுக்கப்பட்டவர்களிடம் நாம் நிச்சயமாக அன்புகூர்கிறோம் (5:1). இரட்சிக்கப்பட்ட ஒருவர் கர்த்தரிலுள்ள ஒரு சகோதரனைக் காணும்போது, அவர்மீதான ஒரு பாசம் இவரிடம் ஏற்படுகிறது, தன்னால் புரிந்துகொள்ள முடியாத விதத்தில் கூட இவர் அவரை நேசிக்கிறார். ஆகையால், கர்த்தரிலுள்ள சகோதரர்கள் மீதான நம் அன்பு நாம் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்பதை நாம் அறிகிற ஒரு நிரூபணமாகும். இது ஜீவனின் நம் அனுபவரீதியான நிரூபணம், இதை அன்பின் நிரூபணம் என்று நாம் அழைக்கலாம். நம் விசுவாசித்தல் மூலம்—கர்த்தரில் விசுவாசிப்பதன் மூலம்—நாம் ஜீவனைப் பெற்றிருக்கிறோம், நாம் மரணத்தை விட்டு ஜீவனுக்குள் கடந்துவந்துவிட்டோம்; நம் நேசித்தல் மூலம்—சகோதரர்களை நேசிப்பதன் மூலம்—நாம் ஜீவனைப் பெற்றிருக்கிறோம் என்றும், நாம் மரணத்தை விட்டு ஜீவனுக்குள் கடந்துவந்துவிட்டோம் என்றும் நாம் அறிகிறோம்.

ஆகையால், வேதத்தின் தெளிவான வார்த்தைகள் மூலமும், நம் ஆவியிலுள்ள உணர்வின் மூலமும், அன்பு என்ற அனுபவத்தின் மூலமும் நாம் இரட்சிக்கப்பட்டுவிட்டோம் என்பதை நாம் உறுதியுடன் அறிந்துகொள்ள முடியும். (Truth Lessons— Level One, vol 4, pp. 108-111)

இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து களிகூர்தலுடன் தண்ணீர் மொண்டுகொள்ளுதல்

“நீங்கள் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து மகிழ்ச்சியோடே தண்ணீர் மொண்டுகொள்வீர்கள். அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தை நோக்கிக் கூப்பிடுங்கள்!” (எபி.) என்று ஏசாயா 12:3-4 கூறுகிறது. கர்த்தரை நம் இரட்சிப்பாகப் பெறுவது, இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து தண்ணீர் மொண்டுகொள்வதாகும். நம் இரட்சிப்பாகக் கர்த்தர் நமக்குத் தண்ணீராக இருக்கிறார். இது புதிய ஏற்பாட்டில், விசேஷமாக யோவான் 4 மற்றும் 7இல் பலமாக வலியுறுத்தப்படுகிறது. யோவான் 4:14இல், “நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள் நித்திய ஜீவ காலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்” என்று கர்த்தராகிய இயேசு கூறினார். யோவான் 7இல் இந்த நீரூற்று ஜீவிக்கும் தண்ணீரின் நதிகளாக ஆகிறது (வவ. 37-39). கர்த்தர் நம் இரட்சிப்பாக இருப்பதென்றால், அவர் ஜீவிக்கும் தண்ணீராக இருக்கிறார் என்று பொருள் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் கூட, கர்த்தரை நம் இரட்சிப்பாக எடுத்துக்கொள்வதற்கான வழி, களிகூர்தலுடனும் துதித்தலுடனும் அவரது நாமத்தை நோக்கிக் கூப்பிடுவதாகும் என்று ஏசாயா நமக்கு வெளிப்படுத்தினான். அவரது நாமத்தை நோக்கிக் கூப்பிடுவது, ஆழமாக சுவாசிப்பதைப் போன்றது. நாம், “ஆ, கர்த்தராகிய இயேசுவே! கர்த்தராகிய இயேசுவே!” என்று கூப்பிட்டால், நாம் புத்துணர்வூட்டப்பட்டு, புத்துயிரூட்டப்படுவோம், நாம் மிகவும் ஜீவிக்கிறவர்களாக ஆவோம். இரட்சிப்பை அனுபவித்துமகிழ்வதற்கு, கர்த்தர்தாமே நம் இரட்சிப்பு, பலம், மற்றும் பாடல் என்றும், அவரது நாமத்தை நோக்கிக் கூப்பிடுவதன் மூலம், இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து நாம் களிகூர்தலுடன் தண்ணீர் மொண்டுகொள்ளலாம் என்றும் நாம் உணர்ந்தறிய வேண்டும். (Life-study of Isaiah, pp. 74-76)
References: Truth Lessons—Level One, vol. 4, lsn. 47; Life-study of Isaiah, msg. 11

HOW FIRM A FOUNDATION, YE SAINTS OF THE LORD

Assurance and Joy of Salvation— A Firm Foundation

339

  1. How firm a foundation, ye saints of the Lord,
    Is laid for your faith in His excellent word!
    What more can He say than to you He hath said,
    To you who for refuge to Jesus have fled?
  2. “Fear not, I am with thee, O be not dismayed,
    For I am thy God, and will still give thee aid;
    I’ll strengthen thee, help thee, and cause thee to stand,
    Upheld by My righteous, omnipotent hand.
  3. “When through the deep waters I call thee to go,
    The rivers of sorrow shall not overflow;
    For I will be with thee, thy troubles to bless,
    And sanctify to thee thy deepest distress.
  4. “When through fiery trials thy pathway shall lie,
    My grace, all sufficient, shall be thy supply;
    The flame shall not hurt thee; I only design
    Thy dross to consume, and thy gold to refine.
  5. “E’en down to old age all My people shall prove
    My sovereign, eternal, unchangeable love;
    And then, when grey hairs shall their temples adorn,
    Like lambs they shall still in My bosom be borne.
  6. “The soul that on Jesus hath leaned for repose,
    I will not, I will not desert to his foes;
    That soul, though all hell should endeavor to shake,
    I’ll never, no, never, no, never forsake!”