மேய்த்துப்பேணுதல்
திரட்டு 2
இரட்சிக்கப்பட்ட பிறகு
பாடம் ஒன்பது – தேவனுடைய பொருளாட்சி
1 தீமோ. 1:3—விசுவாசத்தினால் விளங்கும் தேவனுடைய பொருளாட்சிக்கு ஏதுவாயிராமல் தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும் முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கு (கிரே.)
எபே. 3:9-11—தேவன் நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவுக்குள் கொண்டிருந்த அநாதி தீர்மானத்தின்படியே, 10உன்னதங்களிலுள்ள துரைத்தனங்களுக்கும் அதிகாரங்களுக்கும் அவருடைய அநந்த ஞானமானது சபையின் மூலமாய் இப்பொழுது தெரியவரும்பொருட்டாக, 11இயேசு கிறிஸ்துவைக் கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ஆதிகாலங்கள் முதல் மறைந்திருந்த பொருளாட்சியின் இரகசியம் இன்னதென்று, எல்லாருக்கும் வெளிப்படையாகக் காண்பிக்கிறதற்கு…(கிரே.)
பொருளாட்சி என்ற சொல்லின் வரையறை
பொருளாட்சி என்பதற்கான கிரேக்க சொல் இரண்டு சொற்களால் ஆனது. ஒய்கோஸ் என்ற முதல் சொல்லின் அர்த்தம், “வீடு” அல்லது “இல்லம்,” இது ஒரு வீட்டை அல்லது வாழ்விடத்தைக் குறிக்கிறது; நோமோஸ் என்ற இரண்டாவது சொல்லின் அர்த்தம், “சட்டம்.” இவ்விரண்டு சொற்களும் ஒன்றாகச் சேர்க்கப்படும்போது, அதின் அர்த்தம், “வீட்டுச் சட்டம்,” ஆகும்; இது மேலும் விளக்கமாக, “வீட்டு நிர்வாகம்” என்று கூறப்படலாம். அது வீட்டு நிர்வாகமாக இருப்பதால், அது ஓர் ஏற்பாட்டை அல்லது திட்டத்தை மறைவாகக் காட்டுகிறது. வீட்டு நிர்வாகம், வீட்டு விதிமுறைகளை அமலாக்குவதற்காக இருப்பதால், இயல்பாகவே அதற்கு ஒரு திட்டத்துடன்கூடிய ஓர் ஏற்பாடு இருக்கிறது. அது ஓர் ஏற்பாடாக அல்லது திட்டமாக இருப்பதால், அதற்கு ஒரு குறிக்கோளும்கூட இருந்தாக வேண்டும். (CWWL, 1986, vol. 2, “The Economy of God and the Mystery of the Transmission of the Divine Trinity,” pp. 333-334)
தேவனுடைய வீட்டு மேலாண்மை, தேவனுடைய வீட்டு நிர்வாகத்திற்கான பகிர்ந்தளிப்பு, மற்றும் தெய்வீக பொருளாட்சி
[பொருளாட்சி என்பது] ஒரு வீட்டு மேலாண்மையை, வீட்டு நிர்வாகத்தை, வீட்டு அரசாங்கத்தைக் குறிக்கிறது, இந்த அர்த்தத்தின் அடிப்படையில், இது ஒரு திட்டத்தை, ஒரு பகிர்ந்தளிப்புத்திட்டத்தை, அல்லது நிர்வாகத்துக்கான (விநியோகத்துக்கான) ஒரு பொருளாட்சியைக் குறிக்கிறது; ஆகவே, அது ஒரு வீட்டுப் பொருளாட்சியாகவும் இருக்கிறது. (1 Tim. 1:4, footnote 3, Recovery Version)
தேவன் தம் திரியேகத்துவத்தில் தம்மையே தம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குள் பகிர்ந்தளிப்பதற்கு
தேவன் தம் திரியேகத்துவத்தில் தம்மையே, தம் மக்களுக்குள் எந்த வழியில் பகிர்ந்தளிக்கிறார்? இந்தப் பகிர்ந்தளித்தலுக்கு மூன்று படிகள் உள்ளன. முதலாவது, இது பிதாவாகிய தேவனிலிருந்து வருகிறது. பிதா ஊற்றாக, பிறப்பிடமாக இருக்கிறார். இரண்டாவது, இந்தப் பகிர்ந்தளித்தல், குமாரனாகிய தேவன் வழியாக நிகழ்கிறது, இவரே வழித்தடம். மூன்றாவது, தேவனுடைய பகிர்ந்தளித்தல், ஆவியானவராகிய தேவனில் இருக்கிறது, இவரே கருவி மற்றும் மண்டலம். பிதாவாகிய தேவன், குமாரனாகிய தேவன் வழியே, ஆவியாகிய தேவனில் என்ற இந்தப் படிகள் மூலம், தேவன் தம்மையே தம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குள் பகிர்ந்தளிக்கிறார்.
