மேய்த்துப்பேணுதல்
திரட்டு 2
இரட்சிக்கப்பட்ட பிறகு
பாடம் பதினான்கு – தேவன்-நியமித்த வழி
யோ. 15:16—நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.
தேவன்-நியமித்த வழி புதிய ஏற்பாட்டுப்
பொருளாட்சியை நடைமுறைப்படுத்துவதற்கான வழியாக இருத்தல்
கர்த்தருடைய புதிய வழி, நாம் அனைவரும் அதற்குள் கொண்டுவரப்பட வேண்டியதான ஒரு கனவாகும். நான் இந்தக் கனவைக் கண்டு கொண்டே இருக்கிறேன், உங்கள் எல்லாரையும் இந்தக் கனவுக்குள் கொண்டுவருவதே என் பாரம். இந்தக் கனவை முழுப் பூமிக்கும் எடுத்துச் செல்வதற்கான பொறுப்பையும் பாரத்தையும் நாம் அனைவரும் சுமக்க வேண்டும். கர்த்தருடைய இரக்கத்தால் தேவன் நியமித்த வழியின்படி புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியை நடைமுறைப்படுத்த நாம் உத்தமமாக இருந்தால், நாம் இந்தக் கனவின் நிறைவேற்றத்தைக் காண்போம். (CWWL, 1987, vol. 2, “The God-ordained Way to Practice the New Testament Economy,” p. 319)
தேவன்-நியமித்த வழியின் நான்கு படிகள்
பெற்றெடுத்தல்—மக்களைத் தொடர்புகொண்டு மக்களை ஆதாயப்படுத்துதல்
தம் புதிய ஏற்பாட்டு பொருளாட்சியில் நமக்காக தேவன் நியமிக்கிற சேவை, முதலில், “ஆகையால் நீங்கள் புறப்பட்டுபோய் சகல தேசத்தாரையும் சீஷராக்குங்கள்” என்பதாகும் (மத். 28:19). போ என்ற வார்த்தையின் பொருள் மிக விசாலமானது. நீங்கள் போகும்போது, நீங்கள் நிச்சயமாக மக்களைச் சந்திக்க வேண்டும். நம் நெடுங்கால ஆய்வுக்குப் பின், வீட்டுக் கதவுகளைத் தட்டி மக்களைச் சந்திப்பதே இந்தப் போகுதலை நிறைவேற்றுவதற்கான மிகப் பயனுள்ள வழி என்பதை நாம் கண்டுபிடித்திருக்கிறோம். (CWWL, 1989, vol. 1, “The Organic Practice of the New Way,” p. 486)
மக்களை இரட்சிப்புக்குக் கொண்டுவருவதன் மூலம் நாம் எவ்வாறு கனிகொடுக்கிறோம்? கண்டிப்பாகப் பேசினால், இது வீட்டுக் கதவுகளைத் தட்டுவதைப் பற்றிய ஒரு காரியமல்ல. மாறாக, இது மக்களைத் தொடர்புகொள்வதைப் பற்றிய ஒரு காரியமாகும். மக்களை இரட்சிக்க நாம் அவர்களைத் தொடர்புகொள்ள வேண்டும்…” பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள்” என்று அப்போஸ்தலர் 1:8இல் கர்த்தர் கூறினார். சுவிசேஷம் பிரசங்கிப்பதில், நாம் மையத்திலிருந்து சுற்றுவட்டத்தை நோக்கியும், அதன்பின் பூமியின் கடைமுனைவரையிலும் வேலை செய்கிறோம். எனவே, நீங்கள் முதலில் உங்கள் நெருங்கிய உறவினர்களுக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்க வேண்டும். அடுத்து, நீங்கள் உங்கள் உறவினரிடமும் உங்கள் வாழ்க்கைத் துணையின் குடும்பத்தினரிடமும் செல்ல வேண்டும். கூடுதலாக, உங்கள் அயலகத்தார், வகுப்புத் தோழர்கள், சக ஊழியர்கள் ஆகிய அனைவரும் வாய்ப்புவளமிக்க இலக்குகள். வார இறுதிகளில் பொதுப் பூங்காக்களிலும் அநேக மக்கள் உள்ளனர். நீங்கள் அந்தப் பூங்காக்களில் ஒன்றில் நின்று, அங்குள்ள ஒருவரிடம் சுவிசேஷம் பிரசங்கிக்கலாம். வாய்ப்பு எங்கெங்கும் பெருகிக் கிடக்கின்றது. நாம் இதைச்செய்ய சித்தமாயிருக்கிறோமா இல்லையா என்பதே கேள்வி.
