மேய்த்துப்பேணுதல்
திரட்டு 2
இரட்சிக்கப்பட்ட பிறகு
பாடம் பன்னிரெண்டு – கூடிவரும் வாழ்க்கை
மத். 18:20—ஏனெனில், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்திற்குள் எங்கே கூட்டிசேர்க்கப்பட்டிருக்கின்றனரோ, அங்கு அவர்கள் மத்தியில் நான் இருக்கிறேன் என்றார் (கிரே.).
எபி. 10:24-25—மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து, 25சபை கூடிவருதலைச் சிலர் விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்து வருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்ல வேண்டும்.
விசுவாசிகளுக்கான தேவனுடைய நியமனம்
[எபிரெயர் 10:25இல் சபைகூடிவருதல் என்று உள்ள] நம் கூடிவருதல், நம் கிறிஸ்தவக் கூடுகைகளைக் குறிக்கிறது. இந்தப் பிரபஞ்சத்திலுள்ள ஒவ்வோர் உயிரினமும் வாழ வேண்டிய வழியைத் தேவன் நியமித்திருக்கிறார். தேவனின் நியமனமே, ஒரு குறிப்பிட்ட உயிரினம் வாழ்வதற்கான பிரமாணமாகும். அந்த உயிரினம் இந்தப் பிரமாணத்திற்குக் கீழ்ப்படிந்தால், அது பிழைத்திருக்கும், ஆசீர்வதிக்கப்படும். கிறிஸ்துவில் விசுவாசித்திருக்கிற நமக்கும் தேவன் இவ்வாறே இருக்கிறார். நம் பிழைப்பு மற்றும் ஆசீர்வாதத்திற்கான பிரமாணமாக ஆகின்ற, நமக்கான தேவனின் நியமனம், கூடுகைகள். மீன்களுக்குத் தண்ணீரும், பறவைகளுக்கு ஆகாயமும் இருப்பதுபோலவே கிறிஸ்தவர்களுக்குக் கூடுகைகள் இருக்கின்றன. மீன்கள் தண்ணீரிலும் பறவைகள் ஆகாயத்திலுமே வாழ்ந்தாக வேண்டும் என்பது போலவே கிறிஸ்தவர்கள் தங்கள் ஆவிக்குரிய பிழைத்திருத்தலையும் வாழ்க்கையையும் கூடுகைகளால் பராமரித்தாக வேண்டும்.
ஆவிக்குரிய வாழ்க்கையின் ஒரு கோரிக்கை
ஒவ்வோர் உயிரினத்துக்கும் அதினதின் சொந்தக் குணாதிசயம், வழக்கமாக, பல குணாதிசயங்கள் உண்டு. விசுவாசிகளான நாம் பெற்றுள்ள ஆவிக்குரிய ஜீவனுக்கும், அது நம்மில் தேவனின் ஜீவனாக இருப்பதால், பல குணாதிசயங்கள் உண்டு. உதாரணத்திற்கு, பாவத்தின்மீதான வெறுப்பும், பாவத்திலிருந்து பிரிவதும் இந்த ஜீவனின் குணாதிசயங்கள். தேவனைக் கிட்டிச்சேர்வதற்கான விருப்பமும், அவரைச் சேவிப்பதற்கான விருப்பமும் கூட அதன் குணாதிசயங்கள். நம் ஆவிக்குரிய ஜீவனின் பல குணாதிசயங்களுள் ஒன்று, மந்தையாகக் கூடுவதாகும், ஒன்றாகக் கூடிவருவதாகும். யோவான் 10:3 மற்றும் 16, நாம் இரட்சிக்கப்பட்டிருப்பதால், நாம் கர்த்தரின் செம்மறியாடுகள் என்று நமக்குக் காட்டுகின்றன. செம்மறியாட்டு ஜீவனின் குணாதிசயம் மந்தையாகக் கூடுவதும், மற்ற செம்மறியாடுகளைவிட்டு பிரிக்கப்படுவதை வெறுப்பதுமாகும். எனவே, நாம் கர்த்தரின் செம்மறியாடுகள் என்று மட்டுமல்ல, அவரது மந்தையும் கூட என்று வேதம் கூறுகிறது (அப். 20:28; 1 பேதுரு 5:2). மந்தையின் ஆசீர்வாதத்தில் பங்குபெறுகிற ஒரு செம்மறியாடாக இருக்க நாம் மந்தையுடன் கூடிவந்தாக வேண்டும். நம்முள் இருக்கிற ஆவிக்குரிய “செம்மறியாட்டு ஜீவன்” நம்மிடம் இதைக் கோருகிறது.