புதிய எருசலேமில் முழுநிறைவடையும், தேவனுடைய இராஜ்ஜியமாக சபையை உற்பத்திசெய்வதற்காக
தம் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குள் தம்மையே பகிர்ந்தளிப்பதற்கான தேவனுடைய புதிய ஏற்பாட்டுப் பொருளாட்சி, சபையை உற்பத்திசெய்வதற்காக இருக்கிறது (எபே. 3:10). இந்தப் பகிர்ந்தளிப்பு, தேவன் கிறிஸ்துவில் ஏற்படுத்திய அவரது நித்திய குறிக்கோளின்படி தேவனுடைய பன்முக ஞானம் வெளியரங்கமாக்கப்படுவதற்காக சபையைப் பிறப்பிக்கிறது (எபே. 3:9-11).
இராஜ்ஜியம் என்பது இன்றைய சபை வாழ்க்கை என்று 1 கொரிந்தியர் 4:17, மற்றும் 20 காண்பிக்கின்றன. “நான் எங்கும் எந்தச் சபையிலும் போதித்து வருகிறபிரகாரம் கிறிஸ்துவுக்குள்” இருக்கும் தன் வழிகளை வசனம் 17ல் பவுல் குறிப்பிடுகிறான். அதன்பின் அவன், “தேவனுடைய ராஜ்யம் பேச்சிலே அல்ல, பெலத்திலே உண்டாயிருக்கிறது” என்று வசனம் 20ல் கூறுகிறான். தேவனுடைய இராஜ்ஜியம் எவ்விடத்திலும் உள்ள சபையே என்றும், எவ்விடத்திலும் உள்ள சபையே இராஜ்ஜியம் என்றும் இந்த வசனங்கள் காண்பிக்கின்றன. சபை இங்கிருப்பதால், இராஜ்ஜியம் இங்கிருக்கிறது.
தேவனுடைய இராஜ்ஜியமாகிய சபைக்கு ஒரு முழு நிறைவேற்றம் இருக்கும், இந்த முழுநிறைவேற்றம், மூவொரு தேவனின் நித்திய வெளியாக்கத்திற்காகப் புதிய எருசலேமாக இருக்கும். “புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தைத் தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக் கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது” என்று வெளிப்படுத்தல் 21:2 கூறுகிறது. புதிய எருசலேம் என்பது, எல்லாத் தலைமுறைகளிலும் தேவனால் மீட்கப்பட்ட எல்லாப் பரிசுத்தவான்களாலுமான ஒரு ஜீவிக்கிற தொகுப்பாகும். அது கிறிஸ்துவின் மறுபாதியாக அவருடைய மணவாட்டியாகவும் (யோ. 3:29), தேவனுடைய வாழ்விடமாக அவருடைய பரிசுத்த நகரமாகவும் இருக்கிறது. (The Conclusion of the New Testament, pp. 17-18)
References: CWWL, 1986, vol. 2, “The Economy of God and the Mystery of the Transmission of the Divine Trinity,” ch. 2; The Conclusion of the New Testament, msg. 2
GOD’S ETERNAL ECONOMY
Ultimate Manifestation— God’s Eternal Purpose
God’s eternal economy
Is to make man the same as He is
In life and nature,
But not in the Godhead
And to make Himself one with man
And man one with Him
Thus to be enlarged and expanded in His expression
That all His divine, that all His divine
Attributes may be expressed in human virtues.