போஷித்தல்—வீட்டுக் கூடுகைகளில்
மக்களைப் போஷித்தல்
ஒரு நபர் ஞானஸ்நானத்திலிருந்து எழுந்தவுடன், நீங்கள் அவருடன் ஒரு நீண்ட நேரம் ஐக்கியம்கொள்ள வேண்டும். இதுதான் அவரது முதல் வீட்டுக்கூடுகை….இதன் பிறகு நீங்கள் அடுத்த கூடுகைக்கான ஒரு நேரத்தைக் குறித்துக்கொள்ள வேண்டும். அது அடுத்த ஓரிரு நாட்களுக்குள் இருப்பது நல்லது. புதிதாய்ப் பிறந்த குழந்தைகளுக்கு விசேஷித்த அக்கறை செலுத்துதல் தேவை என்பதே இதற்கான காரணம். (CWWL, 1989, vol. 1, “The Organic Practice of the New Way,” pp. 496-497, 499)
போதித்தல்—சிறுகுழுக் கூடுகைகளில்
அறிவுறுத்துதலும் சீர்பொருத்துதலும்
சிறுகுழுக் கூடுகை உங்கள் சொந்த வீட்டிலிருந்து துவங்க வேண்டும். அந்தக் கூடுகையின் நேரம் 7:30 மணிக்கு திட்டமிடப்பட்டாலும், ஏழு மணிக்கு முன்னதாகவே உங்கள் வீட்டில் நீங்கள் ஜெபிக்கத் துவங்க வேண்டும். நீங்கள் கூடுகைக்குச்செல்லும் வழியில், நீங்கள் தொடர்ந்து ஜெபிக்கவும் துதிக்கவும் வேண்டும். நீங்கள் அந்தச் சகோதரனின் வீட்டைச் சென்றடையும்போது, அங்கு ஏற்கெனவே சில சகோதரர்கள் இருப்பதை நீங்கள் காணக்கூடும். அப்போது நீங்கள் துதித்தல், ஜெபித்தல், அல்லது ஐக்கியப்படுதல் மூலம் அந்தக் கூடுகையைத் துவங்க வேண்டும். அந்தக் கூடுகையின் உள்ளடக்கம் பின்வரும் காரியங்களாக மட்டும் இருக்க வேண்டும்: முதலாவது, ஐக்கியம்; இரண்டாவது, ஜெபம்; மூன்றாவது பரஸ்பர கரிசனை; நான்காவது சத்தியத்தைப் போதித்தல்; ஐந்தாவது ஜீவனை ஆசையாக நாடுதல்; ஆறாவது, பரஸ்பர உற்சாகப்படுத்துதல், போதித்தல், மற்றும் மக்களைச் சந்திக்கச்சென்று சுவிசேஷம் பிரசங்கித்தல். இந்தச் சிறுகுழு கூடிவருகிற ஒவ்வொரு முறையும், அது என்ன செய்தாலும், அதன் உள்ளடக்கம் இந்த ஆறு காரியங்களுள் ஒன்றாக இருக்க வேண்டும்.
கட்டியெழுப்புதல்—சபைக் கூடுகைகளில்
தீர்க்கதரிசனம் உரைத்தல்
தீர்க்கதரிசனம் உரைப்பதென்றால், கர்த்தருக்காகப் பேசுவதும், கர்த்தரையே பேசுவதுமாகும். இது கிறிஸ்துவை மற்றவர்களுக்கு வழங்குவதாகும். சபைக் கூடுகைகளில் இதுவே பிரதான வேலை.
தேவன் விரும்புவது, ஒரு கூட்டுப் பாத்திரம், அது கிறிஸ்துவின் சரீரமாகிய சபையே….சபை கட்டியெழுப்பப்படுதலைப் பற்றிப் பேசுகிற ஓர் அதிகாரம் வேதத்தில் உள்ளது. இது 1 கொரிந்தியர் 14. அது கட்டியெழுப்புதல் என்ற வார்த்தையைக் குறைந்தபட்சம் ஐந்து முறை குறிப்பிடுகிறது. இந்த அதிகாரம் தீர்க்கதரிசனம் உரைத்தலைத் தவிர வேறெதனுடனும் இடைபடவில்லை. தீர்க்கதரிசனம் உரைத்தல் மட்டுமே சபையைக் கட்டியெழுப்புகிறது. (CWWL, 1989, vol. 1, “The Organic Practice of the New Way,” pp. 488-489, 513)
References: CWWL, 1987, vol. 2, “The God-ordained Way to Practice the New Testament Economy,” ch. 1; CWWL, 1989, vol. 1, “The Organic Practice of the New Way,” chs. 1—3; CWWL, 1989, vol. 1, “The Practical and Organic Building Up of the Church,” ch. 3
ஜீவனின் பாய்ந்தோடுதலே
சுவிசேஷம் பிரசங்கித்தல்—ஜீவனின் பாய்ந்தோடுதலால் – 925
1 ஜீவனின் பாய்ந்தோடுதலே
நற்செய்தி அறிவித்தல்;
நம் சாட்சியால்தான் அடைவோம்
தொலைந்த பாவிகளை.
எம்மூலம் உம் ஜீவன் பாய,
காணட்டும் பிறர், தேவா!
உம் பாத்திரமாம் எம்மூலம்
உயிர்ப்பியும் மக்களை.
2 ஜீவன் உணர்த்துவதால் தான்
மக்கள் விசுவாசிப்பர்;
ஜீவன் உட்பகிர்வதால்தான்
மக்கள் ஜீவன் பெறுவர்.
3 கனி தரும் கிளைகளாய்,
கர்த்தரில் வசிப்போமே;
உள்ளான ஜீவன் பாய்ந்தோடி,
கிறிஸ்துவை அளிப்போமே.
4 நம் வாழ்க்கையே அறிவிப்பாய்,
கிறிஸ்துவைக் காண்பிக்கட்டும்;
போதகப் பிரசங்கம் அல்ல,
ஜீவ விதை தூவட்டும்