மேய்த்துப்பேணுதல்
திரட்டு 2
இரட்சிக்கப்பட்ட பிறகு
பாடம் பதினாறு – தேவனின் ஜீவாதார இரட்சிப்பு
ரோ. 5:10—நாம் தேவனுக்குச் சத்துருக்களாயிருக்கையில், அவருடைய குமாரனின் மரணத்தினாலே அவருடனே ஒப்புரவாக்கப்பட்டோமானால், ஒப்புரவாக்கப்பட்டபின் நாம் அவருடைய ஜீவனாலே இரட்சிக்கப்படுவது அதிக நிச்சயமாமே.
தேவனுடைய இரட்சிப்பின் ஜீவாதார அம்சம்.
தேவனுடைய இரட்சிப்பின் ஜீவாதார அம்சம் தேவனுடைய ஜீவன் மூலம் இருக்கிறது (ரோ. 1:17, அப். 11:18, ரோ. 5:10, 17, 18, 21). சட்டரீதியான அம்சமானது, தேவனின் மீட்பை நிறைவேற்ற தேவனுடைய நீதியின்படி இருக்கையில், ஜீவாதார அம்சமோ மறுபடிஜெநிப்பிக்கப்படுதல், மேய்த்துப்பேணுதல், குணத்தில் பரிசுத்தமாக்கப்படுதல், புதிதாக்கப்படுதல், மறுசாயலாக்கப்படுதல், கட்டியெழுப்பப்படுதல், ஒத்தசாயலாக்கப்படுதல், மற்றும் மகிமைப்படுத்தப்படுதல் உட்பட தேவனுடைய இரட்சிப்பை நிறைவேற்றுவதற்கு தேவனுடைய ஜீவனின் மூலம் இருக்கிறது. இது தம் பொருளாட்சியில் விசுவாசிகளில் தேவன் அடைய விரும்புகிற அனைத்தையும் தம் தெய்வீக ஜீவன் மூலம் நிறைவேற்றுவதற்கான தேவனுடைய இரட்சிப்பின் குறிக்கோளாகும். (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” p. 381)
மறுபடிஜெநிப்பிக்கப்படுதல்
மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் என்பது மீட்கப்பட்ட விசுவாசிகள் தேவனின் இனத்திற்குரிய அவரது பிள்ளைகளாக இருக்கும்படி தேவனால் பிறக்குமாறு (யோ. 1:12-13; 3:6) தெய்வீக ஜீவனைக் கொண்டு அவர்களை ஜெநிப்பிப்பதாகும். (CWWL, 1994-1997, vol. 4, “The Divine and Mystical Realm,” p. 102)
மேய்த்துப்பேணுதல்
மேய்த்துப்பேணுதல் என்பது 1 பேதுரு 2:3இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, குழந்தை வளருமாறு பாலூட்டுகிற தாய் அந்தக் குழந்தைக்கு ஊட்டுவதுபோல ஊட்டுதலை உள்ளடக்குகிறது. (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” p. 396)
பரிசுத்தமாக்குதல்
குணரீதியிலான பரிசுத்தமாக்குதல் என்பது தெய்வீக ஜீவனில் வளர்கிற விசுவாசிகளை தேவனுடைய பரிசுத்த சுபாவத்தைக் கொண்டு அவர்களின் குணத்தில் பரிசுத்தமாக்குவதாகும் (ரோ. 15:16, 6:19, 22; 1 தெச. 4:23).
புதிதாக்கப்படுதல்
புதிதாக்கப்படுதல் என்றால் பிரபஞ்சம், மனுக்குலம், தேவன் முதலியவற்றைக் குறித்து நம் மதம், தருக்கமுறை, தத்துவம் ஆகியவற்றில் சத்தியத்தின் ஆவியானவரால் வேதவாக்கியங்களின் வெளிப்பாட்டைக் கொண்டு நம் மனம் மாற்றப்படும்படி செய்வதாகும். தீத்து 3:5; ரோ. 12:2; எபே. 4:23; ரோ. 8:6; பிலி. 2:5; 2 கொரி. 4:16). (CWWL, 1994-1997, vol. 4, “The Divine and Mystical Realm,” pp. 102-103)
மறுசாயலாக்குதல்
மறுசாயலாக்குதல் என்பது புறம்பான மாற்றமோ திருத்தமோ அல்ல, மாறாக விசுவாசிகளில் தேவனுடைய ஜீவனின் வளர்சிதைமாற்ற செயல்பாடாகும்.
