மேய்த்துப்பேணுதல்

திரட்டு 2

இரட்சிக்கப்பட்ட பிறகு

பாடம் பதினொன்று – கிறிஸ்துவின் சரீரம்

எபே. 1:22-23—எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, 23எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.

சபை கிறிஸ்துவின் சரீரம் என்று எபேசியர் 1:22 மற்றும் 23 வெளிப்படுத்துகின்றன. “எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவாகிய சரீரமான சபைக்கு அவரை எல்லாவற்றிற்கும் மேலான தலையாகத் தந்தருளினார்.” சபை ஒரு நிறுவனமல்ல, மாறாக தலையின் வெளியாக்கத்திற்காக மறுபடி ஜெநிப்பிக்கப்பட்டு, தேவனின் ஜீவனைப் பெற்றிருக்கிற எல்லா விசுவாசிகளாலும் தொகுக்கப்பட்ட ஒரு ஜீவாதார சரீரமாகும். சரீரம் தலையின் நிறைவாகும், அந்த நிறைவு தலையின் வெளியாக்கமாகும். எல்லாரையும் முற்றும்முடிய நிரப்புகிறவராக கிறிஸ்துவுக்கு, தம் நிறைவாக இருக்கும்படி சரீரம் தேவை. இந்தச் சரீரம் அவரது வெளியாக்கமாக இருக்கும்படியான அவரது சபையே.

சபை கிறிஸ்துவின் சரீரம், கிறிஸ்து அந்தச் சபையின் தலை (கொலோ. 1:18). எனவே, சபையும் கிறிஸ்துவும் ஒரே சரீரம், அதாவது, ஒரே ஜீவனையும் சுபாவத்தையும் கொண்டிருக்கிற பரம்புதிரான, பிரபஞ்சமளாவிய மாபெரும் மனிதன். கிறிஸ்து, சரீரத்தின் ஜீவன் மற்றும் உள்ளடக்கம்; சரீரம், கிறிஸ்துவின் உயிரி மற்றும் வெளியாக்கம். சரீரமாக சபை எல்லாவற்றையும் கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொள்கிறது; ஆகையால் கிறிஸ்துவினுடைய யாவும் சபையின் மூலம் வெளிக்காட்டப்படுகிறது. கிறிஸ்து, சபை ஆகிய இருவரும் கிறிஸ்துவை உள்ளார்ந்த உள்ளடக்கமாகவும், சபையைப் புறம்பான வெளியாக்கமாகவும் கொண்ட ஒரே வஸ்துவாக கலந்திணைக்கப்பட்டு, இணைக்கப்பட்டுள்ளனர். (The Conclusion of the New Testament, pp. 2245-2246)

அவயவங்களால் தொகுக்கப்படுதல்

கிறிஸ்துவின் சரீரமானது, சரீரத்தின் அவயவங்களாக இருக்கிற விசுவாசிகளால் தொகுக்கப்படுகிறது. “அநேகராகிய நாமும் கிறிஸ்துவுக்குள் ஒரே சரீரமாயிருக்கிறோம்” என்று ரோமர் 12:5 கூறுகிறது. கிறிஸ்துவில் என்ற சொற்றொடர் மிகவும் உட்கருத்துவாய்ந்தது, ஏனெனில் இது கிறிஸ்துவுடன் விசுவாசிகளின் ஜீவாதார சேர்க்கையைச் சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்துவிலுள்ள விசுவாசிகளாக, நாம் ஜீவாதாரமாகக் கிறிஸ்துவுடன் ஒன்றாயிருக்கிறோம்; அவருடன் நமக்கு ஒரு ஜீவ சேர்க்கை இருக்கிறது. நாம் கிறிஸ்துவுடன் ஜீவாதாரமாக இணைக்கப்பட்டிருப்பதால், நாம் ஜீவாதாரமாகக் கிறிஸ்துவின் சரீரத்திற்குள் நடப்பட்டிருக்கிறோம். இப்போது, கிறிஸ்துவில், நாம் சரீரத்தின் ஜீவாதார அங்கங்களாக இருக்கிறோம். சரீர வாழ்க்கை ஒரு கூட்டு வாழ்க்கையாகும். நம் பெளதிக சரீரத்தைப் பரிசீலிப்பதன் மூலம் நாம் இதை உணர்ந்தறியலாம், அது பல அவயவங்களால் தொகுக்கப்பட்ட ஒரு கூட்டு வஸ்து, அவை எல்லாவற்றுக்கும் அவற்றின் ஜீவனும் சரீரத்தில் செயல்பாடும் உள்ளது. ஓர் அவயவம் சரீரத்திலிருந்து பிரிக்கப்பட்டாலோ, துண்டிக்கப்பட்டாலோ, அது தன் ஜீவனையும் செயல்பாட்டையும் இழந்துபோகிறது. சரீரத்தின் எந்த அவயவமும் சரீரத்தைவிட்டு சுயாதீனமாக இருக்க முடியாது, அல்லது தனித்துவமாய் ஆக முடியாது என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. கிறிஸ்துவின் சரீரத்திற்கும் கோட்பாடு இதுவே. விசுவாசிகளில் எவரும் சரீரத்தின் அவயவங்களாக ஒரு முழுமையான வஸ்து அல்ல; மாறாக ஒவ்வொரு விசுவாசியும் சரீரத்தின் ஓர் அவயவம். ஆகையால், ஜீவன் மற்றும் செயல்பாட்டுக்காக நாம் சரீரத்தில் நிலைத்திருக்க வேண்டும்.