விசுவாசிகளுடைய கூடுகைகளின் முக்கியத்துவம்
[மத்தேயு 18:20இல்] கர்த்தருக்குரியவர்களான நம்மில் இரண்டு அல்லது மூன்றுபேர் அவரது நாமத்திற்குள், அதாவது அவரது நாமத்தில் கூட்டிச் சேர்க்கப்படும் இடத்திலெல்லாம், கர்த்தர் நம் மத்தியில் இருப்பதாக அவர் விசேஷமாக வாக்குத்தத்தம்செய்தார். நாம் அவரது நாமத்தில் கூடும் போது, நாம் ஒரு விசேஷித்த விதத்தில் அவரது பிரசன்னத்தை அனுபவித்துமகிழ்கிறோம். அவரது சாட்சாத்து பிரசன்னம் சந்தேகமின்றி நமக்குப் பிரகாசித்தல், கிருபை, நிரப்பீடு, மற்றும் எல்லாவித ஆசீர்வாதத்தையும் கொண்டுவருகிறது.
அன்புகூர உற்சாகப்படுத்தவும், நற்கிரியைகளுக்காக ஒருவருக்கொருவர் புத்திசொல்லவும் நாம் ஒருவரையொருவர் கருத்தில்கொள்ள கூடுகைகள் வழிவகுக்கும் என்று [எபிரெயர் 10:24-25இல்] குறிப்பிடப்பட்டிருப்பது நமக்குக் காட்டுகிறது. இது பரிசுத்தவான்களிடமிருந்து ஜீவ நிரப்பீட்டைப் பெற நம்மை அவர்களுடன் ஆவிக்குரிய ஐக்கியங்கொள்ளச் செய்கிறது. எனவே, நாம் கூடுகைகளை விட்டுவிடக் கூடாது, கர்த்தர் சீக்கிரம் திரும்பி வருவார் என்று எவ்வளவாய் அறிகிறோமோ அவ்வளவாய் நாம் கூடிவர வேண்டும். நம் கிறிஸ்தவ வாழ்க்கை, தன்னந்தனியாக வாழும் ஒரு வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கையைப் போன்றதல்ல; நம் ஜீவன், மந்தையாகக் கூடுவதையும், கூடிவருகிற ஒரு வாழ்க்கை வாழ்வதையும் கோருகிற செம்மறியாட்டு ஜீவனைப் போன்றது. எனவே, நாம் கூடிவர வேண்டும், கூடுகைகள் நமக்கு மிகவும் முக்கியம். (Life Lessons, vol. 2, pp. 15-17)
விசுவாசிகளுக்கான பல்வேறு
வகையான கூடுகைகள்
அப்பம் பிட்கும் கூடுகை
அப்பம் பிட்குதல் கர்த்தருடைய இராப்போஜனத்தைப் புசிப்பதற்காகவும், நமக்காக மரித்த கர்த்தரை நினைவுகூர்வதற்காகவும் இருக்கிறது (1 கொரி. 11:20-21, 23-25). கர்த்தருடைய மரணத்தால் மீட்கப்பட்டவர்களாகிய நமக்கு இதுவே முதல் வகையான வழக்கமான கூடுகையாக இருக்க வேண்டும்.
அப்பம்பிட்கும் கூடுகையானது, கர்த்தரின் அனுபவ மகிழ்ச்சிக்காக கர்த்தரை நினைவுகூருதலை அதன் மையமாகக் கொண்டு கர்த்தரை நினைவுகூருவதற்காக அன்றி வேறெதற்காகவும் இல்லை. இந்தக் கூடுகையிலுள்ள ஒவ்வொன்றும், அது பாடல்கள் பாடுதல், ஜெபித்தல், வேதம் வாசித்தல் அல்லது ஏவுதலின் வார்த்தைகள் பேசுதல் என்று எதுவாக இருந்தாலும், மற்றவர்கள் கர்த்தரையே நினைவுகூரும்படி அவர்கள் கர்த்தரின் நபர் மற்றும் வேலையையோ, அவரது அன்பு மற்றும் நற்பண்புகளையோ, பூமியில் அவரது வாழ்க்கை அல்லது பாடுகளையோ, அல்லது பரலோகத்தில் அவரது கனம் அல்லது மகிமையையோ பரிசீலிக்கும்படி அல்லது உணர்ந்தறியும்படி, அதைப் பற்றிப் பேசி, கர்த்தரையே மையமாக எடுத்துக்கொள்ள வேண்டும். (Life Lessons, vol. 2, pp. 20, 27)
ஜெபக் கூட்டம்
[மத்தேயு 18:18-20இல்] கர்த்தர் கூடுகையில் ஜெபிக்கும் ஜெபத்தைப் பற்றிப் பேசுகிறார். இந்த வகையான ஜெபம், பரலோகத்தில் கட்டப்பட்டதைப் பூமியில் கட்டவும், பரலோகத்தில் கட்டவிழ்க்கப்பட்டதைப் பூமியில் கட்டவிழ்க்கவும் கூடியதாய், ஒரு தனிப்பட்ட நபரின் ஜெபத்தைவிட அதிக வல்லமையானது.