கட்டியெழுப்பப்படுதல்
கட்டியெழுப்பப்படுதல் என்பது தேவ-மனிதர்கள் தெய்வீக ஜீவனில் தங்கள் வளர்ச்சி மூலம் மற்ற தேவ மனிதர்களோடு தெய்வீக ஜீவனில் இணைக்கப்படுவதும், பின்னியிழைக்கப்படுவதுமாகும். (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” p. 411)
ஒத்தசாயலாக்கப்படுதல்
ஒத்தசாயலாக்கப்படுதல் என்றால், திரளான மறுஉற்பத்திக்காக ஒரு முன்னுருமாதிரியாக முதல் தேவ-மனிதனாகிய தேவனுடைய முதற்பேறான குமாரனின் முழுவதும் வளர்ந்த சாயலுக்கு ஒத்தசாயலாக்கப்படுவதாகும். (CWWL, 1994-1997, vol. 4, “The Divine and Mystical Realm,” p. 104)
மகிமைப்படுத்தப்படுதல்
மகிமைப்படுத்தப்படுதல் என்பது கிறிஸ்துவின் ஜீவனில் முதிர்ச்சிக்கு விசுவாசிகள் வளர்வதன் மூலம் கிறிஸ்துவின் மகிமை விசுவாசிகளிலிருந்து வெளிப்பரவுவதாகும்.
தேவனுடைய முழுமையான இரட்சிப்பின் உச்சநிலை முழுநிறைவேற்றம்
புதிய எருசலேமாக இருத்தல்
தேவனின் ஜீவாதார வேலையானது மறுபடி ஜெநிப்பிக்கப்படுதலிலிருந்து மகிமைப்படுத்தப்படுதல் வரை, அதாவது தேவன் மனிதனுக்குள் நுழைவதிலிருந்து மனிதன் நடைமுறைரீதியில் தேவனுக்குள் கொண்டுவரப்படுவதுவரை நடக்கிறது. மறுபடிஜெநிப்பிக்கப்படுதல் என்பது தேவன் மனிதனுக்குள் நுழைவதாகும், இப்படியிருக்க மகிமைப்படுத்தப்படுதல் என்பது மனிதன் தேவனுக்குள் நுழைவதாகும். இவ்வாறு மனிதன், தேவனின் சாயலை வெளிக்காட்ட, முற்றும்முடிய தேவனுடன் கலந்திணைந்து, தேவனுடன் இணைகிறான். அதுவே மகிமைப்படுத்தப்படுதல். தேவனுடைய முழுமையான இரட்சிப்பின் உச்சநிலை முழுநிறைவேற்றம் புதிய எருசலேமாகும்—அதாவது, மனிதனோடு தேவனின், அதாவது, மறுபடிஜெநிப்பிக்கப்பட்டு, மறுசாயலாக்கப்பட்டு, ஒத்தசாயலாக்கப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்ட முப்பகுதிகொண்ட அவரது தெரிந்துகொள்ளப்பட்டவர்களுடன், பதனிடப்பட்டு முழுநிறைவடைந்த மூவொரு தேவனின் சேர்ந்திணைதல் மற்றும் கலந்திணைதலின் படிகமாக்குதலாகும். (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” pp. 425, 435)
References: CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” chs. 1—5; CWWL, 1994-1997, vol. 4, “The Divine and Mystical Realm,” ch. 2
மகிமைக் கிறிஸ்து என் இரட்சகர்,
கிறிஸ்துவை அனுபவித்தல்—ஜீவனாக – 501
1 மகிமைக் கிறிஸ்து என் இரட்சகர்,
மெய் தெய்வீகப் பிரகாசமே;
வரம்பில்லா நித்திய தேவன்,
வரம்புள்ள மாந்தன் ஆனார்.
கிறிஸ்துவே மாதேவனின் வெளிப்பாடு,
பேர்ஐஸ்வர்ய சம்பன்னர்!
மானிடத்தோடிணை தேவன்
என்னுள் எல்லாமாய் உள்ளார்.
2 தேவனின் பூரணம் வாழும்;
தேவ மாட்சி வெளியாக்கினீர்;
மாம்சத்தில் மீட்பைத் தந்தீரே;
ஆவியாய் என்னோடொன்றானீர்.
3 பிதாவின் எல்லாம் உமதே;
ஆவியாய் நீர் எல்லாம் எனக்கே;
ஆவி உம்மை நிஜமாக்க,
அனுபவிக்கின்றோம் உம்மை.
4 உம் வார்த்தையால் ஜீவாவி
உம்மை என்னுள் கொணர்கின்றார்.
உம் ஆவி தொட்டார், சொல் பெற்றேன்,
உம் ஜீவன் என்னுள் பெற்றேன்.
5 ஆவியில் உம் மாட்சி கண்டு,
கண்ணாடியாய்ப் பிரதிபலிப்பேன்,
உம்போல் மறுசாயலாவேன்,
உம்மை வெளிப்படுத்துவேன்.
6 உம் வெற்றி, பரிசுத்தம்
எம் பங்காக வழி வேறில்லை;
இப்படி ஆவியில் வாழ்வோம்;
மகிமை ஜீவன் தொடுவோம்.
7 எல்லாப் பகுதியும் ஆவி,
பரவி நிரப்புகின்றார்,
பழையன கழித்தென்னைச்
சுத்தர்களோடு கட்டுவார்.