மேய்த்துப்பேணுதல்

திரட்டு 2

இரட்சிக்கப்பட்ட பிறகு

பாடம் பதினைந்து – தேவனின் சட்டரீதியான மீட்பு

ரோ. 3:23-25—எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி, 24இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்; 25தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களைத் தாம் பொறுத்துக்கொண்டதைக் குறித்துத் தம்முடைய நீதியைக் காண்பிக்கும்பொருட்டாகவும், கிறிஸ்து இயேசுவினுடைய இரத்தத்தைப்பற்றும் விசுவாசத்தினாலே பலிக்கும் சாந்தப்படுத்தும் இடமாக அவரையே ஏற்படுத்தினார் (கிரே.).

தேவனின் முழுமையான இரட்சிப்பு

தேவனின் முழுமையான இரட்சிப்புக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன—சட்டரீதியான அம்சம் மற்றும் ஜீவாதாரமான அம்சம். சட்டரீதியான அம்சமானது, தேவனுடைய இரட்சிப்புக்காக அவருடைய நியாயப்பிரமாணத்தின் நீதியான கோரிக்கையை முழுவதும் பூர்த்திசெய்ய, கிறிஸ்துவின் மீட்பின் மூலம் ஏற்படுத்தப்பட்ட தேவனின் இரட்சிப்பின் வழிமுறையாகும். ஜீவாதார அம்சமானது, விசுவாசிகள் மறுசாயலாக்கப்படவும், தேவனுடைய ஜீவனில் வளர்ந்து முதிர்ச்சியடையவும் கிறிஸ்துவின் ஜீவனின் மூலம் நிகழும் தேவனுடைய இரட்சிப்பின் நிறைவேற்றமாகும்.

மனிதனுடன் ஒன்றாக இருக்கவும், மனிதன் தேவ இனமாக இருக்கும்படி அவனைத் தாம் இருக்கும்வண்ணமாகவே ஆக்கவும்கூட நித்தியத்தில் தேவனுக்கு ஒரு நல்லின்பம், அவரது இருதய வாஞ்சை இருந்தது….எனினும், தேவன்-சிருஷ்டித்த மனிதன் சாத்தானைப் பின்பற்றி பாவம் செய்து, விழுந்துபோனான்; இவ்வாறு மனிதன் தேவனின் நீதியை மீறினான்….முழுப் பரிசுத்த வேத வாக்கியங்களின்படி, தேவனின் நீதி என்பது காரியங்களைச் செய்வதற்கான தேவனின் கோட்பாடாகும். தேவன் செய்வதெல்லாம் நீதியானது, அவரது நீதி அவரது சிங்காசனத்தின் அஸ்திபாரமாக (சங். 89:14) மிகவும் கண்டிப்பானது. எனவே, நாம் இங்கு இரண்டு காரியங்களைக் காண்கிறோம்: தேவனின் அன்பு, தேவனின் நீதி. மனிதனுக்காக தேவன் செய்ய விரும்புவதெதுவும் அவரது நீதியின் கோரிக்கையைப் பூர்த்திசெய்ய வேண்டும்…ஜீவாதாரரீதியில் தம் ஜீவனின்படி தேவன் மனிதனுக்காக தாம் செய்ய விரும்புவதெல்லாவற்றையும் நிறைவேற்றுவதற்கு, விழுந்துபோன பாவிகளை தேவன் சட்டரீதியாக தமது நீதியான கோரிக்கையின்படி திரும்ப மீட்பது தேவை.