நாம் ஒரே சரீரத்தில் ஒருவருக்கொருவர் அவயவங்களாக இருக்கிறோம் என்று ரோமர் 12:5 வெளிப்படுத்துகிறது. பலரான நாம் ஒரே சரீரமாக, ஒரே வஸ்துவாக இருக்கிறோம். சரீரத்தில் நாம் கூட்டான விதத்தில் செயல்படவும் கிறிஸ்துவை வெளிக்காட்டவும் முடியும். நாம் பல அவயவங்களாக இருக்கிறோம், நாம் பல தனித்தனி அலகுகள் அல்ல. நாம் ஒரு ஜீவிக்கிற, செயல்படுகிற சரீரமாக இருக்குமாறு, அவயவங்களாக நாம் மற்ற ஒவ்வொருவருடனும் ஒருங்கிணைய வேண்டும்.

ஒரே சரீரத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படுதல்

“நாம் யூதராயினும், கிரேக்கராயினும், அடிமைகளாயினும், சுயாதீனராயினும், எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம்பண்ணப்பட்டு, எல்லாரும் ஒரே ஆவிக்குள்ளாகவே தாகந்தீர்க்கப்பட்டோம்” என்று ஒன்று கொரிந்தியர் 12:13 கூறுகிறது. ஆவியானவர் நம் ஆவிக்குரிய ஞானஸ்நானத்தின் மண்டலமாகவும் மூலக்கூறாகவும் இருப்பதுபோலவும், இப்படிப்பட்ட ஓர் ஆவியானவரில் கிறிஸ்துவின் சரீரமாகிய ஒரே ஜீவாதார வஸ்துக்குள் நாம் எல்லாரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருப்பதாலும், நம் இனம், தேசியம், சமுதாய அந்தஸ்து ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், நாம் எல்லாரும் இந்த ஒரே சரீரமாக இருக்க வேண்டும். கிறிஸ்து இந்தச் சரீரத்தின் ஜீவனாவும் ஆக்கக்கூறாகவும் இருக்கிறார், ஆவியானவர் கிறிஸ்துவின் நிஜமாக இருக்கிறார். இந்த ஒரே ஆவியானவரில்தான், கிறிஸ்துவை வெளிக்காட்ட இந்த ஒரே ஜீவிக்கும் சரீரத்திற்குள் நாம் அனைவரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.

ஒரே ஆவியானவர் பருகும்படி தரப்படுதல்

ஒரே ஆவியானவரில் நாம் அனைவரும் ஒரே சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டது மட்டுமல்லாமல், “பருகும்படி நம் அனைவருக்கும் ஒரே ஆவியானவர் தரப்பட்டிருக்கிறார்” என்றும் 1 கொரிந்தியர் 12:13இல் பவுல் நமக்குக் கூறுகிறான். ஆவியானவரில் ஞானஸ்நானம் பண்ணப்படுவதென்றால், ஆவியானவருக்குள் நுழைந்து, அவருக்குள் தொலைந்துபோவதாகும். ஆவியானவரைப் பருகுவதென்றால் ஆவியானவரை உள்ளெடுத்துக்கொண்டு, நம் ஆள்தத்துவம் அவரைக் கொண்டு பூரிதமாக்கப்படுவதாகும். ஞானஸ்நானம் மற்றும் பருகுதல் என்ற இந்த இரண்டு வழிமுறைகள் மூலம், நாம் ஆவியானவரோடு கலந்திணைக்கப்படுகிறோம். ஆவியானவரில் ஞானஸ்நானம் பண்ணப்படுவது, அந்தக் கலந்திணைதலின் துவக்கமாகும், அது ஒரே முறையாக நடைபெற்றது. ஆவியானவரைப் பருகுவது அந்தக் கலந்திணைதலின் தொடர்ச்சியும் நிறைவேற்றமும் ஆகும், அது முடிவில்லாதது, என்றென்றும் தொடர்வது. ஆகையால், ஒரே ஆவியானவரில் ஞானஸ்நானம் பண்ணப்பட்ட பிறகு, அந்த ஆவியானவரைக் கொண்டு பூரிதமாக்கப்பட்டு, ஊடுருவி வியாபிக்கப்படும்படி அந்த ஒரே ஆவியானவரை நாம் பருக வேண்டும்.