ஆவிக்குரிய வரங்களைப் பயிற்சிசெய்யவும்,
பரஸ்பர கட்டியெழுப்புதலுக்குமான கூடுகை
[1 கொரிந்தியர் 14:26இல்] குறிப்பிடப்பட்டுள்ள கூடுகை ஆவிக்குரிய வரங்களைப் பயிற்சி செய்வதற்காகவும் பரஸ்பர கட்டியெழுப்புதலுக்குமான கூடுகையாகும். இவ்வகையான கூடுகையில், ஒரு விசேஷமான காரியத்தைச் செய்யும் ஒரு விசேஷமான நபர் எவருமில்லை, மாறாக ஒவ்வொருவரும் ஆவிக்குரிய வரங்களைப் பயிற்சி செய்கின்றனர்; ஒருவன் ஒரு சங்கீதம் வைத்திருக்கிறான், ஒருவன் ஒரு போதனை வைத்திருக்கிறான், ஒருவன் ஒரு வெளிப்பாடு வைத்திருக்கிறான், ஒருவன் இதைச் செய்கிறான், இன்னொருவன் அதைச் செய்கிறான். கட்டியெழுப்பும் இலக்கோடும் மற்றவர்களைப் பக்திவிருத்தி அடையச் செய்யும் இலக்கோடும் ஒவ்வொருவனும் பங்குபெறலாம்.
வார்த்தையை வாசிப்பதற்கான கூடுகை
[அப்போஸ்தலர் 15:30-31] பவுலும் அவனது கூட்டாளிகளும் அந்தியோகியாவை வந்தடைந்தபோது, அவர்கள் பரிசுத்த ஆவியின் நடத்துதலின்கீழ், எருசலேமில் அப்போஸ்தலர்கள் மற்றும் மூப்பர்களால் எழுதப்பட்ட கடிதத்தை பரிசுத்தவான்களுக்கு வாசித்துக்காட்ட, அவர்களைக் கூடிவரச் செய்தனர் என்று கூறுகிறது. எனவே, நாம் வேதத்திலுள்ள தேவனுடைய வார்த்தையை வாசிக்க அவ்வப்போது கூடிவருவதும் தேவை.
செய்திகள் கேட்பதற்கான கூடுகை
அந்த நாளில், துரோவா பட்டணத்திலுள்ள விசுவாசிகள், தாங்கள் பக்திவிருத்தியடைந்து நிலைநிறுத்தப்படுமாறு, தேவனின் ஆவிக்குரிய காரியங்களைப் பற்றி பவுல் அவர்களோடு சம்பாஷிப்பதைக் கேட்க ஒன்றாகக் கூடிவந்தனர் என்று [அப்போஸ்தலர் 20:7 கூறுகிறது]. ஆகையால், நாமும் பக்திவிருத்தியடைந்து நிலைநிறுத்தப்படுமாறு, தேவனுக்காக கர்த்தருடைய வார்த்தையை ஊழியம் செய்யும் ஊழியரால் பேசப்படுகிற ஆவிக்குரிய செய்திகளைக் கவனித்துக் கேட்பதற்கு சில வேளைகளில் கூடிவர வேண்டும். (Life Lessons, vol. 2, pp. 20-22)
Reference: Life Lessons, vol. 2, lsns. 14—16
கிறிஸ்துவைக் கொண்டு கூடும்போழ்,
கூடுகைகள்—கிறிஸ்துவைக் கண்காட்சியாகக் காண்பித்தல் – 864*
1 கிறிஸ்துவைக் கொண்டு கூடும்போழ்,
அவர் நிறைவின் மிகுதி,
தேவன் உண்ணப் படைத்து நாம்,
கிறிஸ்துவைக் காண்பிப்போம்.
கிறிஸ்துவைக் காண்பிப்போம்,
கிறிஸ்துவைக் காண்பிப்போம்;
சபைக்கு அவர் செல்வம் தந்து
கிறிஸ்துவைக் காண்பிப்போம்.
2 நம் வாழ்க்கை, யுத்தம், உழைப்பு,
இராப்பகலாய் கிறிஸ்துவில்தான்,
அவர் நிறைவுடன் கூடி,
கிறிஸ்துவைக் காண்பிக்க.
3 நம் வாழ்க்கை, நபர், செயல்கள்
நம் மெய் சாரமும் கிறிஸ்துவே,
ஒவ்வோர் முறையும் கூடும்போழ்,
கிறிஸ்துவைக் காண்பிக்க.
4 கிறிஸ்துவைக் கூட்டங்களில் நாம்
பரஸ்பரமாய் பகிர்ந்து,
நாம் தேவனோடு மகிழ்ந்து
கிறிஸ்துவைக் காண்பிப்போம்.
5 தேவன் திருப்தியடைய,
உயிர்த்து, பரமேறிய
கிறிஸ்துவை ஏறெடுத்து, நாம்
கிறிஸ்துவைக் காண்பிப்போம்.
6 நம் கூட்டங்களின் மையமும்,
நிஜமும், சுற்றுச்சூழலும்,
ஊழியம், யாவும் இதற்கே—
கிறிஸ்துவைக் காண்பிக்க.
7 நம் சாட்சி, ஜெபம், ஐக்கியம்,
வரங்களின் பயன்பாடும்,
எதுவாயினும் கிறிஸ்துவை
காட்சியாக்க வேண்டும்.
8 பிதாவைக் கனப்படுத்த,
மகன் கிறிஸ்துவை உயர்த்தி,
கூடும் நோக்கம் நிறைவேற்றி,
கிறிஸ்துவைக் காண்பிப்போம்.