மேய்த்துப்பேணுதல்

திரட்டு 2

இரட்சிக்கப்பட்ட பிறகு

பாடம் பதின்மூன்று – புதிய ஏற்பாட்டு ஊழியம்

அப். 1:17—அவன் எங்களில் ஒருவனாக எண்ணப்பட்டு, இந்த ஊழியத்தில் பங்குபெற்றவனாயிருந்தான்.
எபே. 4:12-13—ஊழியத்தின் வேலைக்கென்று, கிறிஸ்துவின் சரீரத்தின் கட்டியெழுப்புதலுக்கென்று, பரிசுத்தவனான்களின் சீர்பொருந்துதலுக்காக, 13அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார் (கிரே.).

புதிய ஏற்பாட்டு ஊழியம் பிரபஞ்சளாவியரீதியில் ஒப்பற்ற விதத்தில் ஒன்றாக இருத்தல்

முழுப் பிரபஞ்சத்திலும், இரண்டு ஊழியங்கள் மட்டுமே இருந்துள்ளன. 2 கொரிந்தியர் 3ல், பழைய உடன்படிக்கையின் ஊழியம் “மரணத்துக்கேதுவான ஊழியம்” என்றும், “ஆக்கினைத் தீர்ப்புக் கொடுக்கும் ஊழியம்” என்றும் குறிப்பிடப்படுகிறது (வ. 7, 9). பழைய ஏற்பாட்டு ஊழியம் இரண்டு காரியங்களை மட்டுமே செய்தது: அது மக்களை ஆக்கினைத்தீர்த்தது, மக்களை மரணத்துக்குள்ளாக்கியது. ஆனால் புதிய உடன்படிக்கையும், புதிய உடன்படிக்கையை அடிப்படையாகக் கொண்ட புதிய ஊழியமும், ஆவியானவரின் ஊழியமாகவும், நீதியின், அதாவது நீதிப்படுத்துதலின் ஊழியமாகவும் இருக்கிறது (வ. 8, 9).

எல்லா ஊழியக்காரர்களுக்கும் அந்த ஊழியத்தின் அவரவருக்கான
சொந்தப் பங்கு இருத்தல்

ஒப்பற்ற புதிய ஏற்பாட்டு ஊழியத்தில், புதிய உடன்படிக்கையின் ஊழியக்காரர்களாகிய எல்லா அப்போஸ்தலர்களின் எல்லா வேலைகளும் (ஊழியங்களும்) அடங்கியுள்ளன. 2 கொரிந்தியர் 3, வசனம் 6இல் தெளிவாக, ஊழியக்காரர்கள் என்ற பன்மை பயன்படுத்தப்பட்டுள்ளது, வசனங்கள் 8 மற்றும் 9இல் ஊழியம் என்ற ஒருமை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின், “இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம்பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை” என்று அதிகாரம் 4 இன் முதல் வசனத்தில் பவுல் கூறினான். இங்கு நாங்கள் என்ற பன்மைப் பிரதிப்பெயர்ச்சொல்லைப் பவுல் பயன்படுத்துகிறான். இந்த ஊழியத்தை உடையவனாகிய நான் (ஒருமை) என்று அவன் சொல்லவில்லை; மாறாக, இந்த ஊழியத்தை (ஒருமை) உடையவர்களாகிய நாங்கள் (பன்மை) என்று அவன் கூறுகிறான். இங்குள்ள நாங்கள் என்பது பவுலை மட்டுமல்ல, புதிய ஏற்பாட்டு ஊழியர்கள் எல்லாரையும் உள்ளடக்குகிறது. இவை யாவும், பல புதிய உடன்படிக்கை ஊழியர்களைக் கொண்ட ஒரே புதிய புதிய உடன்படிக்கை ஊழியம் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

2 தீமோத்தேயு 4:5இல் பவுல் தீமோத்தேயுவிடம், அவன் தன் ஊழியத்தை முழுவதும் நிறைவேற்ற வேண்டும் என்று கட்டளையிட்டான். இந்த வசனத்தில் பவுல் தீமோத்தேயுவின் ஊழியத்தைப் பற்றிப் பேசி, தனிப்பட்ட ஒருவனின் ஊழியத்தைக் குறிப்பிடுகிறான். இது தீமோத்தேயுவின் தனிப்பட்ட ஊழியம், ஆனால் இந்தத் தனிப்பட்ட ஊழியம், “இப்படிப்பட்ட ஊழியத்தின்,” அதாவது புதிய ஏற்பாட்டின் ஒப்பற்ற ஊழியமாகிய கூட்டு ஊழியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2 கொரிந்தியர் 4:1இல் உள்ள ஊழியம், புதிய ஏற்பாட்டு ஊழியர்கள் எல்லாருடைய கூட்டு ஊழியமாகும். இந்தக் கூட்டு ஊழியத்தில், பவுலுக்கு அவனது பங்கு இருந்தது, பேதுருவுக்கு அவனது பங்கு இருந்தது, தீமோத்தேயுவுக்கு அவனது பங்கு இருந்தது. எல்லா ஊழியர்களுக்கும் அந்த ஊழியத்தில் அவரவருடைய சொந்த பங்கு இருக்கிறது. இந்தப் பங்குகள் எல்லாவற்றையும் நாம் கூட்டிச் சேர்க்கும்போது, புதிய ஏற்பாட்டு ஊழியமாகிய “இப்படிப்பட்ட ஊழியம்” இருக்கிறது.