நாம் சரீரத்தில் ஒரே ஆவியானவரைப் பருகுகிறோம் என்பதை ஒன்று கொரிந்தியர் 12:13 சுட்டிக்காட்டுகிறது. ஒரே ஆவியானவரைப் பருகும்படி ஒரே ஆவியானவரில் நாம் அனைவரும் ஒரே சரீரத்திற்குள் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். ஆவியானவர் சரீரத்தில் இருக்கிறார். நாம் சரீரத்தில் தங்கியிருக்கும்வரை, நாம் அந்த ஆவியானவரைப் பருகலாம்.

ஒரே சரீரத்தில் ஞானஸ்நானம் பண்ணப்படுவது, ஒரே முறையாக ஏதோவொன்றை அனுபவிப்பதாகும், ஆனால் ஒரே ஆவியானவரைப் பருகுவது, ஒரு தொடர்ச்சியான அனுபவம். சரீர வாழ்க்கையில், ஞானஸ்நானம், பருகுதல் இரண்டும் உள்ளன. ஞானஸ்நானம் என்பது உண்மையைப் பெற்றுக்கொள்ளவும் ஏற்றுக்கொள்ளவுமான வழிமுறையாக இருக்கிறது, பருகுதல் கணந்தோறுமுள்ள அனுபவமாக இருக்கிறது. இப்போது நாம் பருகுவதற்காக சரீரத்தில் இருக்கிறோம். ஒரே ஆவியானவரில் நாம் அனைவரும் ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம், இப்போது நாம் ஒரே ஆவியானவரைப் பருகிக்கொண்டு ஒரே சரீரத்தில் இருக்கிறோம்.

கிறிஸ்துவின் ஆராய்ந்தறிய முடியாத
ஐசுவரியங்களைக் கொண்டு கட்டியமைக்கப்படுதல்

கிறிஸ்துவின் சரீரம், கிறிஸ்துவின் ஆராய்ந்தறிய முடியாத ஐசுவரியங்களைக் கொண்டு கட்டியமைக்கப்படுகிறது. “பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என்று எபேசியர் 3:8இல் பவுல் கூறுகிறான். கிறிஸ்துவின் சரீரமாக சபை உண்டாகுமாறு பவுல் கிறிஸ்துவின் ஆராய்ந்தறிய முடியாத ஐசுவரியங்களைப் பிரசங்கித்தான். சரீரம் கிறிஸ்துவின் ஐசுவரியங்களிலிருந்து வெளிவருகிறது.

எபேசியர் புத்தகம், கிறிஸ்துவின் ஆராய்ந்தறிய முடியாத ஐசுவரியங்கள் என்ற பதத்துடன் சேர்த்து, “எல்லாவற்றையும் எல்லாவற்றாலும் நிரப்புகிறவருடைய நிறைவை” பற்றியும் பேசுகிறது (1:23). கிறிஸ்துவின் ஐசுவரியங்களுக்கும் கிறிஸ்துவின் நிறைவுக்கும் இடையே ஒரு முக்கியமான வேறுபாடு இருக்கிறது. கிறிஸ்துவின் ஐசுவரியங்கள் என்பது, கிறிஸ்து என்னவாக இருக்கிறாரோ அந்த எல்லாக் காரியங்களாகும். கிறிஸ்துவின் நிறைவு என்பது, சரீரமாகிய சபையாகும், அதாவது கிறிஸ்துவின் ஐசுவரியங்களின் அனுபவமகிழ்ச்சியின் விளைவு ஆகும். நம் இயற்கை மனிதனில், நாம் சரீரமாகிய கிறிஸ்துவின் நிறைவல்ல. ஆனால் நாம் கிறிஸ்துவின் ஐசுவரியங்களை அனுபவித்துமகிழும்போது, நாம் அவரது நிறைவாகிய சரீரமாகிறோம். (The Conclusion of the New Testament, pp. 2256-2261)