தேவனுடைய இரட்சிப்பின்
சட்டரீதியான அம்சங்கள்

தேவனின் முழுமையான இரட்சிப்பில், சட்டரீதியான அம்சத்தில் அவர் செய்வது வழிமுறையே, ஜீவாதார அம்சத்தில் அவர் செய்வதே குறிக்கோள். வழிமுறை என்ற அம்சத்தில் தம் சட்டரீதியான கோரிக்கையின்படி தேவன் நிறைவேற்றியிருப்பது பாவமன்னிப்பு, பாவங்களைக் கழுவி சுத்திகரித்தல், நீதிப்படுத்துதல், தேவனுடன் ஒப்புரவாக்குதல், நிலைரீதியாக பரிசுத்தமாக்குதல் ஆகியவற்றை உள்ளடக்கிய மீட்பாகும். நாம் தேவனின் ஆக்கினைத்தீர்ப்பின்கீழுள்ள பாவிகளாகவும் தேவனின் எதிரிகளாகவும் இருந்தோம், ஆனால் இப்போது நாம் மன்னிக்கப்பட்டு, நம் பாவங்களிலிருந்து கழுவப்பட்டு, தேவனால் நீதிப்படுத்தப்பட்டு, தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டு, நிலைரீதியாக தேவனுக்கென்று பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம். மீட்கப்படுதல் என்பது இதுவே. எனினும், தேவனின் முழு இரட்சிப்பு என்பது இது மட்டுமல்ல. நீங்கள் மீட்பின் இந்த ஐந்து காரியங்களை மட்டுமே பெற்றிருந்தால், நீங்கள் பெற்றிருப்பது இரட்சிப்பின் ஒரு பகுதி மட்டுமே, அது முழுமையான இரட்சிப்பு அல்ல. தேவனின் முழுமையான இரட்சிப்பின் முதல் அம்சம் சட்டரீதியான அம்சமாகும், அது நிறைவேற்றியிருப்பது நாம் நம் பாவங்களுக்காக மன்னிக்கப்பட்டு, நம் பாவங்களிலிருந்து கழுவப்பட்டு, நீதிப்படுத்தப்பட்டு, தேவனுடன் ஒப்புரவாக்கப்பட்டு, நிலைரீதியில் பரிசுத்தமாக்கப்படுவதற்காக இருக்கிறது. இந்த ஐந்து காரியங்களும் தேவனின் கிருபைக்குள் நுழைய நம்மைத் தகுதிப்படுத்துகின்றன, அதற்கான நிலையில் நம்மை வைக்கின்றன. “அவர் மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைப் பெற்று நிலைகொண்டிருந்து” என்று ரோமர் 5:2 கூறுகிறது. ஒரு பாவி எவ்வாறு தேவனுடைய கிருபைக்குள் பிரவேசிக்கும் சிலாக்கியத்தைப் பெற முடியும்? அந்தப் பாவி பாவமன்னிப்பையும், பாவங்களைக் கழுவிநீக்குதலையும், தேவனால் நீதிப்படுத் தப்படுவதையும், தேவனுடன் ஒப்புரவாக்கப்படுவதையும், நிலைரீதியில் பரிசுத்தமாக்கப்படுவதையும் பெறுமாறு சட்டரீதியான அம்சம் நிறைவேற்றப்பட் டாக வேண்டும். இந்தக் காரியங்கள் அனைத்தும் வழிமுறையையும், தகுதியையும், நிலையையும் பற்றியவை. குறிக்கோள் என்ற அம்சத்தில் ஜீவாதாரரீதியாக தேவன் தம் ஜீவனின்படி நமக்காக நிறைவேற்றியிருக்கிற இரட்சிப்பை அனுபவித்து மகிழ, பாவிகளாகிய நாம் தேவனின் கிருபைக்குள் நுழையும்படி சட்டரீதியான அம்சம் நம்மைத் தகுதிப் படுத்துகிறது, நம்மை அந்த நிலையில் வைக்கிறது. மீட்கும் அம்சம் மற்றும் இரட்சிக்கும் அம்சம் ஆகிய இரண்டு அம்சங்களைக் கொண்ட ஓர் இரட்சிப்பை தேவன் நிறைவேற்றியிருக்கிறார் என்பதை நாம் இங்கு காண்கிறோம். மீட்பு சட்டரீதியாக நிறைவேற் றப்படுகிறது, இரட்சித்தல் ஜீவாதாரமாக நிறைவேற் றப்படுகிறது. (CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” pp. 374-379)

Reference: CWWL, 1994-1997, vol. 3, “The Organic Aspect of God’s Salvation,” ch. 1

எம் பிதாவே உம் நீதிக்காய்,
பிதாவைத் தொழுதுகொள்ளுதல் —அவருடைய நீதி – 20

1 எம் பிதாவே உம் நீதிக்காய்,
உம்மைத் தொழுகின்றோம் யாம்;
கிறிஸ்துவில் நீர் நீதி செய்தீர்,
எம்மில் குற்றம் காண்போர் யார்?
நீதிபரர், உண்மையுள்ளோர்,
உம் நீதி மேல் நிற்கின்றோம்;
யார் திருப்புவார் உம் நீதி,
அநீதி இல்லை உம்மில்.

2 எம் பாவம் இயேசு மேல் வைத்தீர்,
மரித்தார் உம் நீதியால்;
உம் சட்ட கோரிக்கை யாவும்
அவர் நிறைவேற்றினார்.
அவர் பதிலீடு செய்தார்,
முழு திருப்தியானீர்;
எப்படி மீண்டும் கோருவீர்,
மா நீதியானவரே?

3 தேவபிதா ஏற்றுகொண்டீர்
இயேசுவை என் பதிலாய்;
தீர்ப்பு செய்தீர் நீதிமானை,
நீதியற்ற எமக்காய்.
பூரண நீதியின் சான்றாய்,
வலப்பக்கம் வீற்றுள்ளார்;
உம்முழு திருப்தியாக,

உம் தேவை சந்திக்கின்றார்.
4 இயேசுவின் இரத்தத்தினாலே
பிதாவே நீதி பெற்றோம்;
நீதியான பாதுகாப்பில்,
எம் நிலை அசையாது.
உம் நீதி எங்கள் நீதியாம்,
ஆக்கினை செய்வாரில்லை;
என்றும் சாட்சி கூறிடுவோம்
புது எருசலேமில்.