புதிய ஏற்பாட்டு ஊழியத்தின் வேலையானது, கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதில் சபையைப் பற்றிய தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சியை நிறைவேற்றுவதற்காக இருக்கிறது (எபே. 3:9-11). எல்லாப் பரிசுத்தவான்களும் ஊழியத்தின் வேலைக்கென்று சீர்பொருத்தப்பட வேண்டும் என்று எபேசியர் 4:12 கூறுகிறது. நூற்றுக்கணக்கான, இன்னும் ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்கள்கூட அந்த ஊழியத்தின் வேலைக்கென்று சீர்பொருத்தப்பட முடியும் என்பதே இதன் பொருள். இந்த வசனத்தில் ஊழியம் என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. சந்தேகமின்றி, இது புதிய உடன்படிக்கையில் உள்ளடங்கியிருக்கும் தேவனின் நித்தியக் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான புதிய ஏற்பாட்டின் ஒப்பற்ற ஊழியத்தைக் குறிக்கிறது. தேவனுடைய புதிய உடன்படிக்கை தேவனுடைய பொருளாட்சியை உள்ளடக்குகிறது. இந்தப் பொருளாட்சியை நிறைவேற்றுவதற்கு, அதிக வேலை தேவைப்படுகிறது, அந்த வேலையே ஊழியம். எபேசியர் 4:12இல் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதற்கென்று என்ற சொற்றொடர் ஊழியத்தின் வேலைக்கென்று என்பதுடன் நேர் இணையாக இடம்பெறுகிறது. ஊழியத்தின் வேலையைச் செய்வதென்றால் கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புவதாகும் என்பதை இது தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது. (CWWL, 1993, vol. 1, “The Ministry of the New Testament and the Teaching and Fellowship of the Apostles,” pp. 5-7)

பிரிவினைகள் வித்தியாசமான
ஊழியங்களிலிருந்து வருதல்

ஒரே ஊழியம் என்ற குறிப்பை வலியுறுத்த நான் பாரப்படுகிறேன். பிரிவினைகளும் குழப்பங்களுமே கிறிஸ்தவர்கள் மத்தியிலுள்ள மிகச் சேதப்படுத்துகிற காரியம். மேலும், எல்லாப் பிரிவினைகளும் குழப்பங்களும் ஒரேவோர் ஊற்றிலிருந்தே வருகின்றன, அந்த ஊற்று என்னவென்றால், வித்தியாசமான ஊழியங்கள்.
எல்லாப் பிரிய பரிசுத்தவான்களுக்கும் இப்படிப்பட்ட எச்சரிப்பின் வார்த்தைகளை நான் பேசும்போது, அதைவிட அதிகமாக, அவற்றை எனக்கே பேசுகிறேன். பல முறை நான் புதிதான ஏதோவொன்றைப் பார்த்தபோது, அது கர்த்தருடைய இன்றுவரையிலான ஊழியத்தின் வெளிச்சத்தில் மிகக் கவனமாகப் பரிசீலிக்கப்பட வேண்டியதிருந்தது. ஒவ்வொரு காரியமும் இன்று தேவனுடைய ஊழியத்திற்குரிய ஒன்றுதானா என்பதை மிகவும் கவனமாக நான் பரிசீலிக்க வேண்டும். ஒவ்வொரு குறிப்பும் தேவனுடைய அடிப்படையான பொருளாட்சியின்படி அளக்கப்பட வேண்டும். ஒவ்வொரு குறிப்பையும் எப்படி அளப்பது, ஒவ்வொரு காரியத்தைப் பற்றியும் எப்படி முடிவெடுப்பது என்பதெல்லாம், சபையை உற்பத்திசெய்வதற்காகக் கிறிஸ்துவின் ஊழியத்தை நிறைவேற்றுதல் என்ற தேவனுடைய அடிப்படையான பொருளாட்சியையே சார்ந்திருக்கிறது.

தேவனுடைய பொருளாட்சியைக் குறித்த இந்த ஒரே அடிப்படையான கோட்பாட்டையும், ஒரே அடிப்படையான காரணியையும் நாம் பற்றிக் கொண்டால், நாம் நன்கு பாதுகாக்கப்படுவோம். இருப்பினும், மற்றவர்களைக் கண்காணிப்பது மட்டுமல்லாமல், வேதத்துக்குரியதாகத் தோன்றுகிற வித்தியாசமான எண்ணங்களையோ வித்தியாசமான உபதேசங்களையோ உள்ளே கொண்டுவர எதிரியினால் நாம் பயன்படுத்தப்பட்டுவிடாதபடி, நம்மையும்கூட கவனித்துக்கொள்ள நாம் ஒவ்வொருவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். (CWWL, 1984, vol. 2, “Elders’ Training, Book 1: The Ministry of the New Testament,” pp. 7, 11-12)