கிறிஸ்துவைத் தலையாகக் கொண்டு

கிறிஸ்துவே சரீரத்தின் தலை. “கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறார்…அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்” என்று எபேசியர் 5:23இல் பவுல் கூறுகிறான். இரட்சகர், அன்பைப் பற்றிய காரியம், இப்படியிருக்க தலை, அதிகாரத்தைப் பற்றிய காரியம். நம் இரட்சகராக, கிறிஸ்துவை நாம் நேசிக்கிறோம், ஆனால் நம் தலையாக, அவருக்கு நாம் பணிந்தடங்கவும் வேண்டும்.

சரீரமாகிய சபையின் தலையாக, கிறிஸ்து சரீரத்துடன் இணைந்திருக்கிறார். ஒருவரின் பெளதிக சரீரத்தில் தலையும் சரீரமும் ஒன்றாக இருப்பதுபோல, தலையாகிய கிறிஸ்துவும், அவரது சரீரமாகிய சபையும் இணைந்திருக்கின்றனர், எனவே ஒன்றாக இருக்கின்றனர். சரீரம் தெய்வீக ஜீவனிலும் தெய்வீக ஆவியிலும் தலையுடன் ஒன்றாக இருக்கிறது.

தலையாகக் கிறிஸ்து நிறைவேற்றியிருக்கிற, பெற்றிருக்கிற, அடைந்திருக்கிற அனைத்தும் சரீரத்திற்காக மட்டுமல்ல, அதோடு, சரீரத்திற்கு இருக்கிறது (1:22-23). தலை ஆதாயப்படுத்தியிருப்பது இப்போது சரீரத்திற்குரியது என்பதே இதன் பொருள், ஏனெனில் அது சரீரத்திற்குள் கடத்தப்படுகிறது. ஆகையால் சரீரம் தலையின் கடத்துதலிலிருந்து உருவாகிறது. கிறிஸ்து கடந்துசென்றிருக்கிற, பெற்றிருக்கிற, அடைந்திருக்கிறதெல்லாம் இப்போது சரீரத்திற்குள் கடத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. (The Conclusion of the New Testament, p. 2265)

Reference: The Conclusion of the New Testament, msgs. 210—212

நம் ஜீவனை வெளிக்காட்ட
சபை—கிறிஸ்துவின் அதிகரிப்பு – 819

1 நம் ஜீவனை வெளிக்காட்ட
நிறைவு நம் சரீரம்,
கிறிஸ்துவின் ஜீவனைக் காட்ட,
சபை அவர் சரீரம்.

2 ஆதாமினின்று வந்த ஏவாள்
ஆதாமின் பாகம் போல்,
சபை கிறிஸ்துவின் பெருக்கம்
அவளுள்ளே அவர்.

3 மண்ணில் வீழ்ந்த ஓர் விதையால்
விதைகள் வந்தன,
பல விதைகள் இழைந்து
அப்பமாயின;

4 பல கிறிஸ்தவராம் சபை,
அவர் பெருக்கம்,
அவரைக் காட்டும் சரீரம்,
தேவ மகிமை.

5 திராட்சையின் கிளை போல், சபை
படர்கின்றதே,
ஒன்றாய், நிலைத்து, ஸ்தானத்தில்
கனிகள் தரும்;

6 சபையின் அங்கங்கள், கிறிஸ்தின்
பெரிதாக்கமாம்,
ஜீவன், வாழ்க்கையில் ஒன்றாக,
தம் படர்ச்சியாம்.

7 நிறைவு, பெருக்கம், நகல்,
தம் வெளியாக்கம்,
வளர்ச்சி, தொடர்ச்சி, திரள்,
அவர் படர்ச்சி.

8 சபை கிறிஸ்துவுக்காக, தம்
மீட்கப்பட்டோரால்
கிறிஸ்துவில் தேவன் நித்யமாய்
மகிமைப்பட.

9 கிறிஸ்துவும் சபையும் ஒன்றாய்,
தேவ இரகஸ்யம்,
மானிடத்துடன் தேவத்துவம்
சேர்ந்திணைதலாம்.