புதிய ஏற்பாட்டு ஊழியத்தின் இலக்கு—
புதிய எருசலேமில் முழுநிறைவடைகிற
கிறிஸ்துவின் சரீரத்தைக் கட்டியெழுப்புதல்

தேவனுடைய பொருளாட்சியின் இலக்காகப் புதிய எருசலேம், தம்மால் மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசிகளோடு, முழுநிறைவடைந்த தேவனின் பிரபஞ்சளாவிய கூட்டிணைப்பாகும். தேவன் தம் தெய்வீகத் திரியேகத்துவத்தில், பரஸ்பரமாக ஒருவருக்குள் ஒருவர் வசித்து, ஒன்றாகச் சேர்ந்து வேலைசெய்கிற, ஒரு கூட்டிணைப்பாக இருக்கிறார் (யோ. 14:10-11). மேலும், கிறிஸ்து பிதாவில் இருக்கிறார், நாம் கிறிஸ்துவில் இருக்கிறோம், கிறிஸ்து நம்மில் இருக்கிறார் (வ. 20). இந்த மூன்று இல்களின் முடிவுரையும், கூட்டுமொத்தமும் நிஜத்தின் ஆவியானவரே; இவர், நமக்குள் நிஜமாக இருக்கும்படியான கிறிஸ்துவே (வ. 17). நிஜத்தின் ஆவியானவர் நம்மோடு இருப்பதற்கு மட்டுமல்ல, நம்மில் இருப்பதற்காகவும் வந்தார். குமாரனாகிய தேவனில் நாம் இருப்பதும், குமாரனாகிய தேவன் நம்மிலும், பிதாவிலும் இருப்பதும் ஒரு கூட்டிணைப்பை வெளிப்படுத்துகின்றன. இந்தக் கூட்டிணைப்பு, முதலில் கிறிஸ்துவின் சரீரமாகவும், அதன்பின் புதிய எருசலேமாகவும் இருக்கிறது. மறுபடிஜெநிப்பிக்கப்பட்ட விசுவாசிகளோடு முழுநிறைவடைந்த தேவனின் பெரிதாக்கப்பட்ட, பிரபஞ்சளாவிய கூட்டிணைப்பாகிய புதிய எருசலேமை முழுநிறைவாக்குகிற ஒரு சரீரத்தைக் கிறிஸ்துவுக்காகப் பெறுவதே தேவனுடைய பொருளாட்சி. (CWWL, 1994-1997, vol. 5, “Crystallization-study of the Humanity of Christ,” p. 410)

References: CWWL, 1993, vol. 1, “The Ministry of the New Testament and the Teaching and Fellowship of the Apostles,” ch. 1; CWWL, 1984, vol. 2, “Elders’ Training, Book 1: The Ministry of the New Testament,” ch. 1; CWWL, 1994-1997, vol. 5, “Crystallization-study of the Humanity of Christ,” ch. 6

சேவை, வேலை, சரீரத்தில்,
சேவை—சரீரத்தில் – 913

1 சேவை, வேலை, சரீரத்தில்,
கர்த்தர் காண்பிப்பதிதே;
அவர் நோக்கம் சரீரமே,
நிறைவேற்றுவோம் நாமே.

சேவை, வேலை, சரீரத்தில்,
தனியனாய் வேண்டாமே;
சரீரத்தின் அங்கங்களாய்,
சேவிப்போம் நாம் இணைந்தே.

2 அங்கங்களாய் உயிர்பெற்றோம்
தனியனாய் அல்லவே;
என்றும் ஒன்றாய் சேவிப்போமே
பரஸ்பர சேவையில்.

3 வாழும் கற்கள், கட்டப்பட்டோம்,
தேவ வீடாய் இருக்க,
தூய ஆசார்யத்துவமாய்,
சேவிப்போமே இசைவாய்.

4 ஒன்றாய் நாமும் கட்டப்பட்டு,
நம் ஸ்தானத்தில் சேவிப்போம்;
நம் சேவையின் அஸ்திபாரம்
சரீர குணாம்சமே.

5 நம் ஊழிய, சேவையிலே,
சரீரம் நிரப்பீடு;
துண்டித்துத் தனியாய் வாழ்ந்தால்,
சாவோம் செயல்பாடின்றி.

6 சரீரத்தில் சேவிக்கையில்
தலையின் வளம் கொள்வோம்;
அங்கங்களாய் சேவிக்கையில்,
கிறிஸ்தின் நிறை காண்பிப்போம்.

7 தலையை நாம் பற்றிக்கொள்வோம்,
ஒன்றாய் நாம் வளர்ந்திட,
தலையின் ஜீவன் நம் மூலம்,
சரீரத்துள் பாய்ந்திட.

8 கர்த்தா, எம் உடல் படைத்தோம்,
மறுசாயலாக்கும்-உம்
சித்தம், சரீரம், அறிய,
சேவித்து அசைந்திட.